இரசலிங்கம்
இரசலிங்கம் (Rasalingam or Parada Lingam), சைவ சமயத்தின் சைவப் பிரிவில் இலிங்க வழிபாடு முதன்மையான இடத்தில் உள்ளது. வாய்ந்தது. கருங்கல், மரம், பாதரசம் போன்ற பொருட்களைக் கொண்டு மக்கள் இலிங்கம் செய்து வழிபட்டனர். பாதரசத்தால் செய்யப்பட்ட இலிங்கமே இரசலிங்கம் என்பர். தமிழ்நாட்டில் சித்தர்கள் திரவ நிலையில் உள்ள பாதரசத்தை கந்தகத்துடன் கலந்து திடமான நிலைக்கு கொண்டு வந்து இலிங்கம் செய்து வழிபட்டனர். சித்தர்கள் சிவ பூசைகளில் பாதரச இலிங்கத்தை வைத்து தியானம் செய்து வழிபட்டனர்.[1][2] தமிழ் சித்த மருத்துவத்தில் பாதரசம் சிவனின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.[3]
பாதரச லிங்கம் உள்ள கோயில்கள்
தொகு- வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்
- பிஜப்பூர் சிவன் கோயில்
- தியானலிங்கம், கோயம்புத்தூர்[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Parmeshwaranand, Swami (2001). "Linga". Encyclopedic dictionary of Puranas (1st) 5. New Delhi: Sarup & Sons. 1238–1243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176252263.
- ↑ Parad Shiva lingam பரணிடப்பட்டது 2012-06-06 at the வந்தவழி இயந்திரம்
- ↑ இரசவாதம் - ரசமணியும், ரசலிங்கமும்.
- ↑ மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில் பரணிடப்பட்டது 2008-02-10 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Rangaswamy and Sudhakshina. Transformation of the inner The Hindu 25 July 2003