இரச்சனா நாராயணன்குட்டி
இரச்சனா நாராயணன்குட்டி (Rachana Narayanankutty) என்பவர் ஒரு இந்திய நடிகையும், குச்சிப்புடி நடனக் கலைஞரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார், இவர் மலையாளத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றுகிறார்.[1] மழவில் மனோரமாவில் ஒளிபரப்பான மரிமயம் என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானார்.[2][3]
இரச்சனா நாராயணன்குட்டி | |
---|---|
பிறப்பு | 4 ஏப்ரல் 1983 திருச்சூர், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகை, குச்சிப்புடி நடனக் கலைஞர் தொலைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001-2003, 2011- தற்போது |
பெற்றோர் | நாராயணன்குட்டி (தந்தை) நாராயணிக்குட்டி (தாய்) |
வாழ்க்கைத் துணை | அருண் சதாசிவன் (தி. 2011; ம.மு. 2012) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇரச்சனா திருச்சூரில் நாராயணன்குட்டிக்கும் நாராயணிக்கும் மகளாக 1983 ஏப்ரல் 1[சான்று தேவை] அன்று பிறந்தார். இவருக்கு ஒரு இளைய சகோதரர் இருக்கிறார்.[4] இரச்சனா 2005 இல் வடக்கஞ்சேரியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார், வடகாஞ்சேரி ஸ்ரீ வியாசா என்எஸ்எஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[5] திருச்சூர் மாவட்டத்திலுள்ள தேவமாதா, நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்தார். தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் முன் நடன வகுப்புகள் எடுத்தார்.
இரச்சனா 2011 இல் அருண் சதாசிவனை மணந்தார்.[6] இது முற்றிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம், இவர்களுக்கு பிரச்சினைகள் இருந்தன. அருண் தன்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினார், இதனால் திருமணமான 19 நாட்களுக்குப் பிறகு கணவர் வீட்டை விட்டு வெளியேறினார் என்று ரச்சனா கூறினார்.[7]
திரைப்பட வாழ்க்கை
தொகு2001 ஆம் ஆண்டு தீர்த்ததானம் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.[8] படிப்பிற்குப் பிறகு, திருச்சூரில் உள்ள ரேடியோ மாங்கோ என்ற வானொலி நிறுவனத்தில் ஒலிபரப்பாளராக சேர்ந்தார், அங்கு ஒரு தயாரிப்பாளர் அவளைக் கண்டுபிடித்து மரிமயத்தில் நடிக்க வைத்தார். மழவில் மனோரமாவில் காமெடி பெசுடிவல் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்,ஏசியாநெட்டில் காமெடி எக்ஸ்பிரஸ் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். இவர் பிளவர்சு தொலைக்காட்சியில் சுடார் சேலஞ்ச் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Winning Hearts the merry way" இம் மூலத்தில் இருந்து 19 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181119132644/http://www.newindianexpress.com/entertainment/malayalam/2012/nov/28/winning-hearts-the-merry-way-428967.html.
- ↑ "രചന നാരായണൻ കുട്ടി സര്വ്വകലാവല്ലഭയായ അഭിനേത്രി". Mangalam Publications. Archived from the original on 12 November 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013.
- ↑ "Many still recognise me as Valsala of Marimayam: Rachana Narayanankutty" இம் மூலத்தில் இருந்து 20 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181120130814/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Many-still-recognise-me-as-Valsala-of-Marimayam-Rachana-Narayanankutty/articleshow/45257243.cms.
- ↑ "Rajanikanth is my brother: Rachana Narayanankutty". The Times of India. 20 November 2014 இம் மூலத்தில் இருந்து 10 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160510003345/http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Rajanikanth-is-my-brother-Rachana-Narayanankutty/articleshow/45216335.cms.
- ↑ "Archived copy". Archived from the original on 12 November 2013. பார்க்கப்பட்ட நாள் 12 November 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ rachananarayanankutty married with arun. YouTube. Archived from the original on 2021-12-11.
- ↑ . https://malayalam.samayam.com/tv/celebrity-news/actress-rachana-narayanankuttys-open-talk-about-her-divorce/articleshow/80764827.cms.
- ↑ "Malayalam News, Kerala News, Latest Malayalam News, Latest Kerala News, Breaking News, Online News, Malayalam Online News, Kerala Politics, Business News, Movie News, Malayalam Movie News, News Headlines, Malayala Manorama Newspaper, Breaking Malayalam News". ManoramaOnline. Archived from the original on 12 November 2013. பார்க்கப்பட்ட நாள் 12 November 2013.