இரஞ்சினி-காயத்ரி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இரஞ்சனி மற்றும் காயத்ரி (Ranjani and Gayatri) ஆகிய இருவரும் கருநாடக இசைக் கலைஞர்களாவர். பாடகர்களாகவும் வயலின் இசைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் கலை பங்களிப்புகளில் அரங்கப் பதிவுகள், தொலைக்காட்சி, வானொலி, இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் ஆகியவை அடங்கும். இவர்கள் வயலின் இரட்டையர்கள், குரல் இரட்டையர்கள், இசையமைப்பாளர்கள், கல்வியாளர்கள் என செயல்படுகின்றனர்.
இரஞ்சினி-காயத்ரி | |
---|---|
பிறப்பு | இரஞ்சனி: 1973 மே 12 காயத்ரி: 1976 மே 10 |
பிறப்பிடம் | மும்பை, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | இந்திய இசை குரலிசை |
இசைக்கருவி(கள்) | குரலிசை, வயலின் |
இணையதளம் | https://www.ranjanigayatri.in |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇரஞ்சனியும் காயத்ரியும் என். பாலசுப்பிரமணியன் [1] மற்றும் மீனாட்சி (ஒரு கருநாடக இசைப் பாடகர்) ஆகியோருக்கு பிறந்தனர். இந்திய பாரம்பரிய இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த இரஞ்சனி மற்றும் காயத்ரியின் இசை திறமைகள் மிகச் சிறிய வயதிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. காயத்ரிக்கு இரண்டரை வயது இருந்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட ராகங்களை அடையாளம் காண முடிந்தது. மேலும் ரஞ்சனியால் ஐந்து வயதிலேயே சிக்கலான தாள வடிவங்களை வரையறுக்க முடிந்தது. இவர்கள் முறையே ஒன்பது மற்றும் ஆறு வயதிலேயே சங்கீத பூசணம் பேராசிரியர் டி. எஸ். கிருட்டிணசாமி என்பவரிடமிருந்து மும்பை சண்முகானந்த சங்க வித்யாலயாவில் வயலின் பயிற்சியைத் தொடங்கினர்.
வயலின் இணைக் கலைஞர்களாக
தொகுஇரஞ்சனியும் காயத்ரியும் தங்கள் இளம் வயதை அடைவதற்கு முன்பே வயலின் கலைஞர்களாக தங்கள் இசை பயணத்தைத் தொடங்கினர். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி சபாக்களில் (இசை அமைப்புகளில்) நிகழ்ச்சிகளை நடத்தினர். இவர்கள் மேதைகளான தா. கி. பட்டம்மாள், மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, டி. விசுவநாதன் ஆகியோருக்கு இணைந்து வயலின் வாசித்துள்ளனர்.
குரல் கலைஞர்களாக
தொகுபத்ம பூஷன் சங்கீதா கலா ஆச்சார்யா பி. எஸ். நாராயணசாமியின் மாணவர்களான பின்னர் 1997 முதல் சகோதரிகள் குரல் இசை நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றனர்.[2] கருநாடக இசையின் மூலம் இந்தியாவின் கலாச்சார மற்றும் மொழியியல் பாரம்பரியத்தை வெளிக்கொணர இரஞ்சனி மற்றும் காயத்ரி சமசுகிருதம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடுகிறார்கள். [3]
இசையமைப்பாளர்களாக
தொகுஇரஞ்சனி, காயத்ரி இருவரும் இசையமைப்பையும் மேற்கொள்கிறார்கள். இவர்களின் இசை நிகழ்ச்சிகளின் முடிவில் இவர்கள் பாடும் பெரும்பாலான அபங்கங்கள் சகோதரிகளால் இசையமைக்கப்பட்டுள்ளன. பஜனைகள் உட்பட பல துக்கடா துண்டுகளையும் அமைத்துள்ளனர்.
விருதுகள்
தொகுசகோதரிகள் பெற்ற சில விருதுகள் மற்றும் அங்கீகாரங்களின் பட்டியல் இங்கே:
- 2016 இல் சங்கீத அகாதமியிலிருந்து இந்திரா சிவாசைலம் திறன் பதக்கத்தைப் பெற்றனர்
- 2015 ஆம் ஆண்டில் தியாக பிரம்ம ஞான சபாவிலிருந்து வாணி கலா சுதாகரா என்ற பட்டத்தைப் பெற்றனர்
- 2016 இல் சென்னை கலாச்சார அகாதமியின் சங்கீத கலா சிரோன்மணி விருது
- 2013 இல் பாரதிய வித்யா பவனிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது [4]
- சமசுகிருதி விருதுகள், 2008 ஆம் ஆண்டில் புது தில்லியில் சமசுகிருதி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது (கலை கலைத்துறையில் இவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது) [5]
- டிசம்பர் 2005 இல் சென்னையின் கார்த்திக் ஃபைன் ஆர்ட்சிலிருந்து "இசை பேரொளி" தலைப்பு.
- 2004 இல் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது (எழுத்தாளர் சிறீ கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நினைவாக கல்கி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது)[6]
- சங்கீத அகாடமியின் யோகம் நாகசாமி விருது
- தேசிய சிறப்பு விருது (மும்பை சண்முகானந்தா சபா)
- பத்து வயதிலிருந்தே இந்திய அரசின் திறமை தேடல் உதவித்தொகை பெறுபவர்கள்.
- வயலினுக்கான அகில இந்திய வானொலி தேசிய போட்டியில் முதல் பரிசு வென்றவர்கள்.
இசைத் தொகுப்புகள்
தொகுஇரஞ்சனி மற்றும் காயத்ரி ஆகியோர் பல்வேறு இசைத் தொகுப்புகளை கொண்டுள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Semmangudi Srinivasa Iyer passes away: the end of an era". Asian Tribune. Indo-Asian News Service. 1 October 2003. http://www.asiantribune.com/news/2003/11/01/semmangudi-srinivasa-iyer-passes-away-end-era-0. பார்த்த நாள்: 6 April 2011.
- ↑ Anima, P. (21 November 2008). "Sister act". The Hindu இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090826233949/http://www.hindu.com/fr/2008/11/21/stories/2008112150640300.htm. பார்த்த நாள்: 6 April 2011.
- ↑ http://www.dnaindia.com/lifestyle/interview-the-singing-sisters-2001708
- ↑ "Security Check Required". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-10.
- ↑ "'Virutham is our forte'" இம் மூலத்தில் இருந்து 10 மார்ச் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090310064118/http://www.hindu.com/fr/2009/03/06/stories/2009030651190200.htm. பார்த்த நாள்: 6 April 2011.
- ↑ "Sister act" இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090826233949/http://www.hindu.com/fr/2008/11/21/stories/2008112150640300.htm. பார்த்த நாள்: 6 April 2011.