சமஸ்கிருதி அருங்காட்சியகங்கள்

சமஸ்கிருதி அருங்காட்சியகங்கள் (Sanskriti Museums) புதுதில்லியில் அமைந்துள்ள மூன்று அருங்காட்சியகங்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும், அவை 'அன்றாட கலை அருங்காட்சியகம் ', இந்திய டெர்ராக்கோட்டா அருங்காட்சியகம் (பழங்குடி கலை) மற்றும் ஜவுளி அருங்காட்சியகம் ஆகியவை ஆகும். இது புதுதில்லியிலிருந்து 10 கிமீ தொலைவில் தெற்கே உள்ளது. இது ஆனந்தகிராமில் உள்ள எட்டு ஏக்கர் பரப்பளவில் ஒரு கிராமக் கலைஞர்கள் வளாகத்தில் அமைந்துள்ள சமஸ்கிருத கேந்திர வளாகத்திற்குள் அமைந்துள்ளது,[1][2][3]

சமஸ்கிருதி அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1990
அமைவிடம்சமஸ்கிருதி கேந்திரா, ஆனந்தகிராம், மெஹ்ராலி - குர்கான் சாலை
தில்லி, இந்தியா
ஆள்கூற்று28°32′18″N 77°11′05″E / 28.538457°N 77.184640°E / 28.538457; 77.184640
மேற்பார்வையாளர்ஓ.பி.ஜெயின்
வலைத்தளம்Official website

அமைவிடம் தொகு

தில்லியின் புறநகரில் உள்ள மெஹ்ராலி - குர்கான் சாலையில் உள்ள ஆயா நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் அமைந்துள்ள டெல்லி மெட்ரோ நிலையம் டெல்லி மெட்ரோவில் உள்ள அர்ஜன் கர் ஆகும். .

இந்த அருங்காட்சியகம் 1978 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். புதுதில்லியை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான சமஸ்கிருத அறக்கட்டளையின் கீழ் 1990 ஆம் ஆண்டில் ஓ.பி. ஜெயின் என்பவரால் [4] இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.

சமஸ்கிருத அறக்கட்டளை தொகு

 
அருங்காட்சியகத்தில் உள்ள, தமிழ்க் கிராமக் கடவுளானஐயனாரின் தோழர்களான சுடுமண் குதிரை சிற்பங்கள்
 
புது தில்லி

சமஸ்கிருதி பிரதிஷ்டான் அல்லது சமஸ்கிருத அறக்கட்டளை என்பது 1979 ஆம் ஆண்டில் டெல்லியில் அமைக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற பண்பாடு மற்றும் கலை மேம்பாட்டு அமைப்பாகும். இந்த அமைப்பில் ஓ.பி. ஜெயின், எல்.எம்.சிங்வி, டாக்டர் ஏ.எம்.சிங்வி மற்றும் சுதர்ஷன் அகர்வால் ஆகியோர் அறங்காவலர்களாக செயல்பட்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில், இது பெரும்பாலும் அதன் உறுப்பினர்களால் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட நிதி உதவியைக் கொண்டு செயல்பட்டு வந்தது. பின்னர் அது அரசாங்க நிதியுதவியையும், இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் ( ஐ.சி.சி.ஆர் ), மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற நிறுவனங்களிடமிருந்தும் நிதியைப் பெற ஆரம்பித்தது. அண்மையில் கார்ப்பரேட் துறையிலிருந்தும் நிதி பெறப்பட்டது.[5] தற்போதைய கேந்திர வளாகத்தின் கட்டுமானம் 1989 ஆம் ஆண்டில் தொடங்கியது. தற்போது இந்த அறக்கட்டளை அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான பட்டறைகளையும் நடத்தி வருகிறது. இங்கு கலைஞர்கள் தங்கி செயலாற்றும் வகையிலான குடியிருப்புகள், ஸ்டுடியோக்கள், ஒரு நூலகம், ஒரு ஆம்பிதியேட்டர் மற்றும் ஒரு கலைக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன.[6]

அறக்ககட்டளையானது அதன் முதல் திட்டமாக 1979 ஆம் ஆண்டில் 'சமஸ்கிருத விருதுகளை' நிறுவியது. இந்த விருதானது 20 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இலக்கியம், கலை, இசை, நடனம், நாடகம், பத்திரிகை மற்றும் சமூக /பண்பாடு ஆகிய துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு இது வழங்கப்படுகிறது. அடுத்தபடியாக அன்றாட கலை அருங்காட்சியகம் 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் அன்றாட பயன்பாட்டில் உள்ள பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகளுக்கிடையே பண்பாட்டு விழிப்புணர்வை மேம்படுத்துகின்ற வகையில் 'சமஸ்கிருத யாத்திரை' என்ற தலைப்பிலான பட்டறைகளையும் இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது. அதன் மூன்று மாத பயிற்சித்திட்டங்கள் யுனெஸ்கோ, ஆசியா இணைப்பு மற்றும் ஃபுல்பிரைட் பெல்லோஷிப் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றன.[5][7] அருங்காட்சியகவியலாளர் ஜோதிந்திர ஜெயின் இதன் அறங்காவலர் மற்றும் அறக்கட்டளையின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.[8]

இந்திய சுடுமண் சிற்ப அருங்காட்சியகம்' தொகு

இந்திய சுடுமண் சிற்ப அருங்காட்சியகத்தில் இந்தியாவின் பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட சுடுமண்ணால் ஆன கலைப்பொருள்கள், சிற்பங்கள் மற்றும் சிலைகள் போன்றவை அந்தந்த பழங்குடி கலைகளின் பின்னணியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[9]

அன்றாட கலை அருங்காட்சியகம் தொகு

 
சமஸ்கிருதி கேந்திர அருங்காட்சியகத்தில்வார்லி ஓவியம்

இது "அன்றாட கலைகள்" என்று அழைக்கப்படும் இப் பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் அன்றாட செயல்பாடுகள் குறித்தவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அன்றாட வீட்டுப் பொருள்களான விளையாட்டுப்பொம்மைகள், பாக்குவெட்டிகள், குடுவைகள், தட்டுகள், கரண்டிகள், மற்றும் வழிபாட்டிற்கான பொருள்கள் ஆகியவை உள்ளிட்டவை அடங்கும். அங்குள்ள கைவினைஞர்கள் தம் செயல்பாடுகள் மூலமாக இவை போன்றவற்றை கலைப் படைப்புகளாக மாற்றி அமைக்கின்றனர்.[4]

ஜவுளி அருங்காட்சியகம் தொகு

இங்கு ஒரு பிரிவாக ஜவுளி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய ஜவுளி பாரம்பரியம் தொடர்பான மிகச் சிறந்த கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் நேரம் தொகு

இந்த அருங்காட்சியகங்கள் திங்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகங்கள் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.

குறிப்புகள் தொகு

  1. "Sanskriti-Museums-Flier" (PDF). Sanskriti Museums. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  2. Sanskriti Kendra Terracotta & Metal Museum பரணிடப்பட்டது 2012-04-09 at the வந்தவழி இயந்திரம் Delhi Museums, Official website of Delhi Government.
  3. Sanskriti Foundation பரணிடப்பட்டது 2010-10-21 at the வந்தவழி இயந்திரம்
  4. 4.0 4.1 WHAT'S DOING IN; Delhi Travel, த நியூயார்க் டைம்ஸ், 30 November 2003. p. 2..
  5. 5.0 5.1 "Business Backs Art". Financial Express. 26 January 2003. http://www.financialexpress.com/news/business-backs-art/71610/0. பார்த்த நாள்: 12 February 2013. 
  6. Sanskriti Kendra
  7. Sanskriti Foundation, An Introduction
  8. Jyotidra Jain profile, Trustee-Director at Sanskriti Foundation]]
  9. Tales in terracotta: Set up in 1990, the Sanskriti Museum has contextualised and documented terracotta from all parts of the country, இந்தியன் எக்சுபிரசு, 15 May 2005.

வெளி இணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு