இரட்டை வளைய முடி
இரட்டை வளைய முடி (Double bowline) அல்லது வட்டத் திருப்ப வளைய முடி (round turn bowline) என்பது ஒரு தடவகை முடிச்சு ஆகும். பொதுவான பௌலைனின் ஒற்றைத் திருப்பத்துக்குப் பதிலாக இரட்டை பௌலைனில் வட்டத் திருப்பம் பயன்படுகிறது. இது பொதுவான பௌலைனிலும் கூடுதலான பாதுகாப்பான தடத்தை உருவாக்க உதவுகிறது.[1][2]
இரட்டை வளைய முடி | |
---|---|
பெயர்கள் | இரட்டை வளைய முடி, வட்டத் திருப்ப வளைய முடி, இரட்டை முடிச்சு வளைய முடி |
வகை | தடம் |
செயற்றிறன் | 70-75% |
தொடர்பு | வளைய முடிச்சு, நீர் வளைய முடி, Double sheet bend, இடைக்கயிற்று வளைய முடி |
பொதுப் பயன்பாடு | மலையேற்றம் |
ABoK |
|
பெயர்
தொகுகிளிபர்ட் ஆசிலி இதனை "இரட்டை வளைய முடி" என்று குறிப்பிட்டாலும், இப்பெயர் இன்னொரு முடிச்சான இடைப்பகுதி வளைய முடி என்பதற்கும் பொருத்தமாக அமையும். இதனால் சிலர் இம்முடிச்சுக்கு மேலே தரப்பட்டுள்ள மாற்றுப் பெயர்களில் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். இன்னொரு மூலத்தில், இரட்டை வளைய முடி என்னும் பெயர் நடுக்கயிற்றில் பொதுவான வளைய முடி முடிச்சிட்டுக் கட்டப்படும் தடத்தைக் குறிப்பிடப் பயன்பட்டுள்ளது.
கட்டும்முறை
தொகுபயன்பாடு
தொகு"இரட்டை வளைய முடி" மலையேறுவோர் அதிகமாகப் பயன்படுத்தும் இரண்டு முடிச்சுக்களில் ஒன்று. மற்றது எட்டு வடிவ முடிச்சு. விழுவதினால் முடிச்சில் அதிக சுமை சுமத்தப்பட்டாலும், இரட்டை பௌலைனை சுலபமாக அவிழ்த்துவிடலாம். எட்டு வடிவ முடிச்சில் இது கடினமானது என்பதால் இரட்டை பௌலைனுக்கு இது ஒரு சாதகமான இயல்பு ஆகும். ஆயினும் இம் முடிச்சு எட்டு வடிவ முடிச்சிலும் பாதுகாப்புக் குறைவானது.
குறிப்புகள்
தொகு- ↑ Ashley, Clifford W. (1944), The Ashley Book of Knots, New York: Doubleday, p. 186
- ↑ Dave Root (2006-11-17). "The Most Useful Rope Knots for the Average Person to Know: Single-Loop Knots". பார்க்கப்பட்ட நாள் 2009-04-06.