இரண்டாம் அக்பர் சா

இரண்டாம் அக்பர் சா (1760 - 1837) இந்தியாவை ஆண்ட முகலாயப் பேரரசர்களுள் கடைசிக்கு முந்தியவர் ஆவார். இவர் மிர்சா அக்பர் எனவும் அறியப்பட்டவர். இவர் 1806 ஆம் ஆண்டு முதல் 1837 ஆம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். இவர் பேரரசர் இரண்டாம் சா ஆலத்தின் இரண்டாவது மகனும், கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் சா சஃபாரின் தந்தையும் ஆவார்.

மேதகு'அபு நாசிர் முயின் உத்-தீன் முகம்மத் அக்பர் சா II சாகிப்-இ-கிரான்-இ-சானி பத்சா காசி, தித்துலார் முகலாயப் பேரரசர், டெல்லி அரசர்
முகலாயப் பேரரசின் பேரரசர்
சிமித்சோனிய நிறுவனத்தில் உள்ள இரண்டாம் அக்பர் சாவின் படம்
ஆட்சி19 நவம்பர் 1806 - 28 செப்டெம்பர் 1837
முடிசூட்டு விழா19 நவம்பர் 1806
முன்னிருந்தவர்சா ஆலம் II
பின்வந்தவர்பகதூர் சா II
மனைவி
  • முகலாய இளவரசி
வாரிசு(கள்)14 மகன்கள், பல பெண்மக்கள்
முழுப்பெயர்
'அபு நாசிர் முயின் உத்-தீன் முகம்மத் அக்பர் சா II
அரச குலம்தைமூரிய வம்சம்
தந்தைசா ஆலம் II
தாய்குட்சியா பேகம் (சா ஆலம் II இன் 3வது மனைவி)
அடக்கம்மகுரௌலி, செங்கோட்டை, தில்லி

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகப் பிரித்தானியரின் பலம் இந்தியாவில் அதிகரித்து இருந்ததனால், அக்பர் சாவின் உண்மையான அதிகாரம் மிகவும் குறைவாகவே இருந்தது. இவருடைய காலத்தில், 1835 ஆம் ஆண்டு, தன்னை முகலாயப் பேரரசரின் சார்பாளர் என்று கூறிக்கொள்வதை கிழக்கிந்தியக் கம்பனி நிறுத்திக் கொண்டதுடன், பேரரசர் சார்பில் நாணயங்களை வெளியிடுவதையும் நிறுத்திவிட்டது. இது தொடர்பில் கம்பனி வெளியிட்ட நாணயங்களில் இருந்த பாரசீகச் சொற்றொடர்களையும் நீக்கி விட்டது.

இவரது கல்லறை மகுரௌலி என்னும் இடத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி குருவான குதுப்புத்தீன் பக்தியார் காக்கி என்பவரின் தர்காவுக்கு அருகில், சலவைக்கல் கட்டிடம் ஒன்றில், பேரரசர்கள், முதலாம் சா ஆலம் என்றும் அழைக்கப்பட்ட முதலாம் பகதூர் சா, இரண்டாம் சா ஆலம் ஆகியோரின் கல்லறைகளுடன் அமைந்துள்ளது.

பின் தலைமுறை

தொகு

பேரரசர் "அக்பர் சா"வுக்கு நான்கு ஆண்மக்கள் இருந்தனர். இவர்களுள் ஒருவரான மிர்சா நாலி என்பர் பேரரசராவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இறுதியில் இன்னொரு மகனான பகதூர் சா சஃபார் தனது அறுபதாவது வயதில் பதவிக்கு வந்தார். சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்குப் பின்னர் பகதூர் சா பர்மாவிற்கு நாடுகடத்தப்பட்டார். பின் 1862ல் ரங்கூனிலே தனது 87 வயதில் மறைந்தார்.[1] பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். மிர்சா நாலி டெல்லியை விட்டுத் தப்பி வங்காளத்துக்கு ஓடினார். இவரும் இவரது ஆண்மக்களும், இரண்டு பெண் பிள்ளைகளும் இவருடனேயே பிரித்தானியருக்குப் பயந்து வாழ்ந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • The New Cambridge History of India. (இந்தியாவின் புதிய கேம்பிரிட்ச் வரலாறு)
  • Akbar Shah's Rule: Coins Of India. ("அக்பர் சா"வின் ஆட்சி: இந்திய நாணயங்கள்)

வெளியிணைப்புகள்

தொகு
  1. முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_அக்பர்_சா&oldid=3657582" இலிருந்து மீள்விக்கப்பட்டது