நவம்பர் 19
நாள்
(19 நவம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 19 (November 19) கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
- 636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார்.
- 1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 1862 – இலங்கை, காலியில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்ற கொழும்பு என்ற பயணிகள் கப்பல் மாலைதீவுகளுக்கு அருகே மினிக்காய் தீவில் மூழ்கியது.[1][2]
- 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கெட்டிசுபெர்க்கு உரையை நிகழ்த்தினார்.
- 1881 – உக்ரேனில் ஒடெசா நகரில் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.
- 1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பிய இராணுவம் பித்தோலா நகரைக் கைப்பற்றியதன் மூலம், மாக்கடோனியாவில் ஐந்து நூற்றாண்டு கால உதுமானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1932 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி, கோர்மொரன் ஆகிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆத்திரேலியக் கடற்படையினரும் 77 நாட்சி ஜெர்மனியக் கடற்படையினரும் உயிரிழந்தனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை: சோவியத் படையினர் வோல்கோகிராட் நகர் மீது மீள்தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
- 1943 – பெரும் இன அழிப்பு: நாட்சிகள் மேற்கு உக்ரைனில் லிவீவ் நகரில் இருந்த யானொவ்சுக்கா வதை முகாமை முழுமையாக அழித்தனர். குறைந்தது 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1946 – ஆப்கானித்தான், ஐசுலாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
- 1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ல்சு கொன்ராட், ஆலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர் என்ற பெயரினைப் பெற்றனர்.
- 1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது இலக்கைப் பெற்றார்.
- 1977 – போர்த்துகல் போயிங் விமானம் ஒன்று மதீராவில் விபத்துக்குள்ளாகியதில் 131 பேர் உயிரிழந்தனர்.
- 1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- 1984 – மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் உயிரிழந்தனர்.
- 1985 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
- 1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.
- 1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது.
- 2002 – கிரேக்க எண்ணெய்த் தாங்கிக் கப்பல் பிரெஸ்டிச் கலீசியா அருகே இரண்டாகப் பிளந்ததில், 76,000 கனமீ எண்ணெய் கசிந்தது.
- 2010 – நியூசிலாந்தில் பைக் ஆற்றுச் சுரங்கத்தில் நான்கு வெடிப்புகள் நிகழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
- 2013 – பெய்ரூத்தில் ஈரானியத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1600 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (இ. 1649)
- 1711 – மிகைல் இலமனோசொவ், உருசிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1765)
- 1775 – யொஃகான் இல்லிகெர், செருமானிய விலங்கியலாளர் (இ. 1813)
- 1828 – இராணி இலட்சுமிபாய், ஜான்சி பேரரசி (இ. 1858)
- 1831 – சேம்சு கார்ஃபீல்டு, அமெரிக்காவின் 20வது அரசுத்தலைவர் (இ. 1881)
- 1845 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1939)
- 1907 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1976)
- 1909 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-அமெரிக்கக் கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2005)
- 1914 – ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, இந்திய சுதந்திர போராட்ட செயற்பாட்டாளர், சீர்திருத்தவாதி (இ. 1982)
- 1917 – இந்திரா காந்தி, 3வது இந்தியப் பிரதமர் (இ. 1984)
- 1918 – என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட், இடச்சு வானியலாரும். கணிதவியலாளர் (இ. 2000)
- 1918 – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய மார்க்சியப் புலமையாளர் (இ. 1993)
- 1923 – சலில் சௌதுரி, இந்திய இயக்குநர், இசையமைப்பாளர் (இ. 1995)
- 1928 – தாரா சிங், இந்திய மற்போர் வீரர், நடிகர், அரசியல்வாதி (இ. 2012)
- 1932 – எலினார் பிரான்சிசு கெலின், அமெரிக்க வானியலாளர் (இ. 2009)
- 1933 – ஜேக் வெல்ச், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்
- 1936 – அரவிந்த் பட்நாகர், இந்திய வானியலாளர் (இ. 2006)
- 1938 – டெட் டேர்னர், அமெரிக்கத் தொழிலதிபர்
- 1939 – எஸ். எம். கார்மேகம், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2005)
- 1951 – க. பத்மநாபா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நிறுவனர் (இ. 1990)
- 1951 – சீனத் அமான், இந்தியத் திரைப்பட நடிகை
- 1954 – அப்துல் பத்தா அல்-சிசி, எகிப்தின் 6வது அரசுத்தலைவர்
- 1961 – விவேக், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 2021)
- 1961 – மெக் ரையன், அமெரிக்க நடிகை
- 1975 – சுஷ்மிதா சென், இந்தித் திரைப்பட நடிகை
- 1976 – அருண் விஜய், தமிழகத் திரைப்பட நடிகர்
- 1976 – ஜேக் டோர்சி, அமெரிக்கத் தொழிலதிபர், டுவிட்டரை ஆரம்பித்தவர்களில் ஒருவர்
- 1986 – சுவேதா மோகன், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
இறப்புகள்
- 498 – இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
- 1665 – நிக்கோலா போசின், பிரான்சிய-இத்தாலிய ஓவியர் (பி. 1594)
- 1806 – இரண்டாம் ஷா ஆலம், இந்தியாவின் 16-வது முகலாயப் பேரரசர் (பி. 1728)
- 1828 – பிராண்ஸ் சூபேர்ட், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1797)
- 1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியப் பிரதமர் (பி. 1892)
- 1975 – சாலமன் பிக்கெல்னர், உருசிய-சோவியத் வானியலாளர் (பி. 1921)
- 1982 – எஸ். ஏ. அசோகன், தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1931)
- 1984 – சி. வி. வேலுப்பிள்ளை, இலங்கை மலையக எழுத்தாளர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1914)
- 1998 – புச்சியித்தா தெத்துசுயா, சப்பானிய-அமெரிக்கக் கல்வியாளர் (பி. 1920)
- 2008 – எம். என். நம்பியார், தென்னிந்திய நடிகர் (பி. 1919)
- 2011 – பேசில் ட'ஒலிவேரா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1931)
- 2013 – பிரடெரிக் சேங்கர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1918)
- 2017 – சார்லஸ் மேன்சன், அமெரிக்க மதத் தலைவர், கொலையாளி (பி. 1934)
- 2019 – டி. எம். ஜயரத்ன, இலங்கையின் 14-வது பிரதமர் (பி. 1931)
- 2022 – ஏ. கே. கருணாகரன், இலங்கை கருநாடக இசைப் பாடகர் (பி. 1945)
சிறப்பு நாள்
- பன்னாட்டு ஆண்கள் நாள்
- உலகக் கழிவறை நாள்
- விடுதலை நாள் (மாலி)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ Pascal Kainic. "Total wreck of the East India, mail steamer Colombo".
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 19 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்