பெலே (Pelé) என்றழைக்கப்படும் எட்சன் அரண்டெசு டொ நாசிமெண்டோ (Edson Arantes do Nascimento; 23 அக்டோபர் 1940 – 29 திசம்பர் 2022) பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்டவர்.[1][2][3][4][5][6][7][8][9] காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பெலே. ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.[10][11] அவர் கொடுத்த மொத்த ஹாட்ரிக்குகள் 92. மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே காற்பந்தாட்ட வீரர்.[12] காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பெலெ 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.

பெலே
Pelé
1995 இல் பெலே
பிறப்புஎட்சன் அராண்டெசு டொ நாசிமெண்டோ
(1940-10-23)23 அக்டோபர் 1940
திரெசு கரக்கோயெசு, பிரேசில்
இறப்பு29 திசம்பர் 2022(2022-12-29) (அகவை 82)
மொரும்பி, சாவோ பாவுலோ, பிரேசில்
பணி
 • காற்பந்தாட்ட வீரர்
 • மாந்தநேயமிக்கவர்
உயரம்1.73 மீ
பெற்றோர்
 • யொவாவோ ரமோசு நாசிமெண்டோ
 • செலெசுட்டே அராண்டசு
துணைவர்சுகா மெனெகெல் (1981–1986)
வாழ்க்கைத்
துணை
 • ரோசுமேரி சொல்பி
  (தி. 1966; ம.மு. 1982)
 • அசிரியா செய்க்சாசு
  (தி. 1994; ம.மு. 2008)
 • மார்சியா அவோக்கி (தி. 2016)
பிள்ளைகள்7

Association football career
ஆடும் நிலை(கள்)முன்கள், நடுக்களத் தாக்குதல்
இளநிலை வாழ்வழி
1953–1956பவுரு
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1956–1974சாண்டோசு636(618)
1975–1977நியூயார்க் கொசுமசு64(37)
மொத்தம்700(655)
பன்னாட்டு வாழ்வழி
1957–1971பிரேசில்92(77)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர்
பதவியில்
1 சனவரி 1995 – 30 ஏப்பிரல் 1998
குடியரசுத் தலைவர்பெர்னாண்டோ கார்டோசோ
முன்னையவர்புதிய அமைச்சு
பின்னவர்ரஃபாயெல் கிரெசா (1999)

இளமை

தொகு

1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி பிரேசிலின் டிரெசு கோரகோயெசு (Tres Coracoes) என்ற பகுதியில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.[13]) தாமஸ் ஆல்வாஸ் எடிசனின் நினைவாக இவருக்கு எடிசன் என்ற பெயர் சூட்டப்பட்டது.[14][15][16][17] இவரது செல்லப்பெயர்தான் பெலே ஆகும்.[18] அவரது தந்தை தொழில்முறையான காற்பந்தாட்ட வீரராக இருந்தவர்.[16] அவரது முழங்காலில் காயம் ஏற்படவே அவர் காற்பந்தாட்டத்தை விட வேண்டிய நிலை ஏற்பட்டது. பெலேவுக்கு நான்கு வயதானபோது அவரது குடும்பம் பவுரு(Bauru) என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தது. பெலேயும் அந்த வட்டாரத்தில் வசித்த சிறுவர்களும் காலுறையில் செய்தித்தாள்களையத் திணித்து ஒரு பந்துபோல் செய்து அதனைக்கொண்டு காற்பந்து விளையாடி மகிழ்வர். காலை முதல் மாலை வரை விளையாடுவார்கள். பெலேயின் தந்தையே அவருக்கு காற்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுத்தந்தார். காற்பந்து ஆடாத நேரங்களில் பிறரது காலணிகளுக்கு பூச்சிடும் வேலை செய்தார் பெலே.[19]

பெலேயின் திறமை பவுரு நகர காற்பந்து குழுவில் அவருக்கு ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது.[20]<அடுத்த மூன்று ஆண்டுகளும் இளையோர் பிரிவில் வெற்றியாளர் விருதை வென்றது அந்தக்குழு.[21][22] அதன்பிறகு நிபுனுத்துவ காற்பந்தாட்டம் அவரை அழைத்தது. சான்டாஸ் குழுவில் சேர்ந்தார் பெலே."[21] சேர்ந்த முதல் ஆண்டிலேயே சாதனை அளவாக பதினேழு கோல்களைப் புகுத்தினார்.[23][24][24][25][26][27] அவரது அபாரத்திறன் 1958 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் தேசியக் குழுவில் இடம்பெற்றுத் தந்தது. அந்த ஆண்டு இறுதிப்போட்டியில் ஸ்வீடனை 2:5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முதன் முறையாக வென்றது பிரேசில்.[28] அந்த வெற்றிக்கு நடுநாயகமாக விளங்கியது பெலேயின் அபாரத்திறன்தான்.[29] உலகக் கிண்ணத்தை அவர் வென்றபோது அவருக்கு வயது பதினேழு.

திறன்கள்

தொகு
 
Maracanã.

திடல் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, கண கச்சிதமாக பந்தை தள்ளும் முறை, லாவகமாக இரண்டு மூன்று தற்காப்பு ஆட்டக்காரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தும் மந்திரம், குறி தவறாமல் பந்தை வலை சேர்க்கும் தந்திரம் என இவற்றால் காற்பந்து ரசிகர்களை கிறங்கச் செய்தார் பெலே. 1970 ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அபரிமிதமான திறன் காட்டி 4:1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை பெற உதவினார் பெலே. அந்த ஆட்டத்தில் அவர் தலையால் முட்டிப் போட்ட கோல்தான் மறக்க முடியாதது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பெலே.[30]

சிறந்த ஆட்டங்கள்

தொகு

பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற மறுநாள் 'தி சண்டே டைம்ஸ்' இந்த தலையங்கத்தை வெளியிட்டது. How do u Spell Pele?? G-O-D. பிரேசிலுக்கு மூன்று உலகக் கிண்ணங்களைப் பெற்றுத் தந்த பெலே 1970 ஆம் ஆண்டு தேசியக் குழுவிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து சாண்டோஸ் குழுவுக்கு ஆடினார். 1974 ஆம் ஆண்டு காற்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி காஸ்மாஸ் காற்பந்துக் குழுவின் தலைவர் தனது குழுவுக்காக விளையாடும்படி கேட்டுக்கொண்டார்.[31] பெலே தன் குழுவுக்கு ஆடினால் அமெரிக்காவில் காற்பந்தாட்ட மோகம் ஏற்படும் என்று அவர் நம்பினார். பெலேயும் இரண்டு ஆண்டுகள் அமெரிக்கர்களுக்கு தன் காற்பந்தாட்டாத் திறமையைக் காட்டி 1978 ஆம் ஆண்டு காற்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்திய பெருமை பெலேயையேச் சாரும். அவரது ஓய்வு அறிவிப்பு நிகழ்ச்சியில் 25 நாடுகளைச் சேர்ந்த 761 பத்திரிக்கையாளர்களும், சில நாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டு அவருக்குப் பிரியா விடை அளித்தனர்.

சாதனைகள்

தொகு

22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தினார் பெலே.[32][33] ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார். அவர் போட்டிருக்கும் மொத்த ஹாட்ரிக்குகள் 92. காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராக கருதப்படும் அவரை 'கருப்பு முத்து' என்றும் பத்திரிக்கையாளர்கள் அழைத்தனர். எங்கே வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை அவர் ஏற்றுக்கொண்டு விடுவாரோ? என்று அஞ்சிய பிரேசில் பெலேயைத் தேசியப் புதையலாக அறிவித்தது.[34] 1978 ஆம் ஆண்டு அவருக்கு அனைத்துலக அமைதி பரிசு வழங்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு முடிவதற்கு இருபது ஆண்டுகள் இருந்தபோதே பெலேவை அந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக அறிவித்தது அனைத்துலக ஒலிம்பிக் குழு.

1970 ல் லாகோஸில் பெலேவின் ஆட்டத்தை காண்பதற்காக அப்போது நைஜீரியாவில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டிருந்த இரண்டு குழுக்கள் 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்தன.[35]

உடல்நலமும் இறப்பும்

தொகு

1977 இல், பெலேயின் வலப்பக்க சிறுநீரகம் அகற்றப்பட்டதாக பிரேசிலின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.[36] 2017 திசம்பரில், மாஸ்கோவில் நடந்த 2018 உலகக் கோப்பைக்கான தெரிவு நிகழ்ச்சியில் சக்கர நாற்காலியில் தோன்றிய பெலே, அங்கு உருசிய அரசுத்தலைவர் பூட்டினுடனும், டீகோ மரடோனாவுடனும் புகைப்படம் எடுத்தார்.[37] 2019 இல், பெலேக்கு சிறுநீரகக் கல் அகற்றலுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது..[38] 2020 பெப்ரவரியில், பெலே தன்னந்தனியாக நடக்க முடியாமல் இருப்பதாகவும், அவரது இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை மறுவாழ்வு இல்லாதது என்றும் அவரது மகன் எடின்கோ கூறினார்.[39]

2021 செப்டம்பரில், பெலேயின் தனது பெருங்குடலின் வலது பக்கத்தில் உள்ள கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.[40] நவம்பர் 2022 இல், பெலே "பொது வீக்கத்துடன்" மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், இதயப் பிரச்சனைகள் மற்றும் அவரது வேதிச்சிகிச்சை எதிர்பார்த்த விளைவைக் கொண்டிருக்கவில்லை என்ற கவலையும் இருப்பதாக ஊடகங்கள் அறிவித்தன.[41][42]

2022 திசம்பரில், இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆல்பர்ட் ஐன்சுடீன் மருத்துவமனை, அவரது கட்டி மேம்பட்டுள்ளதாகவும், அவருக்கு "சிறுநீரக மற்றும் இதய செயலிழப்புகள் தொடர்பான அதிக கவனிப்பு" தேவைப்படுவதாகவும் கூறியது.[43] 2022 திசம்பர் 29 அன்று, பெலே தனது 82-ஆவது அகவையில், பெருங்குடல் புற்றுநோயின் ஒரு சிக்கலான பல உறுப்பு செயலிழப்பால் மருத்துவமனையில் இறந்தார்.[44]

மேற்கோள்கள்

தொகு
 1. http://www.fifa.com/worldfootball/news/newsid=1321917.html#what+they+said+about+pele பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம்
  -Bobby Moore: "Pele was the most complete player I've ever seen, he had everything. Two good feet. Magic in the air. Quick. Powerful. Could beat people with skill. Could outrun people. Only 5ft 8in tall, yet he seemed a giant of an athlete on the pitch. Perfect balance and impossible vision. He was the greatest because he could do anything and everything on a football pitch. I remember Saldhana the coach being asked by a Brazilian journalist who was the best goalkeeper in his squad. He said Pele. The man could play in any position."
  -Ferenc Puskas: “The greatest player in history was Di Stefano. I refuse to classify Pele as a player. He was above that." பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம்
  -Romario: "Messi has all the conditions to be the best, but first he has to beat Maradona, Romario and then eventually Pele."
  -Costa Pereira: “I arrived hoping to stop a great man, but I went away convinced I had been undone by someone who was not born on the same planet as the rest of us." பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம் -
  -Michel Platini: "There's Pele the man, and then Pele the player. And to play like Pele is to play like God."
  -Eusebio: "Pele played in an era which had so many great players and in that atmosphere he stood out above the others. He was the complete player in every aspect as well as being a kind human being. Cristiano Ronaldo is young yet, and has many years ahead of himself. But as of now, I do not see anyone who can compare with Pele"
  -Johan Cruyff: "Pele was the only footballer who surpassed the boundaries of logic." பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம்
  -Sir Bobby Charlton: “I sometimes feel as though football was invented for this magical player." பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம்
  -Tostao: "Pele was the greatest – he was simply flawless. And off the pitch he is always smiling and upbeat. You never see him bad-tempered. He loves being Pele." பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம்
  -Zico: "This debate about the player of the century is absurd. There's only one possible answer: Pele. He's the greatest player of all time, and by some distance I might add." பரணிடப்பட்டது 2012-03-28 at the வந்தவழி இயந்திரம்
  -Franz Beckenbauer: "Pele is the greatest player of all time. He reigned supreme for 20 years. All the others - Diego Maradona, Johan Cruyff, Michel Platini - rank beneath him. There's no one to compare with Pele." பரணிடப்பட்டது 2012-03-28 at the வந்தவழி இயந்திரம் -
  -Tarcisio Burgnich: "Before the match, I told myself that Pele was just flesh and bones like the rest of us. Later I realised I'd been wrong." பரணிடப்பட்டது 2012-03-28 at the வந்தவழி இயந்திரம்
  -Cesar Luis Menotti: "The best of all was Pele, who is a mixture of Di Stefano, Maradona, Cruyff and Leo Messi."
  -Gianni Rivera: "However, I do think there's someone who was even better(than Messi) and that's Pele. He used both feet on the pitch. He was as dangerous with his right as he was with his left. He was strong in the air as well, and created a lot of chances."
  -Hugo Gatti: "Pelé had the skin of a player, head, pace, everything. He was a panther dressed in white, I played with him. He entered to play in the last minute and he could turn the match. And the big difference is that Pelé on the field created fear, Maradona not...For me, it is Pelé, Alfredo Di Stefano and Maradona, in that order. I appreciate Diego, he is a great player. But from another planet was Pelé, not him."[தொடர்பிழந்த இணைப்பு]
  -Teófilo Cubillas: "I confronted him several times on the pitch and I think there will be noone like him." பரணிடப்பட்டது 2010-05-24 at the வந்தவழி இயந்திரம்
  -Mario Zagallo: "Pele represented everything in soccer because of what he has done on the pitch."
  -Cristiano Ronaldo: "Pele is the greatest player in football history, and there would only be one Pele in the world."
  -Geoffrey Green: "Di Stefano was manufactured on earth, Pele was made in heaven."
 2. "The Best of The Best". Rsssf.com. 19 June 2009. பார்க்கப்பட்ட நாள் 12 June 2010.
 3. "IFFHS' Century Elections". Rsssf.com. 30 January 2000. பார்க்கப்பட்ட நாள் 12 June 2010.
 4. "The Best x Players of the Century/All-Time". Rsssf.com. 5 February 2001. பார்க்கப்பட்ட நாள் 12 June 2010.
 5. Pele tops World Cup legends poll BBC News. Retrieved 12 June 2010
 6. http://www.goal.com/en/news/585/argentina/2012/03/25/2991317/tostao-messi-better-than-maradona-but-not-pele
 7. Over 50 per cent of Goal.com UK readers believe Brazilian legend Pele was a greater player than Diego Maradona Goal.com. Retrieved 1 May 2011
 8. World Soccer Players of the Century England Football Online Retrieved 1 May 2011
 9. THE LIST: The greatest players in the history of football Daily Mail. Retrieved 1 May 2011
 10. "Pelé, King of Futbol". ESPN. பார்க்கப்பட்ட நாள் 1 October 2006.
 11. "Dedico este gol às criancinhas". Gazeta Esportiva. Archived from the original on 18 டிசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 30 May 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 12. "Pele and Greaves to get World Cup winners medals". The Guardian (Paragraph 3). 25 November 2007. http://www.guardian.co.uk/football/2007/nov/25/newsstory.sport9. பார்த்த நாள்: 16 May 2012. 
 13. Pelé (2006). Pelé : the autobiography. London: Simon & Schuster UK Ltd. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7432-7582-8. பார்க்கப்பட்ட நாள் 2 October 2010. Shortly before I came along, there was another arrival in Três Corações: electricity. In order to celebrate this great improvement to our daily lives, Dondinho named me Edson, a tribute to Thomas Edison, the inventor of the lightbulb. In fact, on my birth certificate I am actually called Edison with an 'i', a mistake that persists to this day. I'm Edson with no 'i', but to my eternal annoyance quite often the 'i' appears on official or personal documents and time after time I have to explain why. As if that wasn't confusing enough, they got the date wrong on my birth certificate as well – it says 21 October. I'm not sure how this came about; probably because in Brazil we're not so fussy about accuracy. This is another mistake that carries on to this day. When I took out my first passport, the date was put in as 21 October and each time I have renewed it the date has stayed the same. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 14. "Un siglo, diez historias". BBC (in Spanish). BBC. பார்க்கப்பட்ட நாள் 21 June 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 15. "Edson Arantes Do Nascimento Pelé". யுனெசுகோ. பார்க்கப்பட்ட நாள் 21 June 2010.
 16. 16.0 16.1 Robert L. Fish; Pelé (1977). My Life and The Beautiful Game: The Autobiography of Pelé, Chapter 2. Doubleday & Company, Inc., Garden City, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-12185-7
 17. "From Edson to Pelé: my changing identity". Article by The Guardian (London). 13 May 2006. http://www.guardian.co.uk/football/2006/may/13/sport.comment9. பார்த்த நாள்: 1 October 2006. 
 18. Anibal Massaini Neto (Director/Producer), (2004). Pelé Eterno [Documentary film]. Brazil: Anima Produções Audiovisuais Ltda. International: Universal Studios Home Video.
 19. "Pelé biography". Article by Soccerpulse.com. பார்க்கப்பட்ட நாள் 1 October 2006.
 20. "Pele Speaks of Benefits of Futebol de Salão". International Confederation of Futebol de Salão. 24 May 2006. Archived from the original on 12 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 21. 21.0 21.1 Pelé (2006). Pelé: the autobiography. London: Simon & Schuster UK Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7432-7582-8. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 22. "Pelé". Vivendo Bauru. Archived from the original on 4 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
 23. (எசுப்பானியம்) "Competiciones, Copa Santander Libertadores". தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு. 18 May 2010. Archived from the original on 12 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 18 May 2010.
 24. 24.0 24.1 "Pelé". Encyclopaedia Britannica Online. Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 16 May 2012.
 25. Arantes, Edson (2007). My Life and the Beautiful Game: The Autobiography of Pele. Skyhorse Publishing. p. 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1602391963.
 26. "Pelé and Maradona - two very different number tens". FIFA.com. FIFA. Archived from the original on 28 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 27. "Football Legends". Footballegends.com. Archived from the original on 2 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 Sep 2011.
 28. 10 World Cup Gods! Our look at the best of the best in World Cup history Mail Online. Retrieved 10 May 2011
 29. Artilheiros da história Folha Online. Retrieved 6 May 2011
 30. Pelé (Brazilian Athlete) Encyclopædia Britannica. Retrieved 6 May 2011
 31. Happy 70th Birthday – A Video Tribute To Pelé Goal.com. Retrieved 5 May 2011
 32. The PELE Treasury – IOC Athlete of the 20th Century – The King of Football Retrieved 5 May 2011
 33. Diário Lance – www.lancenet.com.br. "// O Campeão da Rede". Lancenet. Archived from the original on 14 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 12 June 2010.
 34. "Biography — Edson Arantes "Pelé" Nascimento". Article on frontfoot.co.za. Archived from the original on 20 அக்டோபர் 2006. பார்க்கப்பட்ட நாள் 1 October 2006.
 35. "Ultimate Feats of Fitness". Article by Men's Fitness. 2006 இம் மூலத்தில் இருந்து 1 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080501192742/http://findarticles.com/p/articles/mi_m1608/is_2_22/ai_n16071178/pg_1. பார்த்த நாள்: 1 October 2006. 
 36. Guilherme Seto, Rafael Reis (28 November 2014). "Pelé tem apenas um rim desde que era jogador de futebol" (in pt). Folha de S.Paulo. http://www1.folha.uol.com.br/esporte/2014/11/1554686-pele-tem-apenas-um-rim-desde-que-era-jogador-de-futebol.shtml. 
 37. "Pele recovering in hospital after collapsing with exhaustion". The Telegraph இம் மூலத்தில் இருந்து 10 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220110/https://www.telegraph.co.uk/football/2018/01/19/pele-recovering-hospital-collapsing-exhaustion. 
 38. Gray, Melissa. "Pele recovering after kidney stone procedure in Brazil". CNN. https://edition.cnn.com/2019/04/13/sport/pele-hospital-kidney-stones-brazil/index.html. 
 39. "Pele: Brazil legend reluctant to leave his home, says son Edinho". Sky Sports. https://www.skysports.com/football/news/12027/11931070/pele-brazil-legend-reluctant-to-leave-his-home-says-son-edinho. 
 40. "Pelé: Brazil legend remains in intensive care as he recovers from surgery to remove tumour". Sky Sports. 11 September 2021. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
 41. "Pele: Brazil legend in hospital but daughter confirms no emergency". BBC Sport. 30 November 2022. பார்க்கப்பட்ட நாள் 30 November 2022.
 42. "Pelé é internado e passa por exames em São Paulo; quimioterapia não responde e situação preocupa (in Portuguese)". ESPN Brasil. 30 November 2022. பார்க்கப்பட்ட நாள் 30 November 2022.
 43. "Pele's cancer has advanced, says hospital" (in en-GB). BBC Sport. https://www.bbc.com/sport/football/64059854. 
 44. "Brazilian football icon Pele has died at the age of 82". Sky News. 29 December 2022. https://news.sky.com/story/brazilian-football-star-pele-has-died-at-the-age-of-82-12775924. பார்த்த நாள்: 29 December 2022. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெலே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலே&oldid=3628158" இலிருந்து மீள்விக்கப்பட்டது