சேம்சு கார்ஃபீல்டு

1881 இல் அமெரிக்காவின் அதிபர்

சேம்சு ஏபிராம் கார்ஃபீல்டு (James Abram Garfield, ஜேம்ஸ் கார்ஃபீல்ட்; நவம்பர் 19, 1831செப்டம்பர் 19, 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அரசுத்தலைவர் பதவியில் இருந்தார்.

சேம்சு ஏபிராம் கார்ஃபீல்டு
James Abram Garfield
ஐக்கிய அமெரிக்காவின் 20வது அரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1881 – செப்டம்பர் 19, 1881
துணை அதிபர்செஸ்டர் ஆர்தர் (1881)
முன்னையவர்ரதர்போர்ட் ஹேயிஸ்
பின்னவர்செஸ்டர் ஆர்தர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1831-11-19)நவம்பர் 19, 1831
ஒகையோ,  ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 19, 1881(1881-09-19) (அகவை 49)
நியூ ஜேர்சி,  ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்லுக்கிரேசியா
முன்னாள் கல்லூரிவில்லியம்சு கல்லூரி
வேலைவழக்கறிஞர்
கையெழுத்து

இவர் அதிபராக வர் முன்னர் அமெரிக்க இராணுவத்தில் மேஜர் ஜெனரலாகவும், அமெரிக்கக் கீழவையில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க அரசுத் தலைவர்களில் இவர் இரண்டாமவர் ஆவார் (முதலாமவர் ஆபிரகாம் லிங்கன்). குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2, 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார்.

சார்ல்சு கிட்டோ என்பவரால் அரசுத்தலைவர் கார்ஃபீல்டு சுடப்படல் (பிராங்க் லெசுலி வரைந்தது)[1][2]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேம்சு_கார்ஃபீல்டு&oldid=3357878" இலிருந்து மீள்விக்கப்பட்டது