இரண்டாம் இப்ராகிம் அதில் ஷா

பிஜப்பூரின் சுல்தான்

இரண்டாம் இப்ராகிம் அதில் ஷா (Ibrahim Adil Shah II; 1570 - 12 செப்டம்பர் 1627) பிஜப்பூர் சுல்தானகத்தின் அரசரும் அதில் சாகி வம்சத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இவரது ஆட்சியின் கீழ் வம்சம் அதன் மிகப்பெரிய காலகட்டத்தைக் கொண்டிருந்தது [2] இவர் அதன் எல்லையை தெற்கே மைசூர் வரை விரிவுபடுத்தினார். இவர் ஒரு திறமையான நிர்வாகியாகவும், கலைஞராகவும், கவிஞராகவும் [3] கலைகளின் தாராளமான புரவலராகவும் அறியப்படுகிறார். இவர் இசுலாத்தின் சன்னி மரபுவழிக்கு திரும்பினார். [4] ஆனால் கிறிஸ்தவம் உட்பட பிற மதங்களையும் ஆதரித்தார். இருப்பினும், இவரது ஆட்சியின் போது உயர் பதவியில் இருந்த சியா இசுலாமியர்கள் விரும்பத்தகாதவர்களாக மாறினர் [5] மேலும் 1590 இல், சியா வடிவத்தில் குத்பாவை வாசிப்பவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். [6] இவரது ஆட்சிக்குப் பிறகு, அதிகரித்த பலவீனம் முகலாய ஆக்கிரமிப்பையும் மராட்டிய மன்னர் சிவாஜியின் வெற்றிகரமான கிளர்ச்சியையும் அனுமதித்தது. இவர் பிஜப்பூர் தளபதி அப்சல் கானைக் கொன்று அவரது இராணுவத்தைத் தோற்கடித்தார். வம்சம் அனைத்து மத கலாச்சாரம் மற்றும் கலை ஆதரவின் பாரம்பரியத்தை விட்டுச்சென்றது. அதன் கட்டிடக்கலை எச்சங்கள் தலைநகரான பிஜப்பூரில் இன்றும் காணப்படுகின்றன.

இப்ராகிம் அதில் ஷா
சுல்தான்
இரண்டாம் இப்ராகிம் அதில் ஷாவின் உருவப்படம்
அதில் ஷா பேரரசர்
ஆட்சிக்காலம்1580–1627
முன்னையவர்முதலாம் அலி அதில் ஷா
பின்னையவர்முகமது அடில் ஷா
பிறப்புசுமார் 1570
இறப்பு1627 (அகவை 56–57)
பிஜப்பூர்
புதைத்த இடம்
இப்ராகிம் ரௌசா
துணைவர்சந்த் சுல்தானா
கமல் காத்துன்
தாஜ் சுல்தான்
சுன்ந்தர் மகால்
குழந்தைகளின்
பெயர்கள்
துர்வேசு பாதுசா
சுல்தான் சுலைமான்
முகமது அடில் ஷா
கிசர் ஷா
சாரா சுல்தானா
புர்கான்
சுல்தான் பேகம்
பாத்திமா சுல்தானா
பெயர்கள்
அப்துல் முசாப்ர் இப்ராகிம் அதில் ஷா ஜகத்குரு பாதுசா
அரசமரபுபிஜப்பூர் சுல்தானகம்
தந்தைதமாசுப்
தாய்காஜி பதி சாகிபா பேகம்
மதம்சுன்னி இசுலாம்[1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு
 
ஒரு தக்காண அரசவை அவர் அரசராக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், சுமார்.1600 கி.பி.
 
இரண்டாம் இப்ராகிம் அதில் ஷா

இப்ராகிம் அதில் ஷா (முதலாம் அலி அதில் ஷாவின் தந்தை) சன்னி பிரபுக்கள், சித்தியர்கள் மற்றும் தக்காணிகளுக்கு இடையே அதிகாரத்தைப் பிரித்தார். இருப்பினும், அலி அதில் ஷா ஷியாவை ஆதரித்தார். [7]

முடியாட்சி

தொகு

1580 ஆம் ஆண்டில் முதலாம் அலி அதில் ஷா இறந்த பிறகு, இராச்சியத்தின் பிரபுக்கள் இம்ரான் சைசாதா தக்மாசு அதில் ஷாவின் மகனும் முதலாம் அலி அதில் ஷாவின் மருமகனுமான இம்ரான் இப்ராகிமை அரசராக நியமித்தனர். இந்த நேரத்தில், இவர் ஒன்பது வயது சிறுவனாக இருந்தார். [8]

மேற்கோள்கள்

தொகு
  1. Farooqui Salma Ahmed, A Comprehensive History of Medieval India: Twelfth to the Mid-Eighteenth Century, (Dorling Kindersley, 2011), 176.
  2. A Textbook of Medieval Indian History. Primus Books.
  3. The Empire of the Great Mughals: History, Art and Culture. Reaktion Books.
  4. Medieval Islamic Civilization: An Encyclopedia. Psychology Press. 1 Nov 2005.
  5. Time in Early Modern Islam: Calendar, Ceremony, and Chronology in the Safavid, Mughal and Ottoman Empires. Cambridge University Press. 11 Feb 2013.
  6. The Sufis of Bijapur, 1300-1700: Social Roles of Sufis in Medieval India. Princeton University Press. 8 Mar 2015.
  7. Dr. Richard Pankhurst. "Great Habshis in Ethiopian/Indian history: History of the Ethiopian Diaspora, in India – Part IV". {{cite web}}: Missing or empty |url= (help)
  8. Ravi Rikhye (7 March 2005). "The Wars & Campaigns of Ibrahim Adil Shahi II of Bijapur 1576–1627". பார்க்கப்பட்ட நாள் 24 December 2006.

மேலும் படிக்க

தொகு
  • A Visit to Bijapur by H. S. Kaujalagi
  • "Avalokana" a souvenir published by the Government of Karnataka
  • Centenary souvenir published by the Bijapur Municipal Corporation

வெளி இணைப்புகள்

தொகு