இரண்டாம் பிருதிவிதேவன்
பிருத்வி-தேவன் ( Prithvi-deva II) இன்றைய இந்திய மாநிலமான சத்தீசுகரை கிபி 1135-1165 வரை ஆட்சி செய்த[1] இரத்தினபுரி காலச்சூரி மன்னர்களில் மிகவும் சக்திவாய்ந்தவராவார்.
இரண்டாம் பிருதிவிதேவன் | |
---|---|
மகாராசா | |
இரத்தினபுரி காலச்சூரி வம்சத்தின் 7வது மன்னன் | |
ஆட்சிக்காலம் | பொ.ச. 1135-1165 |
முன்னையவர் | இரண்டாம் இரத்னதேவன் (பொ.ச. 1120-1135) |
பின்னையவர் | இரண்டாம் ஜஜல்லதேவன் (பொ.ச.1165-1168) |
தந்தை | ஒருவேலை இரண்டாம் இரத்னதேவன் |
மதம் | இந்து சமயம் |
ஆட்சி
தொகுஇவரது தந்தையும் புகழ்பெற்ற அரசனுமான இரண்டாம் இரத்னதேவன், கீழைக் கங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கனை தோற்கடித்தார். இவரும் கீழைக் கங்க அரசனான ஏழாம் கர்மதேவனைத் தோற்கடித்தார்.[2] கர்மதேவன் இவருக்கு எதிராக ஒரு மோசமான தோல்வியை சந்தித்தார். [3] திரிபுரியின் காலச்சூரி மன்னன், செயசிம்மன், இவர் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்று தோல்வியடைந்தார்.[4] சிவ்ரிநாராயணன் என்ற இடத்தில் ஒரு போர் நடந்தது. அதில் செயசிம்மன் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது.[4]
பிருத்விதேவனின் பிலாய்கர் செப்புத் தகடுகள்
தொகுமத்தியப் பிரதேசத்தில் இருந்த சத்தீசுகர் பிரிவின் ராய்ப்பூர் மாவட்டத்தின், முன்னாள் பிலாய்கர் ஜமீந்தாரியின் தலைமை நகரமான பிலாய்கரில் 1945இல் இரண்டு செப்புத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இவரைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.[5]
சான்றுகள்
தொகு- ↑ V. V. Mirashi 1957, ப. 503.
- ↑ "ANANGABHIMADEVA III(1211-1238 A. D.)" (PDF). www.shodhganga.inflibnet.ac.in. p. 27. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
- ↑ "ANANGABHIMADEVA III(1211-1238 A. D.)" (PDF). www.shodhganga.inflibnet.ac.in. p. 27. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
- ↑ 4.0 4.1 V. V. Mirashi 1957, ப. 496.
- ↑ Mirashi, Vasudev Vishnu (21 August 2011). CORPUS INSCRIPTIONIUM INDICARIUM VOL IV PART 2: INSCRIPTIONS OF THE KALACHURI-CHEDI ERA (Paperback ed.). Nabu Press. pp. 57–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1175755338. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.