இரண்டாம் வாக்பதிராஜா
இரண்டாம் வாக்பதிராஜா (Vakpatiraja II)(ஆட்சி 1026-1040 பொ.ச.) ஷகாம்பரி சாஹமானா வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.
இரண்டாம் வாக்பதிராஜா | |
---|---|
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | சுமார் 1026-1040 பொ.ச. |
முன்னையவர் | மூன்றாம் கோவிந்தராசன் |
பின்னையவர் | வீர்யராமன் |
அரசமரபு | சாகம்பரியின் சௌகான்கள் |
வாக்பதி தனது தந்தை மூன்றாம் கோவிந்தராசனுக்குப் பிறகு சகமான மன்னரானார். [1] பிரபந்த-கோசம் இவரை "வல்லபன்" என்று அழைக்கிறது. [2]
பிருத்விராஜ விஜயத்தின் கூற்றுப்படி, வாக்பதி அகாதாவின் ஆட்சியாளரான அம்பாபிரசாதாவை தோற்கடித்து கொன்றார் (நவீன அகர் என அடையாளம் காணப்பட்டது). வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங், அம்பாபிரசாதாவை குகில ஆட்சியாளர் அமரபிரசாதாவுடன் அடையாளப்படுத்துகிறார். [3]
சுர்ஜனா-சரிதம், ஹம்மிர-காவியம் மற்றும் பிரபந்த-கோசம் போன்ற பிற்கால நூல்கள் வாக்பதி, மால்வாவின் பரமார மன்னன் போஜனை தோற்கடித்ததாகக் கூறுகின்றன. இந்த ஆதாரங்கள் மோதல் எனக் கூறப்படும் சில கற்பனையான விவரங்களையும் வழங்குகின்றன. இருப்பினும், இந்த கூற்று நம்பகமானதாக இல்லை. [4]
வாக்பதிக்குப் பிறகு இவரது மகன் வீர்யராமன், போஜனால் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, சாமுண்டராசன் சகமான சிம்மாசனத்தில் ஏறினார். வரலாற்றாசிரியர் ஆர்.பி.சிங்கின் கூற்றுப்படி, வீரராமனும் சாமுண்டராசனும் வாக்பதியின் மகன்கள் ஆவர். [5] இருப்பினும், வரலாற்றாசிரியர் தசரத சர்மா, மூவரையும் மூன்றாம் கோவிந்தராசனின் மகன்களாகக் கருதுகிறார். [2]
சான்றுகள்
தொகு- ↑ R. B. Singh 1964, ப. 123.
- ↑ 2.0 2.1 Dasharatha Sharma 1959, ப. 34.
- ↑ R. B. Singh 1964.
- ↑ Dasharatha Sharma 1959.
- ↑ R. B. Singh 1964, ப. 124.
உசாத்துணை
தொகு- Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.