இரண்டாம் ஷாஜகான்

முகலாய பேரரசர்

இரண்டாம் ஷாஜகான் (Shah Jahan II) (சூன் 1696 - 19 செப்டம்பர் 1719)) 1719 ஆம் ஆண்டில் சில காலம் பன்னிரண்டாவது முகலாயப் பேரரசராக இருந்தவர். 17 செப்டம்பர் 1719 அன்று காசநோயால் இறக்கும் வரை பேரரசராக பதவி வகித்தார்.[1]

ரஃபி-உத்-தௌலா
رفیع الدوله

பாதுஷா
அல்-சுல்தான்-அல்-ஆசம்
ரஃபி-உத்-தௌலா
12வது முகலாய அரசர்
ஆட்சிக்காலம்6 ஜூன் –செப்டம்பர் 1719
முடிசூட்டுதல்8 ஜூன் 1719
முன்னையவர்ரஃபி-உத்-தராஜத்
பின்னையவர்முகம்மது ஷா
இரண்டாம் ஜஹாங்கீர் (பட்டம் மட்டும்)
பிறப்புரஃபி-உத்-தௌலா
ஜூன் 1696
முகலாயப் பேரரசு
இறப்பு18 செப்டம்பர் 1719(1719-09-18) (அகவை 23)
பித்யாபூர், பத்தேப்பூர் சிக்ரி அருகே, முகலாயப் பேரரசு (நவீன உத்தரப் பிரதேசம், இந்தியா)
புதைத்த இடம்
புது தில்லியிலுள்ள குத்புதீன் பக்தியார் காக்கி தர்கா
பெயர்கள்
மிர்சா ரஃபி-உத்-தின் முகமது ரஃபி-உட்-தௌலா இரண்டாம் ஷாஜஹான்
பட்டப் பெயர்
இரண்டாம் ஷாஜகான் (பாரசீக மொழியில்: شاه جهان دوم)
மரபுமுகலாய வம்சம்
அரசமரபுதைமூர் வம்சம்
தந்தைரஃபி-உஷ்-ஷான்
மதம்சுன்னி இசுலாம் (ஆனஃபி)

சையத் சகோதரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இவர் 6 சூன் 1719-இல் பதினோராவது முகலாயப் பேரரசர் ரஃபி-உத்-தராஜத்துக்குப் பிறகு பதவியேற்றார். இரண்டாம் ஷாஜகான் சையத் சகோதரர்களுக்கு ஒரு முக்கிய நபராகவும் பணியாற்றினார்.[2]

சொந்த வாழ்க்கை

தொகு

இரண்டாம் ஷாஜகான் ரஃபி உத் தௌலாவாகப் பிறந்தார். இவர் ரஃபி-உஷ்-ஷானின் இரண்டாவது மகனும் முதலாம் பகதூர் சாவின் பேரனும் ஆவார்.[3] இவரது சரியான பிறந்த தேதி தெரியவில்லை. ஆனால் இவர் தனது சகோதரர் ரஃபி உத்-தராஜத்தை விட பதினெட்டு மாதங்கள் மூத்தவர் என்று நம்பப்படுகிறது. மேலும் இவர் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா, இவருக்கு குழந்தை இருந்ததா இல்லையா என்பதும் தெரியவில்லை.[4]

ஆட்சி

தொகு
 
இரண்டாம் ஷாஜகானின் நாணயம்

1719 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இரண்டாம் ஷாஜகான் அரியணை ஏறினார். இவரது இளைய சகோதரர் ரஃபி உத்-தராஜத் காச நோயால் இறந்த பிறகு இவரது முடிசூட்டு விழா செங்கோட்டையின் திவான்-இ-காஸில் நடைபெற்றது. இரண்டாம் ஷாஜகான் என்ற பட்டத்தையும் இவர் பெற்றார்.[3]

இவரது இளைய சகோதரரைப் போலவே, இரண்டாம் ஷாஜகானும் சையத் சகோதரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.[5] இவரது பெயர் குத்பாவில் முதல் முறையாக ஜூன் 13 அன்று வாசிக்கப்பட்டது. ஜூன் 11 அன்று திவான்-இ-ஆமில் இவரது முதல் தோற்றம் இருந்தது. சையத் சகோதரர்களில் எவரேனும் ஒருவர் இல்லாமல், இவர் எந்த பிரபுக்களையும் சந்திக்கவோ அல்லது வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை.[3]

இறப்பு

தொகு

இரண்டாம் ஷாஜகான் தனது தம்பியைப் போலவே காசநோயால் பாதிக்கப்பட்டார். ஒரு ஆட்சியாளரின் கடமைகளைச் செய்ய உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியற்றவராக இருந்தார். 1719 செப்டம்பர் 17 அன்று பித்யாபூரில் இறந்தார்.[6] தில்லியில் உள்ள மெக்ராலியில் உள்ள குத்புதீன் பக்தியார் காக்கியின் தர்காவில் ரஃபி உத்-தராஜத்தின் அருகில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.[7]

பதினெட்டாம் நூற்றாண்டின் அரசவை வரலாற்றாசிரியரான முகம்மது காடி கம்வார் கான், இரண்டாம் ஷாஜகான் சையத் சகோதரர்களால் நஞ்சு வைத்து கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால் வரலாற்றாசிரியர் வில்லியம் இர்வின் இதை மறுத்தார். அபினி உட்கொள்வதை நிறுத்தியதால் இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்றும், மேலும் ஷாஜகானின் மரணத்தால் சையத் சகோதர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும், இவர் இறந்தது சையத் சகோதரர்களில் ஒருவரான கம்வார் கானை மிகவும் வருத்தப்பட வைத்தது என்றும் கூறினார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Chhabra, G. S. (1971). Advanced Study In The History Of Modern India Vol. 1 (1707–1831). New Delhi: Sterling Publishers. p. 5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2023.
  2. Mohammad Yasin. Upper India Publishing House. 1958. p. 18.
  3. 3.0 3.1 3.2 Irvine 1921, ப. 420.
  4. Irvine 1921, ப. 432.
  5. Chandra 2005, ப. 483.
  6. Mehta 2005, ப. 24.
  7. Irvine 1921, ப. 430.
  8. Irvine, William (1922). Later Mughals vol.1. Calcutta: M.C. Sarka. pp. 430–431. பார்க்கப்பட்ட நாள் 12 June 2023.

நூல் பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஷாஜகான்&oldid=3907705" இலிருந்து மீள்விக்கப்பட்டது