இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
இரத்தினகிரி பாலமுருகன் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இரத்தினகிரி கீழ்மின்னல் புறநகர்ப் பகுதியின் திருமணிகுண்டத்தில் உள்ள முருகன் (கார்த்திகேயா) கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் ஆகும்.[1][2] இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, மேலும் 14 ஆம் நூற்றாண்டின் கவிஞர் அருணகிரிநாதரால் குறிப்பிடப்பட்டது. மலை இருக்கும் இடத்தில் முருகன் இருக்கிறார் என்று கூறப்படும் பண்டைய இந்து மத நூல்களின்படி, இது ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது.[3]
இரத்தினகிரி பாலமுருகன் கோயில் | |
---|---|
பாலமுருகன் கோயில், இரத்தினகிரி கீழ்மின்னல், இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: | 12°56′28″N 79°14′42″E / 12.9412°N 79.2451°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராணிப்பேட்டை |
அமைவிடம்: | இரத்தினகிரி கீழ்மின்னல் |
ஏற்றம்: | 215.09 m (706 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பாலமுருகன் |
குளம்: | உண்டு |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடிக் கார்த்திகை, கார்த்திகை விளக்கீடு, கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், ஐப்பசி அன்னாபிசேகம், பங்குனி உத்தரம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
வரலாறு | |
கட்டிய நாள்: | 14ஆம் நூற்றாண்டு |
கோவிலில் உள்ள முருகன் சிலை மற்றும் குரு சுவாமி பாலமுருகன் அடிமை (பிறப்பு 1941) தெய்வத்தின் வெளிப்பாடுகள் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.[3]
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 215.09 மீ. உயரத்தில், (12°56′28″N 79°14′42″E / 12.9412°N 79.2451°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இரத்தினகிரி கீழ் மின்னல் என்ற பகுதியில் சிறு குன்றின் மீது இக்கோயில் அமைந்துள்ளது.
சிறப்புகள்
தொகுஆடிக் கிருத்திகை அன்று இரத்தினங்களால் ஆன ஆடையால் மூலவர் பாலமுருகன் அலங்கரிக்கப்படுகிறார். ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று மூலவர் பாலமுருகனுக்கு அன்னாபிசேகம் நடைபெறுகிறது.[4][5] கந்த சஷ்டி விழா நடைபெறும் போது பாலமுருகனுக்கு நவரத்தின அங்கி அணிவித்து சிறப்பு செய்யப்படுகிறது.[6]
அறுங்கோண வடிவில் தெப்பக்குளம் ஒன்று உருவாக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 12ஆம் நாள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.[7]
திருவிழாக்கள்
தொகுஆடிக் கார்த்திகை, கார்த்திகை விளக்கீடு, கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஐப்பசி அன்னாபிசேகம், தைப்பூசம் மற்றும் பங்குனி உத்தரம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.
இதர தெய்வங்கள்
தொகுதுர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நந்தி மற்றும் சிம்ம வாகனங்களுடன் வாராகி, கற்பக விநாயகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[8]
பராமரிப்பு
தொகுதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ "ராணிப்பேட்டை மாவட்டத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா? ஸ்பாட்ஸ் இதோ! - தமிழ்நாடு". IBC Tamilnadu. பார்க்கப்பட்ட நாள் 2024-11-08.
- ↑ 3.0 3.1 "Arulmigu Balamurugan Tirukkovil, Rathinagiri". murugan.org. பார்க்கப்பட்ட நாள் 22 June 2021."Arulmigu Balamurugan Tirukkovil, Rathinagiri". murugan.org. Retrieved 22 June 2021.
- ↑ தி.ஜெ.ரா. (2020-05-02). "அருள்மிகு பாலமுருகன் கோயில், ரத்தினகிரி". Holy Temples (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-08.
- ↑ மாலை மலர் (2020-11-30). "குழந்தை பாக்கியம் அருளும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்- வேலூர்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-08.
- ↑ Lakshmipathi (2024-11-06). "ரத்தினகிரி கோயிலில் 4ம் நாள் கந்த சஷ்டி விழா நவரத்தின அங்கி அணிந்து பாலமுருகன் அருள்பாலிப்பு". Dinakaran (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-08.
- ↑ E. T. V. Bharat (2023-02-12). "புகழ்பெற்ற ரத்தினகிரி பாலமுருகன் ஆலய தெப்பக்குளம் திறப்பு விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2024-11-08.
- ↑ "Balamurugan Temple : Balamurugan Balamurugan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-08.
- ↑ "Arulmigu Subramaniaswamy Alias Balamurugan Temple, Rathinagiri, Keelminnal - 632517, Ranipet District [TM001358].,SUBRAMANIYASWAMY,VALLI DEIVANAI". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-09.