இரமேசு பரம்பத்து

இந்திய அரசியல்வாதி

இரமேசு பரம்பத்து (Ramesh Parambath) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1961 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 15 ஆவது புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். பாண்டிச்சேரியின் மாகே தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். [2]

இரமேசு பரம்பத்து
Ramesh Parambath
சட்டமன்ற உறுப்பினர், புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2021 (2021-05-26)
முன்னையவர்வி. இராமச்சந்திரன்
தொகுதிமாகே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 மே 1961 (1961-05-23) (அகவை 63)
பள்ளூர், மாகே, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சயன இரமேசு
பிள்ளைகள்2
பெற்றோர்
  • மறைந்த பி. பி. கண்ணன்
  • மறைந்த கே. பாரதி
வாழிடம்பள்ளூர்
முன்னாள் கல்லூரிமகாத்மா காந்தி அரசுக் கலைக் கல்லூரி

அரசியல் வாழ்க்கை

தொகு

இரமேசு பரம்பத்து கேரள மாணவர் சங்கத்தின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மாகே மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரியில் கேரள மாணவர் சங்கத்தின் பிரிவுத் தலைவராக இருந்தார். 1984-85 மற்றும் 1985-86 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி மாகே கல்லூரி ஒன்றியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 முதல் 1997 ஆம் ஆண்டு வரை மாகே வட்டார இளைஞர் காங்கிரசு குழுவின் தலைவராக இருந்தார். புதுச்சேரி மாவட்ட காங்கிரசு குழு உறுப்பினராகவும் இருந்தார். 2006 ஆம் ஆண்டு முதல் முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாகே நகரசபையின் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [3] [4] தற்போது மாகே மண்டலத்தின் வட்டார காங்கிரசு குழுவின் தலைவராக உள்ளார். [5]

2021 புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில், இடதுசாரி சனநாயக முன்னணி வேட்பாளரான என். அரிதாசன் மாசுட்டரை தோற்கடித்து, கடுமையான போட்டியில் காங்கிரசுக்கு மாகே சட்டமன்றத் தொகுதியை மீண்டும் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இரமேசு பரம்பத்து பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள பள்ளூரில் 1961 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதியன்று பரம்பத்து கண்ணன் மற்றும் கே.பாரதிக்கு மகனாகப் பிறந்தார். வணிகவியலில் இவர் இளநிலை பட்டம் பெற்றிருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "2021 Election Results Mahe Constituency". பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.
  2. "Member of Puducherry Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 19 June 2021.
  3. "Congress Bags Two Municipal Chairmen Posts in Pondy". பார்க்கப்பட்ட நாள் 4 July 2006.
  4. "Ramesh Parambath is the UDF candidate in Mahe". பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  5. "PCC appoints President for Mahe Block Congress committee". https://www.indiatoday.in/pti-feed/story/pcc-appoints-president-for-mahe-block-congress-committee-649100-2016-11-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமேசு_பரம்பத்து&oldid=3957952" இலிருந்து மீள்விக்கப்பட்டது