இராகவேந்திர சிங் சவுகான்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இராகவேந்திர சிங் சவுகான் (Raghvendra Singh Chauhan)(பிறப்பு திசம்பர் 24, 1959 ) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, உத்தராகண்டு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும்[1] பணியாற்றியுள்ளார்.[2]
மாண்புமிகு தலைமை நீதிபதி இராகவேந்திர சிங் சவுகான் Raghvendra Singh Chauhan | |
---|---|
தலைமை நீதிபதி, உத்தராகண்டு உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சனவரி 2021 | |
பரிந்துரைப்பு | எஸ். ஏ. பாப்டே |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
தலைமை நீதிபதி, தெலங்காணா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 22 ஜுன் 2019 – 6 சனவரி 2021 | |
பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
பொறுப்பு தலைமை நீதிபதி, தெலங்காணா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 3 ஏப்ரல் 2019 – 21 ஜூன் 2019 | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | தோ. பா. இராதகிருஷ்ணன் |
நீதிபதி, தெலங்காணா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 8 நவம்பர் 2018 – 2 ஏப்ரல் 2019 | |
பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம் | |
பதவியில் 10 மார்ச் 2015 – 7 நவம்பர் 2018 | |
பரிந்துரைப்பு | எச். எல். தத்து |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
நீதிபதி இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 13 ஜூன் 2005 – 9 மார்ச் 2015 | |
பரிந்துரைப்பு | இரமேசு சந்திர லகோதி |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 திசம்பர் 1959 |
நீதிபதி பணி
தொகுசவுகான் 1959ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24ஆம் நாள் பிறந்தார். இவர் பி. ஏ., எல். எல். பி. பட்டங்கள் பெற்றுள்ளார். 1983 நவம்பர் 13 அன்று இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். குற்றவியல் மற்றும் சேவை விடயங்கள் இவரது சிறப்புத் துறை உள்ளது.
இவர் 13 ஜூன் 2005 அன்று இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், ஜனவரி 24.2008 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். 2015 மார்ச் 10 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதல் பெற்றார். மீண்டும் 8 நவம்பர் 2018 அன்று தெலுங்காணா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
சவுகான், ஏப்ரல் 3, 2019 அன்று தெலுங்காணா உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 22 ஜூன் 2019 அன்று, தெலுங்காணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
உத்தராகண்டு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 31 டிசம்பர் 2020 அன்று நியமிக்கப்பட்ட சவுகான், ஜனவரி 7, 2021 அன்று பதவியேற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raghvendra Singh Chauhan to take over as ACJ of Telangana HC". Bar & Bench. 2019-03-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-09.
- ↑ "Telangana high court bids farewell to its first Chief Justice - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-04-09.