இராசாசி மேத்யூ தாமசு

இந்திய அரசியல்வாதி

இராசாசி மேத்யூ தாமசு (Rajaji Mathew Thomas) ஓர் பத்திரிகையாளரும் மற்றும் திருச்சூரைச் சேர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதியும் ஆவார். இவர் 2006 முதல் 2011 வரை ஒல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4] அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இவர், அதன் தேசிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 முதல் 1996 வரை புடாபெசுட்டை தளமாகக் கொண்ட உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (WFDY) துணைத் தலைவராகவும் இருந்தார்.

இராசாசி மேத்யூ தாமசு
கேரளச் சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2006–2011
முன்னையவர்பி. பி. ஜியார்ஜ்
பின்னவர்ம. ப. வின்செண்ட்டு
தொகுதிஒல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 மே 1954 (1954-05-12) (அகவை 70)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்கே. சாந்தா
பிள்ளைகள்1 மகனும் மற்றும் 1 மகளும்
வாழிடம்(s)தெங்குவிலயில் வீடு, கன்னரா, திருச்சூர்
முன்னாள் கல்லூரிசிறீ கேரள வர்மா கல்லூரி, திருச்சூர்
வேலைஊடகவியலாளர், அரசியல்வாதி
இணையத்தளம்www.rajajimathewthomas.com

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

டி. கே. தாமஸ் மற்றும் மரியம்மா தாமஸ் ஆகியோரின் மகனாக 1954 மே 12 அன்று திருச்சூரில் பிறந்தார். எல்துருத்தின் புனித அலோசியசு மேல்நிலைப் பள்ளி மற்றும் திருச்சூர் சிறீ கேரள வர்மா கல்லூரியில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார். மலையாளம், ஆங்கிலம், இந்தி மற்றும் மக்யார் (அங்கேரிய மொழி) மொழிகளில் நன்கு புலமைப் பெற்றவர். இவர் கே. சாந்தா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் தனது தொழில் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உலகெங்கிலும் உள்ள 78 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் சிறீ கேரள வர்மா கல்லூரியில் அலகுச் செயலாளராக அரசியலில் நுழைந்தார். பின்னர் மாவட்டத் தலைவராகவும் பின்னர் அதன் தேசிய பொதுச் செயலாளராகவும் ஆனார். பின்னர் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பில் தீவிரமாக செயல்பட்டார்.

1985 முதல் 1996 வரை புடாபெசுட்டை தளமாகக் கொண்ட உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். ஆசியா மற்றும் ஓசியானியா ஆணையத்தின் பதவியையும், அதன் பத்திரிகை மற்றும் தகவல் துறையின் துணைத் தலைவராகவும், அமைதி மற்றும் ஆயுதக் குறைப்பு ஆணையத்தின் துணைத் தலைவராகவும், 1989 இல் பியொங்யாங்கில் நடைபெற்ற 13 வது உலக இளைஞர் மற்றும் மாணவர்களின் விழாவின் நிரந்தர ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், 2004 கேரள சமூக மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக்கிந நாடுகள் அவையின் பார்வையாளராக இருந்தார். மேலும், நமீபியாவின் சுதந்திர பிரகடனத்திலும் பங்கேற்றார்.

கிரெம்லின் உச்சிமாநாட்டின் போது, உலக இளைஞர்கள் சார்பாக ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் மற்றும் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோரிடையே அமைதி ஏற்படுத்தும் குழுவிற்கு இவர் தலைமை தாங்கினார்.

அப்போதைய இந்தியப் பிரதமர் வி. பி. சிங் தொடங்கிய தேசிய இளைஞர் கொள்கையை வகுக்கும் பணியில் இவர் பங்கேற்றார். அப்போதைய பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான இளைஞர் திட்டத்திற்கான தேசிய குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். "பசுமை இந்தியா" அமைப்பின் தலைவராகவும், சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு பிரச்சினைகளில் பணியாற்றும் தன்னார்வ அமைப்புகளான "மூலோபாய நடவடிக்கை" அமைப்பின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

1996இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய அமைப்பின் உறுப்பினராக ஆனார். 2006 ஆம் ஆண்டில் ஒல்லூர் தொகுதியிலிருந்து கேரள சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2011 தேர்தலில், இவர் காங்கிரசு வேட்பாளர் எம். பி. வின்சென்ட்டிடம் தோற்கடிக்கப்பட்டார்.

திருச்சூர் மாவட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும், அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமை அமைப்பின் பொதுச் செயலாளராகவும் அதன் மாநில அமைப்பின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

2019 இந்திய பொதுத் தேர்தலில் கேரளாவில் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட இவர், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் டி. என். பிரதாபனிடம் தோல்வியடைந்தார்.[5]

பத்திரிகையாளராக

தொகு

இராசாசி தற்போது கேரளாவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் அங்கமான ஜனயுகம் செய்தித்தாளின் ஆசிரியராக உள்ளார். உலகத் தொழில் முனைவோர் அமைப்பின் அதிகாரப்பூர்வ அங்கமான "உலக இளைஞர்களின்" ஆசிரியர் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு எழுத்தாளராக, ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டுரைகளை வழங்கினார். மேலும் இவர் மூன்று மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "CPI expects early-bird advantage in Thrissur". The Hindu. 6 March 2019. https://www.thehindu.com/news/national/kerala/cpi-expects-early-bird-advantage-in-thrissur/article26444041.ece. பார்த்த நாள்: 2019-03-06. 
  2. "LDF hopes rice scheme will work in its favour in Ollur". The Hindu. 2011-04-04. Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.
  3. "CPI election conventions begin". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.
  4. "RAJAJI MATHEW THOMAS(CPI):Constituency- OLLUR". National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.
  5. "Thrissur Election Result 2019: T. N. Prathapan won". The Times of India. May 24, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசாசி_மேத்யூ_தாமசு&oldid=4009203" இலிருந்து மீள்விக்கப்பட்டது