இராசேந்திர ரியாங்கு
இராசேந்திர ரியாங்கு (Rajendra Reang (Tripura politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். திரிபுரா மாநில அரசியலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவு உறுப்பினராகச் செயல்பட்டார். காஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2003 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை திரிபுரா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [3] [4] 2018 ஆம் ஆண்டு திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி வேட்பாளர் பிரேம் குமார் ரியாங்கிடம் 4131 வாக்குகள் வித்தியாசத்தில் இராசேந்திர ரியாங்கு தோற்று போனார்.[5] [6] [7]
இராசேந்திர ரியாங்கு Rajendra Reang | |
---|---|
உறுப்பினர், திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் 2003–2018[1] | |
முன்னையவர் | பிந்துராம் ரியாங்கு |
பின்னவர் | பிரேம் குமார் ரியாங்கு |
தொகுதி | கஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சனவரி 1962[2] கஞ்சன்பூர், வடக்கு திரிப்புரா மாவட்டம் |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
துணைவர் | இயோயாபதி ரியாங்கு |
அரசியல் வாழ்க்கை
தொகு1974 ஆம் ஆண்டில், இவர் இந்திய மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்தார். மாணவர் இயக்கத்தில் ஓர் ஆர்வலராக தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் 1995 ஆம் ஆண்டில் பழங்குடி இளைஞர் கூட்டமைப்பில் சேர்ந்தார் தற்போது கணமுக்தி பரிசத்தின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura Assembly Election Results in 2013". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "OATH / AFFIRMATION BY ELEVENTH LEGISLATIVE ASSEMBLY MEMBERS" (PDF). tripuraassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
- ↑ "Tripura Assembly Election Results in 2003". பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Tripura Assembly Election Results in 2008". பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Tripura Assembly Election Results in 2018". பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Kanchanpur Election Result 2018 Live: Kanchanpur Assembly Elections Result Live Update, Vidhan Sabha Election Result & Live News". https://www.news18.com/assembly-elections-2018/tripura/kanchanpur-election-result/.
- ↑ "Kanchanpur (ST) Vidhan Sabha Election - Kanchanpur (ST) Assembly Election Results, Polling Stations, Voters, Candidates". Archived from the original on 29 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)