இராச்பரியன் வனவிலங்கு சரணாலயம்

இராச்பரியன் வனவிலங்கு சரணாலயம் (Rajparian Wildlife Sanctuary) இந்தியாவின் சம்மு மற்றும் காசுமீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அனந்த்நாக்கு நகருக்கு அருகில் உள்ள வனத் தொகுதியின் தக்சும் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் . இது மாவட்டத் தலைமையகமான அனந்த்நாக் நகரத்திலிருந்து 42 கிமீ தொலைவிலும் சிறீநகருக்கு தெற்கில் 85 கிலோமீட்டர்கள் (53 mi) தொலைவிலும் உள்ளது. சரணாலயம் 20 சதுர கிலோமீட்டர்கள் (7.7 sq mi) [2] அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. இந்த பகுதி 1948 ஆம் ஆண்டுக்கு முன் மகாராசா காலத்தில் அருகிய மான் இனமான அங்குல் மான் காப்பகமாக பாதுகாக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில்தான் இது இராச்பரியன் வனவிலங்கு சரணாலயமாக மேம்படுத்தப்பட்டது. [1]

இராச்பரியன் வனவிலங்கு சரணாலயம்
Rajparian Wildlife Sanctuary
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
அமைவிடம்தக்சம், வன வட்டம், அனந்தநாக் மாவட்டம், சம்மு மற்றும் காசுமீர்,  இந்தியா
அருகாமை நகரம்அனந்தநாக்கு நகரம்
பரப்பளவு20 km2 (7.7 sq mi)
நிறுவப்பட்டது1981 [1]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

தொகு

இராச்பரியன் வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் தாவர வகைகளில் அடர்ந்த ஊசியிலையுள்ள காடுகள் மற்றும் துணை-அல்பைன் மேய்ச்சல் நிலங்களும் அடங்கும். அடர்ந்த ஊசியிலையுள்ள காடுகளில், கெய்ல் பைன், தளிர், ஃபிர், பிர்ச், தேவதாரு மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன.

இராச்பரியன் வனவிலங்கு சரணாலயத்தில் இமயமலைக் கருங்கரடி, [3] அங்குல்.[1] மற்றும் கத்தூரி மான் உள்ளிட்ட பல வகையான விலங்குகள் உள்ளன. சரணாலயத்தில் பல வகையான காட்டுப் பறவைகளும் காணப்படுகின்றன.

இடர்

தொகு

1970 ஆம் ஆண்டில், காசுமீர் அரசாங்கம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ள அங்குல் மானின் 1300 எக்டேர் பிரதம குளிர்காலப் பகுதியில் செம்மறி ஆடு வளர்ப்புப் பண்ணையை உருவாக்கியது. இந்த செம்மறி ஆடு வளர்ப்பு பண்ணை இந்த பகுதியில் அங்குல் மான்களின் இயக்கத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. [1] தவிர, உள்ளூர் அல்லாத பக்கர்வால் இன மக்களின் கால்நடைகளின் அதிகப்படியான மேய்ச்சல் காரணமாக சரணாலயம் இடர்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "HUNT FOR HANGUL" (PDF). wti.org.in. Wildlife Trust of India. Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
  2. "WILDLIFE AREAS OF JAMMU AND KASHMIR" (PDF). J&K Forest Department. Archived from the original (PDF) on 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
  3. "Asiatic Black Bear - Human Conflicts around Dachigam National Park, Kashmir". indiaenvironmentportal.org.in. Wildlife Institute of India. July 2009. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.