இராஜீவ் காந்தி கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரி

புதுச்சேரியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி

இராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Rajiv Gandhi College of Veterinary and Animal Sciences) என்பது புதுச்சேரியிலுள்ள ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகும்.[1] இந்திய கால்நடை மருத்துவ மன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவில் கால்நடை மருத்துவ கல்வியின் தரங்களுக்கு ஏற்ப 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த கல்லூரி புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை நிபுணத்துவங்களை வழங்குவதற்கான கல்வி நிறுவனமாக இது உள்ளது. அத்துடன் இப்பகுதியில் கால்நடை சுகாதாரச் சேவையை வழங்கும் கால்நடை மருத்துவமனையையும் இது கொண்டுள்ளது.[2]

இராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
குறிக்கோளுரைAnimaux Soignes Hommes Aimes
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
விலங்குகளும் மனிதர்களைப் போல நடத்தப்பட வேண்டும்
வகைவிலங்கு மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்புக் கல்வி; ஆராய்ச்சி நிறுவனம்; பொது
உருவாக்கம்1994
சார்புபுதுவைப் பல்கலைக்கழகம்
நிருவாகப் பணியாளர்
51
அமைவிடம்,
11°56′16″N 79°45′49″E / 11.93778°N 79.76361°E / 11.93778; 79.76361
இணையதளம்www.river.edu.in

வரலாறு

தொகு

புதுச்சேரி, குரும்பாபேட்டை, பொன்லைட்டில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் 1994 அக்டோபர் 14 அன்று விஜயதசமி அன்று பாண்டிச்சேரி கால்நடை கல்லூரி என்று பெயட்டு கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரியின் முதல் தொகுதி சேர்க்கை 30 ஆக இருந்தது. பொன்லைட் வளாகத்தில் வகுப்பறைகள் மற்றும் கிரிஷி விக்னான் கேந்திரா வளாகத்தில் ஆய்வக வசதிகள் என இரண்டு இடங்களில் இந்த வளாகம் பரவியுள்ளது.

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற மாநில விழாவில், இக் கல்லூரிக்கு இராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. அதே நேரத்தில், புதுச்சேரி குரும்பாபேட்டையில் உள்ள கிரிஷி விக்னான் கேந்திரா வளாகத்தை ஒட்டிய 59 ஏக்கர் (,000 சதுர மீட்டர்) வளாகமும் நிறுவப்பட்டது.[3] 2013 ஆம் ஆண்டில்,இராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது.

புதுச்சேரி மாநில அரசின் கால்நடை வளர்ப்புத் துறையால் நடத்தப்படும் கால்நடை மருத்துவமனையை கல்லூரி கையகப்படுத்திய பின்னர், மாணவர்களுக்கு கால்நடை மருத்துவப் பயிற்சியை வழங்குவதற்காக ஒரு முழு அளவிலான கற்பித்தல் மருத்துவமனையை நிறுவியது.

இந்தக் கல்லூரி, இந்திய கால்நடை மன்றத்தால் 25 நவம்பர் 1999 அன்று அங்கீகரிக்கப்பட்டது. மேலும் முதல் தொகுதி மாணவர்கள் 25 பேர் கால்நடை மருத்துவப் பட்டதாரிகளாகத் தேர்ச்சி பெற்றனர்.[4]

வளாகம் அமைந்துள்ள இடம்

தொகு

இந்த வளாகம் மூன்று இடங்களில் பரவியுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையம் மற்றும் தொடருந்து நிலையத்திலிருந்து 6 கி. மீ. தொலைவில் உள்ள குரும்பாபேட்டையிலுள்ள திருக்கனூர் சாலையில் உள்ள கிரிஷி விக்னான் கேந்திரா வளாகத்தை ஒட்டி பிரதான வளாகம் அமைந்துள்ளது.[5][6] புதுச்சேரியிலிருந்து திருக்கனூருக்கு பேருந்துகள் மூலம் வளாகத்தை அடையலாம்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Veterinary Council of India". www.vci.nic.in. Archived from the original on 13 August 2008. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  2. "River - Rajiv Gandhi Institute of Veterinary Education and Research". river.edu.in.
  3. "River - Rajiv Gandhi Institute of Veterinary Education and Research". river.edu.in."River - Rajiv Gandhi Institute of Veterinary Education and Research". river.edu.in.
  4. "Veterinary Council of India". www.vci.nic.in. Archived from the original on 13 August 2008. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  5. "Rajiv Gandhi College of Veterinary & Animal Sciences Pondicherry – 605009.INDIA. (Map not to scale)" (PDF). Archived from the original (PDF) on 15 February 2012. பார்க்கப்பட்ட நாள் 1 December 2008.
  6. "Map of Pondicherry to College campus (Not to scale)" (PDF). Archived from the original (PDF) on 15 February 2012. பார்க்கப்பட்ட நாள் 1 December 2008.

வெளி இணைப்புகள்

தொகு