இராபர்ட் பித்சோ

(இராபர்ட் பிகோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராபர்ட் பித்சோ (Robert Fico, ˈrɔbert ˈfitsɔ); பிறப்பு: 15 செப்டம்பர் 1964) என்பவர் சிலோவாக்கிய அரசியல்வாதி ஆவார். இவர் 2023 முதல் சிலோவாக்கியாவின் பிரதமராகப் பதவியில் உள்ளார். முன்னதாக இவர் 2006 முதல் 2010 வரையும், பின்னர் 2012 முதல் 2018 வரையும் பிரதமராகப் வகித்திருந்தார். இவர் 1999 இல் திசை-சமூக சனநாயகக் கட்சியை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். 1992 இல் சிலோவாக்கிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட இவர், அடுத்த ஆண்டில் ஐரோப்பியப் பேரவைக்கான செக்கோசிலோவாக்கிய நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது கட்சி 2006 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, இவர் தனது முதலாவது அமைச்சரவையை அமைத்தார். இவரது அரசியல் நிலைப்பாடுகள் இவரை ஒரு பெருந்திரள்வாதியாகப் பார்க்கிறது.

இராபர்ட் பித்சோ
Robert Fico
2024 ஏப்பிரலில் பித்சோ
சிலோவாக்கியாவின் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 அக்டோபர் 2023
குடியரசுத் தலைவர்சூசானா கபுட்டோவா
பீட்டர் பெலெகிரினி (தெரிவு)
முன்னையவர்லுதோவித் ஓடர்
பதவியில்
4 ஏப்பிரல் 2012 – 22 மார்ச் 2018
குடியரசுத் தலைவர்இவான் காசுபரோவிச்
அந்திரேய் கீசுக்கா
முன்னையவர்இவேத்தா இரதிச்சோவா
பின்னவர்பீட்டர் பெலெகிரினி
பதவியில்
4 சூலை 2006 – 8 சூலை 2010
குடியரசுத் தலைவர்இவான் காசுபரோவிச்
முன்னையவர்மிக்குலாசு சுரிந்தா
பின்னவர்இவெத்தா இரதிச்சோவா
நீதித்துறை அமைச்சர்
பதவியில்
26 மார்ச் 2009 – 3 சூலை 2009
துணை அவைத்தலைவர், தேசியப் பேரவை
பதவியில்
9 சூலை 2010 – 4 ஏப்பிரல் 2012
அவைத்தலைவர்இரிச்சார்டு சூலிக்
பவோல் ருசோவ்சுக்கி
தேசியப் பேரவை உறுப்பினர்
பதவியில்
22 மார்ச் 2018 – 25 அக்டோபர் 2023
பதவியில்
8 சூலை 2010 – 4 ஏப்பிரல் 2012
பதவியில்
23 சூன் 1992 – 4 சூலை 2006
திசை-சமூக சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 நவம்பர் 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 செப்டம்பர் 1964 (1964-09-15) (அகவை 60)
தப்போல்ச்சனி, செக்கோசிலோவாக்கியா
(இன்றைய சிலோவாக்கியா)
அரசியல் கட்சிசமூக சனநாயகக் கட்சி (1999 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
செக்கோசிலோவாக்கியா பொதுவுடமைக் கட்சி (1986–1990)
இடது சனநாயகக் கட்சி (1990–1999)
துணைவர்
சிவெத்லானா சுவபோதவா (தி. 1986)
பிள்ளைகள்1
முன்னாள் கல்லூரிகொமேனியசு பல்கலைக்கழகம் (முனைவர், சட்டம்)
சிலோவாக் அறிவியல் அகாதமி
கையெழுத்து

2010 நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து, பித்சோ எதிர்க்கட்சித் தலைவரானார். இவேத்தா இரதிச்சோவாவின் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் பித்சோவின் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று இரண்டாவது தடவையாகப் பிரதமரானார். [1] 2014 அரசுத்தலைவர் தேர்தலில் பித்சோ போட்டியிட்டு அந்திரேய் கீசுக்காவிடம் தோற்றார்.[2] 2018 மார்ச்சில், ஊடகவியலாளர் ஜான் குசியாக் என்பவரின் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக, பித்சோ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[3][4]

2023 நாடாளுமன்றத் தேர்தலின் போது, சிலோவாக்கியாவின் அண்டை நாடான உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை நிறுத்துவதாக பித்சோ பரப்புரை செய்தார்.[5][6] இவரது கட்சி 42 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.[7] பித்சோ 2020 இல் சிலோவாக் தேசியக் கட்சி, குரல் - சமூக சனநாயகக் கட்சி ஆகியவற்றுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, 2020 அக்டோபர் 25 அன்று நான்காவது முறையாகப் பிரதமராக பதவியேற்றார். பித்சோவின் அரசாங்கம் உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தியது,[8] ஊடகத்தின் மீது அதிகக் கட்டுப்பாட்டை விதித்தது, மேலும் ஊழலைக் கையாளும் சிறப்பு வழக்குரைஞர் அலுவலகத்தை மூடியது.[9] இந்த நகர்வுகள் மக்களின் எதிர்ப்புகளைத் தூண்டின.[10]

2024 மே 15 அன்று, பித்சோ மீது நடந்த ஒரு படுகொலை முயற்சியில் சுடப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[11][12] அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.[13][14]

மேற்கோள்கள்

தொகு
  1. Terenzani-Stankova, Michaela. "Who is Robert Fico?" இம் மூலத்தில் இருந்து 3 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140103003413/http://spectator.sme.sk/articles/view/52453/2/who_is_robert_fico.html. 
  2. "Kiska becomes president (updated)" இம் மூலத்தில் இருந்து 16 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316084749/https://spectator.sme.sk/c/20050250/kiska-becomes-president-updated.html. 
  3. "Fico podá demisiu, novým premiérom môže byť Pellegrini (minúta po minúte)". Sme. 15 March 2018 இம் மூலத்தில் இருந்து 15 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180315134541/https://domov.sme.sk/c/20780574/online-vladna-kriza-pokracuje.html. 
  4. Heijmans, Philip (15 March 2018). "Slovakia's PM Robert Fico resigns amid public outcry" இம் மூலத்தில் இருந்து 15 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180315184836/https://www.aljazeera.com/news/2018/03/slovakia-pm-resigns-journalist-murder-180315150403829.html. 
  5. Kottasová, Ivana; Tanno, Sophie; Chen, Heather (1 October 2023). "Pro-Russian politician wins Slovakia's parliamentary election". CNN. Archived from the original on 2 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2023.
  6. "Slovakia elections: Populist party wins vote but needs allies for coalition". 30 September 2023 இம் மூலத்தில் இருந்து 1 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231001223925/https://www.bbc.com/news/world-europe-66972984. 
  7. "Výsledky predčasných volieb 2023". Denník N. 18 September 2023. Archived from the original on 1 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2023.
  8. "After their PM halts Ukraine aid, Slovaks dig deep to help". 19 April 2024 இம் மூலத்தில் இருந்து 21 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240421225035/https://www.bbc.com/news/world-europe-68843542. 
  9. "Slovakia, the EU’s next rule of law headache". Politico. 20 March 2024. https://www.politico.eu/article/slovakia-eu-rule-of-law-prime-minister-robert-fico/. 
  10. "Thousands rally in Slovakia to condemn a government plan to overhaul public broadcasting". அசோசியேட்டட் பிரெசு. 15 March 2024. https://apnews.com/article/slovaki-protest-fico-public-broadcasting-dd76c4431d2552982aed232b1a7c4e83. 
  11. "Slovakia PM shooting live: Robert Fico in surgery and 'fighting for his life' – minister". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 15 May 2024. Archived from the original on 15 May 2024. பார்க்கப்பட்ட நாள் 15 May 2024.
  12. "Slovak PM Fico no longer in life-threatening condition after being shot, minister says". Reuters. 15 May 2024. பார்க்கப்பட்ட நாள் 17 May 2024.
  13. "Live updates: Shooting of Slovakia's Prime Minister Robert Fico". CNN (in ஆங்கிலம்). 15 May 2024. பார்க்கப்பட்ட நாள் 15 May 2024.
  14. "Slovakian PM Fico 'now stable' after assassination attempt". euronews (in ஆங்கிலம்). 15 May 2024. Archived from the original on 15 May 2024. பார்க்கப்பட்ட நாள் 15 May 2024.

வெளி இணைப்புகள்

தொகு
அரசியல் பதவிகள்
முன்னர்
மிகுலா சுரிந்தா
சிலோவாக்கியப் பிரதமர்
2006–2010
பின்னர்
இவேத்தா இராதிக்கோவா
முன்னர்
இவேத்தா இராதிக்கோவா
சிலோவாக்கியப் பிரதமர்
அறிவிப்பு

2012–present
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_பித்சோ&oldid=3957250" இலிருந்து மீள்விக்கப்பட்டது