இராபர்ட் பிளேர்

பேரா. இராபர்ட் பிளேர் (Robert Blair) (1748 – 22 திசம்பர் 1828) ஓர் இசுக்காட்லாந்து வானியலாளர் ஆவார்.

சிற்பி தாமசு கேம்பெல் வடித்த இராபர்ட் பிளேரின் சிலை, 1815, பழங்கல்லூரி, எடின்பர்கு பல்கலைக்கழகம்

வாழ்க்கை

தொகு

இவர் கிழக்கு உலொத்தியனில் இருந்த கார்வால்டு நகரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் அருள்திரு ஆர்ச்சிபால்டு பிளேர் எனும் வட்டார மறைபரப்புனர் ஆவார்.

இவர் 1773 இல் நாவாய் அறுவை மருத்துவரான மரு. பிரான்சிசு பால்போரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். இவர் மேற்கிந்தியத் தீவுகளில், அரசு நாவாய்ப்படையில் பணிபுரிந்தார். பின்னர் இசுகாட்லாந்து திரும்பி வந்ததும் எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து 1785 இல் மருத்துவரானார்.

இவர் 1785 இலிருந்து தன் இறப்பு வரை எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் முதல் அரசு வானியல் பேராசிரியராக இருந்தார். இவர் சமதளமற்ற வில்லையைக் கண்டுபிடித்து அதைப் புதிய சொல்லாகப் புனைந்தார். இது ஒளியியல் அமைப்புகளின் பிறழ்வுகளைக் கணிசமாக களைவதில் மேற்கொள்ளப்பட்ட புதுமைப்புனைவாகும். இவர் உட்கூடான வில்லைகளில் பல செய்முறைகளைச் செய்து பல்வேறு ஒளியியல் தீர்வுகளைக் கண்டார்.

இவர் 1786 இல் எடிபர்கு அரசு கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1828 திசம்பர் 22 இல் பெர்விக்சயர், வெசுட்டுலாக்கில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
  • Jean Eisenstaedt, "Light and relativity, a previously Unknown Eighteenth-Century Manuscript by Robert Blair (1748–1828)", Annals of Science, 62 347-376 (2005).
  • Jean Eisenstaedt, Avant Einstein Relativité, lumière, gravitation, Paris, Seuil (2005).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_பிளேர்&oldid=3953129" இலிருந்து மீள்விக்கப்பட்டது