இராமகிரிக் கோட்டை
இராமகிரி கோட்டை அல்லது இராமகிரி கில்லா என்பது தென்னிந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையின் உச்சி ஆகும். [1]
இராமகிரி கோட்டை | |
---|---|
கரீம்நகர் மாவட்டம், தெலுங்கானா, இந்தியா | |
இராமகிரி கோட்டை | |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
மக்கள் அனுமதி |
ஆம் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 12-ம் நூற்றாண்டு |
கட்டியவர் | காக்கத்தியர்கள் |
கட்டிடப் பொருள் |
களிமண், கல் |
அமைவிடம்
தொகுஇக்கோட்டையானது, கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள கமன்பூர் மண்டலத்தில் பேகம்பேட்டை கிராமத்தில் உள்ள இராமகிரி மலையில் அமைந்துள்ளது. இது மிகுந்த அடர்த்தியான காட்டுப்பகுதியில், மூலிகைத் தாவரங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது.[1] கோதாவரி ஆற்றையும் மனையாரையும் இக்கோட்டையிலிருந்து பார்க்க முடியும். [1]
இக்கோட்டை, கரீம்நகர் மாவட்டத் தலைநகரத்திலிருந்து சுமார் 65 கிமீ (40 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. [1]] கரீம்நகர் - மந்தானி நெடுஞ்சாலையில் கோட்டையின் அருகில் 2 கிமீ (1.2 மைல்கள்) தொலைவில் பேகம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. [1]
வரலாறு
தொகுஇது 12-ம் நூற்றாண்டுகளில் வாராங்கல்லைச் சார்ந்த காக்கத்தியரால் கட்டப்பட்ட கோட்டையாகும். அதன்பிறகு குதுப் சாகி சுல்தான்தியால் கட்டுப்படுத்தப்பட்டது (1518–1687). 1656-ம் ஆண்டு, கோல்கொண்டாவின் ஆட்சியாளரான, அப்துல்லா குதுப் சாஹ், தன்னுடைய மருமகனுக்குப் (ஔரங்கசீப்பின் மகன்)[2]) பரிசாக அளித்தார். இக்கோட்டை பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கட்டுப்பாட்டுக்கு 1791-ம் ஆண்டு வந்தது[1] சமசுகிருதக் கவிகளில் ஒருவரான காளிதாசன், மேகதூதம் என்ற பாடலை இராமகிரி கோட்டையைப் பற்றி பாடியுள்ளதாக வந்துள்ளபோதும், காளிதாசன் ஐந்தாம் நூற்றாண்டில் அதாவது இக்கோட்டை கட்டுவதற்கு முன் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.[2]
சிறப்பம்சங்கள்
தொகுமூலிகைத் தாவரங்கள்
தொகுஇக்கோட்டை அமைந்துள்ள இராமகிரி காடுகளில் மூலிகைத்தாவரங்கள் நிறைய உள்ளது. இங்குள்ள மருத்துவத் தாவரங்களை உள்ளூர் மக்கள் சேகரித்து, அருகிலுள்ள நகரங்களில் விற்பனை செய்கின்றனர். மாணவர்களும் இம்மூலிகைகளைக் கண்டறியவும், கற்றுக்கொள்ளவும் இப்பகுதிக்கு வருகின்றனர்.
இக்கோட்டையை மருத்துவ மூலிகைகள் காப்பகமாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. [1]
குறிப்புகள்
தொகுமேலும் படிக்க
தொகு- Congress, Indian History (1990). Proceedings – Indian History Congress. p. 775.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Congress, Indian History (1990). Proceedings – Indian History Congress. p. 775.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Congress, Indian History (1990). Proceedings – Indian History Congress. p. 775.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)