இராமகிருட்டிணா (கன்னட நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

இராமகிருட்டிணா (Ramakrishna ) (பிறப்பு சி. 1951),[1] நீர்நல்லி இராமகிருட்டிணா என்றும் அழைக்கப்படும் இவர், கன்னடத் திரையுலகில் முக்கியமாக பணியாற்றும் ஒரு இந்திய நடிகராவார். இவர், முன்னணி நடிகராக கதாபாத்திர வேடங்களில் சித்தரிக்கப்படுவதில் பெயர் பெற்றவர். மைசூர் மாநிலத்தின் முந்தைய வடகன்னட மாவட்டப் பகுதியில் சிர்சிக்கு அருகிலுள்ள நீர்நல்லியில் உள்ள அவ்யக பிராமணச் சமூகத்தில் பிறந்தார்.[2]

இராமகிருட்டிணா
பிறப்புc. 1954 (அகவை 70–71)
நீர்நல்லி, சிர்சி, வட கனரா, மைசூர் மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நீர்நல்லி இராமகிருட்டிணா
பணிநடிகர்

30 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது திரை வாழ்க்கையில், இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் கன்னடப் படங்களிலும், ஒரு சில தமிழ், தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே. பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை (1983) என்ற திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார். புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகல் ரங்கநாயகி (1981), மானாச சரோவரா, அம்ருதா கலிகே (1984) போன்ற சிறந்த படைப்புகளில் இவரை நடிக்க வைத்தார். 1990களிலிருந்து, இவர் பெரும்பாலும் துணை வேடங்களில் தோன்றி வருகிறார்.

அரசியல்

தொகு

2004 பொதுத் தேர்தலில், முந்தைய கனரா மக்களவைத் தொகுதியில் ஜனதா கட்சி (ஜேபி) சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Affidavit Details of Neernalli Ramakrishn". Empowering India. Archived from the original on 24 October 2015. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015. The actor was 50-years-old as of 2004, implies he was born circa 1954.
  2. Bhagwat, Amita (January 2014). "A New Horizon". Havya Sandesha (Havyaka Welfare Trust) 21 (9): 3. http://www.havyakamumbai.com/sandesh/14Jan.pdf. பார்த்த நாள்: 24 October 2015. 
  3. "Statistical Report on General Election, 2004 to the 14th Lok Sabha" (PDF). Election Commission of India. p. 236. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு