இராமகிருஷ்ணம்பதி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

இராமகிருஷ்ணம்பதி (Ramakrishnampathy) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது ராமகிருஷ்ணம்பதி ஊராட்சிக்கு உட்பட்டது.

இராமகிருஷ்ணம்பதி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 207

வரலாறு தொகு

இராமகிருஷ்ணம்பதி பகுதியில் இரண்டு நடுகற்கள் உள்ளன. நடுகல்லில் ஒரு வீரனின் புடைப்புச் சிற்பம் உள்ளது. நடுகல்லில் உள்ள கல்வெட்டில் கட்டிணைபருமரது பத்தாவது ஆட்சி ஆண்டில் பெரும்பாணதி அரையன் என்பவன் கங்க நாட்டை ஆண்ட காலத்தில் அதிவகூர் என்ற இடத்தில் இவ்வீரன் தொறு கொண்டபோது மாண்டான் என்று தெரிகிறது. அதிவகூர் என்பதே இராமகிருஷ்ணம்பதியின் பழைய பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[2]

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 505, மொத்த மக்கள் தொகை 1,967, இதில் 1,026 ஆண்களும், 941 பெண்களும் அடங்குவர்.[3]

மேற்கோள் தொகு

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 120. 
  3. "Ramakrishnampathy Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமகிருஷ்ணம்பதி&oldid=3678945" இலிருந்து மீள்விக்கப்பட்டது