இராமகிருசுண இயக்கம்
இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் இராமகிருஷ்ணா மடம் என்பவை இராமகிருஷ்ணா இயக்கம் அல்லது வேதாந்த இயக்கம் எனப்படும் உலகளாவிய ஆன்மீக இயக்கத்தின் இரட்டை அமைப்புகளாகும்.[1] இராமகிருஷ்ணா மிஷன் உதவிபுரிந்திடவும் மக்கள் பணியாற்றிடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு மே 1,1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட அமைப்பாகும்.நலவாழ்வு, பேரழிவு மீட்புப் பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, துவக்க மற்றும் உயர்நிலைக் கல்வி மற்றும் பண்பாடு பேணுதல் எனப் பலதுறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. தனது நூற்றுக்கணக்கான துறவிகளின் மற்றும் ஆயிரக்கணக்கானத் தொண்டர்களைக் கொண்டு இப்பணிகளை அவ்வமைப்பு நிறைவேற்றி வருகிறது. கர்ம யோகம் எனப்படும் செயல்வழி வழிபாட்டுக் கொள்கைகளைக் கொண்டு இச்செயல்களை செய்து வருகிறது.[2]
![]() சின்னம் | |
உருவாக்கம் | 1897 |
---|---|
நோக்கம் | கல்வி, அறக்கட்டளை, சமயக் கல்வி, ஆன்மீகம் |
தலைமையகம் | பேலூர் மடம் |
சேவை பகுதி | உலகெங்கும் |
வலைத்தளம் | பேலூர் மடம் |

2013 ஆம் ஆண்டின் உத்தராகண்டம் பேரிடர் மீட்புப்பணியில் ராமகிருஷ்ண மிஷனின் பங்கு குறிப்பிடத்தக்கது.[3]
இந்த மிஷனின் தலைமையகம் இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் மடத்தில் அமைந்துள்ளது.[1]
யுனெஸ்கோ உடனான ஒப்புமைதொகு
1993 ஆம் ஆண்டு நிகழ்த்திய உரையில் யுனெஸ்கோ அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஃபெடரிகோ மேயர், 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்ட திட்டம் 1897 இல் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மிஷனின் நோக்கம், செயல்பாடுகளோடு ஒத்திருப்பதைக் கண்டு வியந்து குறிப்பிட்டுள்ளார்.[4][5]
விருதுகள்தொகு
காந்தி அமைதிப் பரிசுதொகு
- 1998 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு ராமகிருஷ்ண மிஷனுக்கு வழங்கப்பட்டது.
தேசிய விருதுதொகு
இந்தியாவின் மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேசிய விருது, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்விற்காக மிகச் சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக ராமகிருஷ்ண மிஷனின் கொல்கத்தா நரேந்திரப்பூர் ராமகிருஷ்ண மிஷனுக்கு வழங்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பார்வையற்ற மாணவர்கள் அகாடமி, பார்வையற்றவர்களின் கல்வி, வேலைப் பயிற்சிகள், சமூக, பொருளாதார மறுவாழ்விற்காகப் பாடுபட்டு வருகின்றது.2010 ஆம் வருடம் உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவரிடமிருந்து இவ்விருது பெறப்பட்டது [6]
இவற்றையும் பார்க்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 "Belur Math". 2008-12-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Agarwal, Satya P. (1998). The Social Role of the Gita: How and Why. Motilal Banarsidass Publ.. பக். 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120815247.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-11-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-08-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-11-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.ibe.unesco.org/publications/ThinkersPdf/vivekane.pdf
- ↑ ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; பிப்ரவரி; 2011; பக்கம் 41
வெளியிணைப்புகள்தொகு
- Official website of the Headquarters of Ramakrishna Math and Ramakrishna Mission பரணிடப்பட்டது 2007-01-07 at the வந்தவழி இயந்திரம்
- Is the Ramakrishna Mission Hindu? பரணிடப்பட்டது 2007-01-27 at the வந்தவழி இயந்திரம் Article by Dr. Koenraad Elst
- Photos of various Ashrams, Temples, and Charitable institutions of the Ramakrishna Mission in India பரணிடப்பட்டது 2008-10-16 at the வந்தவழி இயந்திரம்
- Official website of Ramakrishna Mission Ceylon Branch - rkmceylon.org - rkm ceylon
- Official website of Ramakrishna Mission Home of Service, Vârânasî பரணிடப்பட்டது 2009-04-26 at the வந்தவழி இயந்திரம்
- [இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இயங்கும் இராமகிருஷ்ண மடங்கள், மிஷன்கள், ஆஸ்ரமங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள் மற்றும் சமூகப் பணி அமைப்புகள் பட்டியல்: http://belurmath.org/centres/branchcentres.htm பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம்]