இராமதீர்த்தம்
இராமதீர்த்தம் (Ramatheertam)[1] என்பது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது விடவலூர் மண்டலத்தின் கீழ் வருகிறது.
இராமதீர்த்தம் | |
---|---|
வரலாற்று சிறப்புமிக்க கிராமம் | |
ஆள்கூறுகள்: 14°38′52″N 80°08′40″E / 14.6479°N 80.1445°E | |
Country | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் (இந்தியா) | நெல்லூர் |
அலுவல் | |
• மொழி | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அருகிலுள்ள நகரம் | நெல்லூர் |
வரலாறு
தொகுஇராமதீர்த்தம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று பெருமையுடைய பௌத்த எச்ச தளமாகும்.
போடிபட்டி திப்பா
தொகுஇராமலிங்கேசுவரா கோயிலின் கிழக்கே உள்ள ஒரு மேட்டில் சமீபத்திய ஆய்வின் மூலம்[2] சில வரலாற்றுப் புராதன எச்சங்கள் கிடைத்தன. இத்தளத்திலிருந்து கருப்பு மற்றும் சிவப்பு மெருகூட்டப்பட்டுச் செய்யப்பட்ட பொருட்கள், சுடுமண் சிற்பங்கள் மற்றும் செங்கல் எச்சங்கள் மீட்கப்பட்டன. குண்டூர் மாவட்டத்தில் உள்ள செஜர்லா கோயிலில் காணப்படும் பௌத்த எச்சங்கள் இந்த தளத்தில் இருக்கலாம். இந்த இடத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயில்
தொகுஇராமதீர்த்தத்தில் உள்ள ராமலிங்கேசுவர சுவாமி கோயிலில் சிவபெருமான் மற்றும் காமட்சியம்மா ஆகியோர் முதன்மை தெய்வங்களாகவும், விக்கினேசுவரா மற்றும் சுப்பிரமணிய சுவாமியும் இங்கு வழிபடப்படுகிறார்கள். செங்கற்களால் கட்டப்பட்ட கோயில், கொடிமரம், கல்யாண மண்டபம், அலங்கார மண்டபம், நித்யக்ஞத்திற்கான யாகசாலை போன்ற கட்டிடக்கலை பல்லவர் பாணியை நினைவூட்டுகிறது. பிரதான கோயில் மிகவும் சிறியது மற்றும் வெள்ளை பளிங்குக் கற்களால் ஆனது. புராணங்களில் இராமதீர்த்தம் பக்தர்களிடையே மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ளது. ஏனெனில் இது வேதங்களின்படி, இராமர் சீதையைத் தேடும் போது ஒரு இரவு தங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. விடியற்காலையில், இராமர் தனது கைகளால் மணலில் ஒரு சிவலிங்கத்தை வடிவமைத்து பிரார்த்தனை செய்தார்.
நிலப்படம்
தொகுமேலே விவரிக்கப்பட்ட புவியியலுக்கான விக்கிமேப்பியா இணைப்பைப் பார்க்கவும்: http://wikimapia.org/#lat=14.6478641&lon=80.1444832&z=15&l=0&m=b&v=8
மேற்கோள்கள்
தொகு- ↑ (There is another Ramatheertham in Vizianagaram District)
- ↑ "Archeological Survey of India". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 16 October 2012.