இராமநல்லூர்

இராமநல்லூர் (Ramanallur) கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இது தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம் , அரியலூர் வட்டம், அழகியமணவாளம் வருவாய் கிராமத்தின் ஒரு பகுதியாகும் . இது 2016-ல் சுமார் 2,500 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது.[1]

இராமநல்லூர்
தீவுக்கிராமம்
இராமநல்லூர் is located in தமிழ் நாடு
இராமநல்லூர்
இராமநல்லூர்
தமிழ்நாட்டில் அமைவிடம்
இராமநல்லூர் is located in இந்தியா
இராமநல்லூர்
இராமநல்லூர்
இராமநல்லூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°56′59″N 79°13′14″E / 10.94972°N 79.22056°E / 10.94972; 79.22056
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்2,500
மொழி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகமை நகரம்தஞ்சாவூர்
மக்களவைத் தொகுதிசிதம்பரம்

நிலவியல் தொகு

இராமநல்லூர் 10°56′N 79°13′E / 10.933°N 79.217°E / 10.933; 79.217 அமைந்துள்ளது.

இத்தீவு இரண்டு குக்கிராமங்களைக் கொண்டுள்ளது: மேல இராமநல்லூர் மற்றும் கீழ இராமநல்லூர்.[1]

நிலப்பரப்பிற்கான இணைப்பு தொகு

இத்தீவை அழகியமணவாளத்துடன் இணைக்கும் பாலம் பிப்ரவரி 2016-ல் திறக்கப்பட்டது.[1] இதற்கு முன், பரிசலே பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுத்தப்பட்டன. கோடைக் காலத்தில் மிதவைகள் மற்றும் காளை வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.[2] வெள்ளக் காலங்களில் பெரும்பாலும் இத்தீவு பிரதான நிலப்பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படும்.[1]

ஆகத்து 2023, பிரதான நிலப்பகுதியிலிருந்து தீவுக்கு ஒரு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் தெற்கே இணைக்கத் திட்டமிடப்பட்ட மற்றொரு பாலம் 55 கோடி (2020 இல் நிகர மதிப்பு 55 crore or US$6.9 மில்லியன்)க்கு சமமான தமிழ்நாடு அரசாங்கத்தின் நிதியுதவி பெறப்பட்டு 2017-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2019 செப்டம்பரில், மேல இராமநல்லூரிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியது.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Ganesan, S. (2016-02-27). "Bridge linking Ramanallur islet thrown open to public" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/bridge-linking-ramanallur-islet-thrown-open-to-public/article8291166.ece. 
  2. Srinivasan, G. (2007-08-03). "A village struggling sans 'basic connectivity'". பார்க்கப்பட்ட நாள் 2023-05-04.
  3. "Ramanallur residents urge govt to resume bridge work soon to avert further tragedy". DT Next. Thiruchirapalli, India: Daily Thanthi. 2019-09-15. பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.
  4. Thiruselvam, P (2019-09-15). "Officials did not pay heed to demand for bridge: Ariyalur locals". The New India Express. Ariyalur, India: Express News Service. பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநல்லூர்&oldid=3813895" இலிருந்து மீள்விக்கப்பட்டது