இராமேசுவரர் கோவில், நரசமங்கலம்

சிவன் ஆலயம்

இராமேசுவரர் கோயில் (Rameshvara Temple) இராமலிங்கேசுவரர் கோயில் எனவும் அறியப்படும் இது இந்திய மாநிலமான கர்நாடகாவிலுள்ள சாமராசநகர் மாவட்டத்தில் நரசமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோவிலாகும். இந்தக் கோயில் 9-ஆம் நூற்றாண்டின் தலக்காடு மேலைக் கங்கர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. [1]

இராமேசுவரர் கோவில்
இந்துக் கோயில்
இராமேசுவரர் கோவிலின் தோற்றம் (பொ.ச. 9-ஆம் நூற்றாண்டு)
இராமேசுவரர் கோவிலின் தோற்றம் (பொ.ச. 9-ஆம் நூற்றாண்டு)
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சாமராசநகர் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

கோயில் திட்டம் தொகு

கோவில் மிக எளிமையான வடிவில் செங்கற்கலாலும் வெளிபூச்சுகளாலும் தனித்துவமான விமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. விமானம் பதினொரு மீட்டர் உயரத்தில் நிற்கிறது. [1] இது மண்டபத்துடன் கூடிய கர்ப்பக்கிருகத்தையும் கொண்டுள்ளது. இது, திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் குறிப்பிடத்தக்க சில சிற்பங்கள் நடராசர் (இந்து கடவுளான சிவனின் ஒரு வடிவம்), சப்தகன்னியர் (ஏழு இந்துத் தெய்வங்கள்), கங்க மன்னன் தனது இராணியுடன் அமர்ந்திருப்பது போன்ற சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. [1]

இந்த கோவிலுக்கு பிற்காலத்தில் போசள மன்னர்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்தது. உள்ளூர் தெய்வமான இராமநாததேவனுக்கு மூன்றாம் வீர வல்லாளன் வழங்கிய மானியங்களை விவரிக்கும் இரண்டு கன்னட மொழி கல்வெட்டுகள் (கி.பி 1291-1343) இதை சான்றளித்தன.[1]

புகைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு