இராயபுரம் தொடருந்து நிலையம்

இராயபுரம் இரயில் நிலையம் என்பது தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். இது கட்டப்பட்ட ஆண்டு 1856. இதுவே இந்திய துணைக்கண்டத்தில் மிகப் பழமையான இரயில் நிலையமாகும். (இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட மும்பை மற்றும் தானே இரயில் நிலையங்கள் ஆகியவை தற்பொழுது செயல்பாட்டில் இல்லை). இது சென்னைக் கடற்கரை, அரக்கோணம் இடையேயான இரயில் பாதையில் அமைந்துள்ளது. இதை 1856 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார். இங்கிருந்து தான் தென் இந்தியாவின் முதல் இரயில், அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது.

இராயபுரம் இரயில் நிலையம்
தென்னிந்திய ரயில்வே மற்றும் சென்னை புறநகர் ரயில் நிலையம்
ராயபுரம் நிலையம்
பொது தகவல்கள்
உரிமம்ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே
தடங்கள்சென்னை புறநகர ரயில்வேயின் வடக்கு, மேற்கு, மேற்கு வடக்கு, மேற்கு தெற்கு தடங்கள்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்26
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுRPM
பயணக்கட்டண வலயம்தென்னிந்திய ரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டதுசூன் 28, 1856 (1856-06-28)[1][2]
மின்சாரமயம்ஆகஸ்டு 9, 1979[3]

வரலாறு தொகு

இந்த நிலையம் ஆகஸ்டு 1979இல் மின்மயமாக்கப்பட்டது.[3]

பயன்பாடு மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Varghese, Nina (27 August 2005). "Royapuram railway station repair work may be completed by Oct". The Hindu Business Line (Chennai). http://www.thehindubusinessline.com/2005/08/27/stories/2005082701581900.htm. பார்த்த நாள்: 20 November 2011. 
  2. "Baalu demands new rail link projects for Tamil Nadu". The Hindu. 8 January 2012. http://www.thehindu.com/news/national/tamil-nadu/baalu-demands-new-rail-link-projects-for-tamil-nadu/article2784964.ece. பார்த்த நாள்: 27 December 2013. 
  3. 3.0 3.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Royapuram railway station
என்பதில் ஊடகங்கள் உள்ளன.