இராய் வம்சம்
இராய் வம்சம் (Rai Dynasty) (கி பி 416–644) தற்கால பாகிஸ்தானின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் பலுசிஸ்தான் கந்தகார், காஷ்மீர், கராச்சி, சூரத், கட்ச் போன்ற பகுதிகளை, கி பி 416 முதல் 644 முடிய ஆண்டவர்கள். இராய் குல மன்னர்கள் இந்து மற்றும் பௌத்த சமயங்களை ஆதரித்தனர்.[1] இராய் வம்சத்தவர்கள் ஆண்ட நிலப்பரப்பின் அளவு 600,000 சதுர மைல் (1,553,993 ச கி மீ) கொண்டது.
இராய் பேரரசு راءِ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கி பி 416–644 | |||||||||
தலைநகரம் | அல்ரோர் | ||||||||
சமயம் | பௌத்தம் மற்றும் இந்து சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பேரரசர் | |||||||||
வரலாற்று சகாப்தம் | செந்நெறிக் கால இந்தியா | ||||||||
• தொடக்கம் | கி பி 416 | ||||||||
• முடிவு | 644 | ||||||||
|
ராசிதீன் கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில், கி பி 644-இல் நடைபெற்ற போரில் அரபு இசுலாமியர்களிடம் இராய் வம்சத்தவர்கள் தோற்றனர்.[2][3]
இராய் வம்ச மன்னர்கள் பௌத்தம் மற்றும் இந்து சமயங்களை ஆதரித்தனர். இராய் குலத்தவர்களின் தலைநகரான அல்-ரோர் அருகில் தற்கால பாகிஸ்தானில் உள்ள சுக்கூர் எனுமிடத்தில் சிவபெருமானுக்கு ஆலயம் கட்டினர்.
இராய் வம்ச ஆட்சியாளர்கள்
தொகு- இராய் திவா ஜி (தேவாதித்தியா)
- இராய் சகிராஸ் (ஸ்ரீ ஹர்சா)
- இராய் சகாசி (சிங்கசேனன்)
- இரண்டாம் இராய் சகிராஸ்
- இரண்டாம் சகாசி