இராவணகதா

பழமையான இசைக்கருவி

இராவணகதா (மாறுபட்ட பெயர்கள்: இராவணகத்தா, இராவணகட்டா, இராவணஸ்ட்ரோன், இராவண ஹஸ்த வீணை ) என்பது இந்தியா, பாக்கித்தான், இலங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படும் நரம்பினால் இசைக்கப்படும் ஒரு பழங்கால வளைந்த இசைக்கருவியாகும் . இது வயலினின் மூந்தையதாகப் பரிந்துரைக்கப்படுகிறது. [1]

எசுப்பானியாவின் இலான்சரோட்டில் உள்ள காசா மியூசியோ டெல் டிம்பிளில் இந்தியன் இராவணகதா கருவி.

கட்டுமானம் தொகு

 
இந்தியாவின் ஜெய்சல்மேரில் இராவணகதாவை இசைக்கும் ஒருவர்

இராவணகதாவின் ஒலி வழங்கும் பகுதியானது ஒரு சுரைக்காயாகவோ, பாதியாக வெட்டப்பட்ட தேங்காய் மட்டையாகவோ அல்லது குழிவான மர உருளையாகவோ, நீட்டப்பட்ட ஆட்டின் சவ்வு அல்லது மற்ற தோலாகவோ இருக்கலாம். மரம் அல்லது மூங்கிலாலன கழுத்துப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட இழுத்துக் கட்டப்பட்ட நரம்பு அல்லது எஃகு சரங்களை ஒரு பாலத்தின் மீது கட்டப்படும். சில மாதிரிகள் பல அதிர்வு சரங்களைக் கொண்டிருக்கலாம். வில் பொதுவாக குதிரைமுடியால் ஆனது. சில மாதிரிகள் நீளத்தில் வேறுபடுகின்றன.

வரலாறு தொகு

இந்திய பாரம்பரியத்தில், இராவணகதமானது இலங்கையை ஆண்ட அசுர குல மன்னரான இராவணன் காலத்தில் இலங்கையின் ஹெல மக்களிடையே தோன்றியதாக நம்பப்படுகிறது. புராணத்தின் படி, இராவணன் இந்துக் கடவுளான சிவனுக்கான பக்தியில் இக்கருவியை பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. [2] இந்து இதிகாசமான இராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போருக்குப் பிறகு, அனுமன் இராவணகதத்துடன் வட இந்தியா திரும்பினார். குறிப்பாக வட இந்தியாவில் இராசத்தானில் உள்ள தெரு இசைக்கலைஞர்கள் மத்தியில் இராவணகதா பிரபலமானது.

மத்தியகால இந்தியாவின் வரலாறு முழுவதும், மன்னர்கள் இசையின் புரவலர்களாக இருந்தனர். இது அரச குடும்பங்களிடையே இக்கருவியின் பிரபலத்தை அதிகரிக்க உதவியது. இராசத்தான் மற்றும் குசராத்தில், இளவரசர்கள் கற்றுக்கொண்ட முதல் இசைக்கருவி இதுவேயாகும். இராசத்தானின் சங்கீத பாரம்பரியம் மேலும் பெண்கள் மத்தியில் இக்கருவியை பிரபலப்படுத்த உதவியது.

கி.பி ஏழாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடையில், அரபு வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து அருகிலுள்ள கிழக்கிற்கு இராவணஸ்ட்ரோனைக் கொண்டு வந்ததாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. அங்கு இது அரபு ரெபாப் மற்றும் வயலின் குடும்பத்தின் பிற ஆரம்ப மூதாதையர்களுக்கு அடிப்படை மாதிரியை வழங்கியது. [3] [4]

நவீன பயன்பாடு தொகு

 
தினேஷ் சுபசிங்க தனது புதிய இராவணகதத்தை மகிந்த ராசபக்சவிடம் காட்டுகிறார்

நவீன காலத்தில், இந்த கருவி இலங்கை இசையமைப்பாளரும் வயலின் கலைஞருமான தினேஷ் சுபசிங்கேவால் புத்துயிர் பெற்றது. மேலும் இராவண் நாடே மற்றும் பௌத்த சொற்பொழிவாளர் கருணா நாடே ஆகிய இருவரது பல பாடல்களில் பயன்படுத்தப்பட்டது. [5] [6]

ஐரோப்பிய நாட்டுப்புற இசைக்குழுவான ஹெய்லுங் அவர்களின் இரண்டு இசைத் தொகுப்புகளான ஆஃப்னிர் மற்றும் ஃபுதாவில் இராவணகதாவைப் பயன்படுத்துகின்றனர் .

சான்றுகள் தொகு

  1. Heron-Allen, Edward (1885). Violin-Making. Ward, Lock, and Co.. பக். 37–42. https://archive.org/stream/cu31924022320216#page/n69/mode/2up/search/India. பார்த்த நாள்: 29 June 2017. "As it was and is, being a historical, theoretical, and practical treatise on the science and art of violin-making, for the use of violin makers and players, amateur and professional" 
  2. "Sri Lankan revives Ravana's musical instrument". http://www.island.lk/2008/03/09/news11.html. 
  3. Heron-Allen, Edward, Violin-making : as it was and is, being a historical, theoretical, and practical treatise on the science and art of violin-making, for the use of violin makers and players, amateur and professional, Ward, Lock, and Co., 1885, pp. 37-42 Archive.org facsimile of Cornell University Press copy (accessed 29 June 2017)
  4. Choudhary, S.Dhar (2010). The Origin and Evolution of Violin as a Musical Instrument and Its Contribution to the Progressive Flow of Indian Classical Music: In search of the historical roots of violin. Ramakrisna Vedanta Math. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9380568065. https://books.google.com/books?id=dUQWMwEACAAJ&q=history+violin+India. பார்த்த நாள்: 5 September 2015. 
  5. Balachandran, P.K. (7 February 2011). "A musical instrument played by Ravana himself!". New Indian Express. http://newindianexpress.com/entertainment/tamil/article393909.ece. 
  6. "Dinesh records highest sale for an instrumental". The Sunday Times. 8 March 2015. http://www.sundaytimes.lk/150308/magazine/dinesh-records-highest-sale-for-an-instrumental-139029.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவணகதா&oldid=3653613" இலிருந்து மீள்விக்கப்பட்டது