இரிசுவானா அசன்
சையிதா இரிசுவானா அசன் (Syeda Rizwana Hasan) வங்காளதேச வழக்கறிஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். குறிப்பாக இவர் வங்காள தேசத்தில் கப்பல் உடைக்கும் தொழிலுக்கான விதிமுறைகளில் கவனம் செலுத்தினார். வங்காளதேச சுற்றுச்சூழல் ஆர்வலரான இரிசுவானா அசன் புகழ்பெற்ற அமெரிக்க இதழான டைமின் அக்டோபர் இதழில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், குறிப்பாக கப்பல் உடைக்கும் முற்றங்களில் இவர் செய்த சிறந்த பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டார்.
சையிதா இரிசுவானா அசன் | |
---|---|
பிறப்பு | சையிதா ரிசுவானா அசன் 15 சனவரி 1968 அபிகஞ்சு, கிழக்கு பாகிஸ்தான், பாக்கித்தான் |
தேசியம் | பங்களாதேசி |
கல்வி | எல்.எல்.எம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தாக்கா பல்கலைக்கழகம் |
பணி | வழக்கறிஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–முதல் |
அறியப்படுவது | கப்பல் உடைப்பு தொழிற்சாலையி பங்களிப்பு |
வங்காளதேசத்தின் மிகப்பெரிய கப்பல் உடைக்கும் மண்டலத்தில் உள்ள தொழிலாளர்கள் கப்பல்களுக்குள் அவர்கள் உலோகத்தை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் விளக்குகளில் இருந்து அடர்த்தியான கருப்பு புகை மூட்டம், நிலையற்ற வாயுக்கள், கல்நார், ஈயம் மற்றும் பாதரசம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். தெற்காசியாவின் கப்பல் உடைக்கும் முற்றங்களில் வெடிப்புகள், தீ அல்லது விபத்துகளால் கப்பல் உடைப்பவர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிறார்கள். இரிசுவானா இந்த தொழிலாளர்களுக்காகப் போராடினார். சிறந்த சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் விதிமுறைகளை கொண்டு வர முயற்சித்தார்.
மேலும் 2009 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு[1] வழங்கப்பட்டது ரமோன் மகசேசே விருதும் 2012ஆம் ஆண்டில் இரிசுவானாவுக்கு வழங்கப்பட்டது. வங்காளதேசத்தில் நீதித்துறை செயல்பாட்டின் பிரச்சார இயக்கத்தில் சமரசமற்ற தைரியம் மற்றும் விருப்பு வெறுப்பற்ற தலைமை ஒரு நல்ல சுற்றுச் சூழலுக்காக மக்களின் உரிமையை உறுதிப்படுத்தியது போன்ற காரணங்களுக்காக இவ்விருதுக்கு இரிசுவானா அசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசையிதா இரிசுவானா அசன் 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று வங்காளி முசுலீம் குடும்பத்தில் பிறந்தார். இப்போது வங்காளம் எனப்படும் கிழக்குப் பாக்கித்தானிலுள்ள அபிகஞ்சு மாவட்டத்தில் வளர்ந்தார். வக்கருன்னிசா நூன் பள்ளி மற்றும் கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியையும் புனித சிலுவை கல்லூரியில் மேல்நிலைக் கல்வியையும் கற்றார். டாக்கா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகுஅசன் கப்பல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டார், 2003 ஆம் ஆண்டில் சிட்டகாங்கில் உள்ள உடைப்பு முற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மார்ச் 2003 இல் நீதிமன்றம், துறை சார்ந்த சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கப்பல் உடைப்பதை சட்டவிரோதமானது என்று அறிவித்தது. [3] அசன் தொழிலாளர் உரிமைகள் மற்றும் தொழிலில் பாதுகாப்பான பணிச்சூழலுக்காக தொடர்ந்து பாடுபடுகிறார். [4] வீட்டு மனைகள் உருவாக்க ஏரிகளை நிரப்புதல், நெகிழியின் முறையற்ற பயன்பாடு, மலை வெட்டுதல், காடழிப்பு, இறால் வளர்ப்பு மற்றும் செயின்ட் மார்டின்சு தீவில் சட்டவிரோத நிறுவனங்கள் கட்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக அசன் வெற்றிகரமாக வழக்கு தொடர்ந்தார். [3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசையித் மகிபுல் அசன் மற்றும் சுரையா அசன் தம்பதியருக்கு மகளாக இரிசுவானா பிறந்தார். தனது வகுப்பு தோழரும் வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபருமான அபு பக்கர் சித்திக்கை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.[5] 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நசுருல் அமீது பிபுவுக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநரான இவரது கணவர் சித்திக், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.[6][7]
விருதுகள்
தொகுஅசனின் தலைமையின் கீழ் வங்காளதேச சுற்றுச்சூழல் வழக்கறிஞர்கள் சங்கம், உலகளாவிய 500 ரோல் ஆஃப் ஆனர் என்ற ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட விருதை 2003 ஆம் ஆண்டு வென்றது.[8] இவரே தனிப்பட்ட முறையிலும் வென்றார்.[8][5]
- வங்காளதேசஅரசாங்கத்தின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 2007 ஆம் ஆண்டு தொடக்கச் சுற்றுச்சூழல் விருது.
- நேபாளத்தை அடிப்படையாகக் கொண்ட கிரியேட்டிவ் அறிக்கைகள் மற்றும் தெற்காசிய கூட்டாண்மை மூலம் 2008 ஆம் ஆண்டு மகளிர் விருது.
- 2009 ஆம் ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு'.[1]
- 2012 ஆம் ஆண்டு ராமன் மகசேசே விருது[2]
- அமெரிக்க செய்தி இதழான டைம் பத்திரிகையில் இவர் சுற்றுச்சூழலின் ஈரோ என்று அழைக்கப்படுகிறார். [3] [4] [9]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகு- வங்காளதேசத்தில் இழப்பீடு தொடர்பான சட்டங்கள் மற்றும் முடிவு, 2001
- தெற்காசியாவில் சுற்றுச்சூழல் குறித்த நீதித்துறை முடிவுகள் : 2000, 2005 வரை
- தெற்காசியாவின் சுற்றுச்சூழல் தொடர்பான நீதித்துறை முடிவுகள், 2001-2004, 2006
- ஈரநில பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம், 2014
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Syeda Rizwana Hasan". Goldman Environmental Prize. பார்க்கப்பட்ட நாள் 1 May 2009.
- ↑ 2.0 2.1 Sarmiento, Christine Joy (26 July 2012). "2012 Ramon Magsaysay Award winners announced". Asian Journal இம் மூலத்தில் இருந்து 28 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120728182435/http://asianjournal.com/dateline-philippines/headlines/16794-2012-ramon-magsaysay-award-winners-announced-.html. "Syeda Rizwana Hasan, from Bangladesh, is being recognized for 'her uncompromising courage and impassioned leadership in a campaign of judicial activism in Bangladesh that affirms the people's right to a good environment as nothing less than their right to dignity and life.'"
- ↑ 3.0 3.1 3.2 "Belar Shonge Rizwana". Dainik Kaler Kontho. 21 October 2010."Belar Shonge Rizwana". Dainik Kaler Kontho. 21 October 2010.
- ↑ 4.0 4.1 "Time names Rizwana as environment hero". The Daily Star. 4 October 2009.
- ↑ 5.0 5.1 Iqbal Choudhury (2009). Chhutir Dine (in Bengali) (509 ed.). Prothom Alo. p. 5.
- ↑ "Abductors free Abu Bakar" (in en). The Daily Star. 2014-04-18. https://www.thedailystar.net/abductors-free-abu-bakar-20523.
- ↑ "Abduction of Mr. Abu Bakar Siddique, the husband of Ms. Syeda Rizwana…". OMCT (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ 8.0 8.1 Choudhury, Shahidul (18 February 2010). "Syeda Rizwana Hasan, defender of environment". The New Age இம் மூலத்தில் இருந்து 23 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100223031325/http://www.newagebd.com/2010/feb/18/heroes09/05.html.
- ↑ "Syeda Rizwana Hasan". 22 September 2009.