இரித்து இராசு அவசுதி

இரித்து இராசு அவசுதி (Ritu Raj Awasthi)(பிறப்பு 3 ஜூலை 1960) என்பவர் இந்திய நீதிபதி. அவசுதி தற்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.[1] இவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.

மாண்புமிகு தலைமை நீதிபதி
இரித்து இராசு அவசுதி
Ritu Raj Awasthi
தலைமை நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்சதீசு சந்திர சர்மா (செயல்)
நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
13 ஏப்ரல் 2009 – 10 அக்டோபர் 2021
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூலை 1960 (1960-07-03) (அகவை 64)
முன்னாள் கல்லூரிலக்னோ பல்கலைக்கழகம்

நீதிபதி பணி

தொகு

அவசுதி ஜூலை 3, 1960-ல் பிறந்தார். இவர் 1980-ல் பட்டம் பெற்ற பின்னர் பிப்ரவரி 1, 1987 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். இவர் சொத்துரிமை மற்றும் கல்வி விடயங்களில் வழக்கறிஞராகப் பயிற்சி செய்துள்ளார். இவர் 13 ஏப்ரல் 2009 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் திசம்பர் 24, 2010 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார்.[2] இவர் 9 அக்டோபர் 2021 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று அக்டோபர் 11 அன்று பதவியேற்றார்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரித்து_இராசு_அவசுதி&oldid=3995639" இலிருந்து மீள்விக்கப்பட்டது