இருகந்தகம் இருபுரோமைடு

வேதிச் சேர்மம்

இருகந்தகம் இருபுரோமைடு (Disulfur dibromide) S2Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். மஞ்சள்-பழுப்பு நிறத்தில் திரவமாக இருகந்தக இருபுரோமைடு காணப்படுகிறது. காற்றில் இது புகையும். தனிமங்களின் நேரடி சேர்க்கையால் இருகந்தக இருபுரோமைடு தயாரிக்கப்பட்டு வெற்றிட காய்ச்சி வடித்தல் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.[1] தொடர்புடைய கந்தகச் சேர்மமான இருகந்தகம் இருகுளோரைடு போலல்லாமல், இச்சேர்மத்திற்கென்று குறிப்பிட்ட பயன்பாடு ஏதும் இல்லை.

இருகந்தக இருபுரோமைடு
Disulfur dibromide
Ball-and-stick model of sulfur dibromide
Disulfur-dibromide-3D-vdW.png
மேலே (அடர் சிவப்பு): அயோடின், கீழே (மஞ்சள்): கந்தகம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபுரோமோசல்பேன்
வேறு பெயர்கள்
புரோமோசல்பேனைல் தயோ ஐப்போபுரோமைட்டு
இருகந்தக இருபுரோமைடு
இனங்காட்டிகள்
13172-31-1 Y
ChemSpider 109902
EC number 236-119-1
InChI
  • InChI=1S/Br2S2/c1-3-4-2
    Key: JIRDGEGGAWJQHQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123296
  • S(SBr)Br
UNII L9DU8F2SHZ Y
பண்புகள்
S2Br2
வாய்ப்பாட்டு எடை 223.93 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு/மஞ்சள் நீர்மம்
அடர்த்தி 2.703 கி/செ.மீ3
கொதிநிலை 46–48 °C (115–118 °F; 319–321 K) (0.1 மி.மீ.பாதரசம்)
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
2 இல் கந்தகம் அணுக்கள்
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1661
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இருகந்தகம் இருகுளோரைடு (S2Cl2) போன்றே இதன் மூலக்கூறு அமைப்பும் Br−S−S−Br ஆகும். எலக்ட்ரான் விளிம்பு விளைவு அளவீடுகளின்படி, Bra−S−S மற்றும் S−S−Brb தளங்களுக்கு இடையிலான கோணம் 84° ஆகவும் Br−S−S கோணம் 107° ஆகவும் காணப்படுகிறது. S−S பிணைப்பு இடைவெளி 198.0 பைக்கோமீட்டர்களாகும். இந்த அளவு S2Cl2 சேர்மத்தை விட சுமார் 5.0 பைக்கோமீட்டர் குறைவாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. F. Fehér (1963). "Dibromodisulfane". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 1. NY, NY: Academic Press. pp. 377–378.
  2. Zysman-Colman, Eli; Harpp, David (2004). "Comparison of the Structural Properties of Compounds Containing the XSSX Moiety (X = H, Me, R, Cl, Br, F, OR)". Journal of Sulfur Chemistry 25: 291-316. doi:10.1080/17415990410001710163. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருகந்தகம்_இருபுரோமைடு&oldid=3775335" இலிருந்து மீள்விக்கப்பட்டது