இருபியூட்டைல் டார்ட்டரேட்டு

வேதிச் சேர்மம்

இருபியூட்டைல் டார்ட்டரேட்டு (Dibutyl tartrate) என்பது C12H22O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டார்டாரிக் அமிலம் மற்றும் பியூட்டனாலின் ஈரெசுத்தராக இச்சேர்மம் கருதப்படுகிறது.[1] வண்ணப்படிவு பிரிகையியல் முறையில் ஆடி எதிருருவைப் பிரிக்க இது நாற்தொகுதி மைய எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3] மாவு மற்றும் தண்ணீர் கலவையின் பாகுத்தன்மையை அளவிட பயன்படும் ஒரு கருவியில் இது பயன்படுகிறது.[4] ஒரு நெகிழியாக்கியாகவும் இருபியூட்டைல் டார்ட்டரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[5] இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் என்பதால் இருபியூட்டைல் டார்ட்டரேட்டு "பச்சை" என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கும் தன்மை கொண்ட பொருளாகவும் உள்ளது. இருபியூட்டைல் 2,3-ஈரைதராக்சிபியூட்டேன் டையோயேட்டு, டைபியூட்டைல் டார்ட்டரேட்டு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.[6]

இருபியூட்டைல் டார்ட்டரேட்டு

டைபியூட்டைல் டார்ட்டரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபியூட்டைல் 2,3-ஈரைதராக்சிபியூட்டேன் டையோயேட்டு
இனங்காட்டிகள்
87-92-3
ChemSpider 190760
EC number 201-784-9
InChI
  • InChI=1S/C12H22O6/c1-3-5-7-17-11(15)9(13)10(14)12(16)18-8-6-4-2/h9-10,13-14H,3-8H2,1-2H3
    Key: PCYQQSKDZQTOQG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 220014
  • CCCCOC(=O)C(C(C(=O)OCCCC)O)O
UNII 2D1V32IF1E
பண்புகள்
C12H22O6
வாய்ப்பாட்டு எடை 262.30 g·mol−1
அடர்த்தி 1.091
உருகுநிலை 21 °C (70 °F; 294 K)
கொதிநிலை 320 °C (608 °F; 593 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.447
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 91 °C (196 °F; 364 K)
Autoignition
temperature
284 °C (543 °F; 557 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள்

தொகு

இருபியூட்டைல் டார்ட்டரேட்டின் மின்கடத்தா மாறிலி மதிப்பு 9.4 ஆகும்[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dibutyl tartrate". webbook.nist.gov (in ஆங்கிலம்).
  2. Eeckhaut, Ann Van; Michotte, Yvette (2009). Chiral Separations by Capillary Electrophoresis (in ஆங்கிலம்). CRC Press. pp. 258–262. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-6934-1.
  3. Kahle, Kimberly A.; Foley, Joe P. (June 2007). "Two-chiral-component microemulsion electrokinetic chromatography–chiral surfactant and chiral oil: Part 1. Dibutyl tartrate". Electrophoresis 28 (11): 1723–1734. doi:10.1002/elps.200600551. பப்மெட்:17464962. 
  4. Lawton, W.. "Viscoelasticity of Zein-Starch Doughs". Cereal Chern 69 (4): 351–355. https://naldc.nal.usda.gov/download/25224/PDF. 
  5. The Industrial Chemist. Vol. 20. Tothill Press. 1944. p. 98.
  6. Zawada, Krzysztof; Plichta, Andrzej; Jańczewski, Dominik; Hajmowicz, Halina; Florjańczyk, Zbigniew; Stępień, Magdalena; Sobiecka, Agnieszka; Synoradzki, Ludwik (26 May 2017). "Esters of Tartaric Acid, A New Class of Potential "Double Green" Plasticizers". ACS Sustainable Chemistry & Engineering 5 (7): 5999–6007. doi:10.1021/acssuschemeng.7b00814. 
  7. CRC Handbook 84th edition page 6-175