இருபீனைல் கார்பனேட்டு

இருபீனைல் கார்பனேட்டு (Diphenyl carbonate) என்பது C13H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வளையமிலா கார்பனேட்டு எசுத்தர் ஆகும். டைபீனைல் கார்பனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பாலிகார்பனேட்டு பலபடிகள் தயாரிக்கும்போது பிசுபீனால் ஏ உடன் இச்சேர்மம் ஒரு ஒருமம் [2] ஆகவும் பாலிகார்பனேட்டுகள் சிதைவடையும்போது ஒரு விளைபொருளாகவும் [3] இருக்கிறது.

இருபீனைல் கார்பனேட்டு
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபீனைல் கார்பனேட்டு
வேறு பெயர்கள்
பீனைல் கார்பனேட்டு
இனங்காட்டிகள்
102-09-0 Y=
ChemSpider 7315 Y
InChI
  • InChI=1S/C13H10O3/c14-13(15-11-7-3-1-4-8-11)16-12-9-5-2-6-10-12/h1-10H Y
    Key: ROORDVPLFPIABK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C13H10O3/c14-13(15-11-7-3-1-4-8-11)16-12-9-5-2-6-10-12/h1-10H
    Key: ROORDVPLFPIABK-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14507 Y
SMILES
  • O=C(Oc1ccccc1)Oc2ccccc2
UNII YWV401IDYN Y
பண்புகள்
C13H10O3
வாய்ப்பாட்டு எடை 214.216 கி/மோல்
அடர்த்தி 1.1215 கி/செ.மீ3 87 °செ இல்
உருகுநிலை 83 °C (181 °F; 356 K)
கொதிநிலை 306 °C (583 °F; 579 K)
கரையாது
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர், கார்பன் டெட்ராகுளோரைடு, அசிட்டிக் அமிலம் ஆகியனவற்றில் கரையும் [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

2002 ஆம் ஆண்டில் மட்டும் டைபீனைல் கார்பனேட்டு உலக அளவில் 254000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பீனாலை பாசுகீனேற்றம் செய்யும் வழிமுறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது [4]. பல்வேறு நிபந்தனைகளில் இப்பாசுகீனேற்ற வினை நிகழ்ந்தாலும் நிகர வினைக்கான சமன்பாடு இங்கு தரப்பட்டுள்ளது.

2 PhOH + COCl2 → PhOCO2Ph + 2 HCl

பீனாலை ஆக்சிசனேற்ற கார்பனைலேற்றம் செய்யும் முறையைப் பின்பற்றினால் நச்சுத்தன்மை கொண்ட பாசுகீன் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்,

2 PhOH + CO + [O] → PhOCO2Ph + H2O பீனாலை மாற்றுயெசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தியும் இருபீனைல் கார்பனேட்டு தயாரிக்கலாம்.

CH3OCO2CH3 + 2 PhOH → PhOCO2Ph + 2 MeOH இயக்கவியலும் வெப்ப இயக்கவியலும் இவ்வினை முறையை சாதகமாகக் குறிப்பிடவில்லை. உதாரணமாக, உயர்வெப்பநிலைகளில் இருமெத்தில் கார்பனேட்டு விரும்பத்தகாத வகையில் பீனாலை மெத்திலேற்றம் செய்து அனிசோலைத் தருகிறது. [5]

பயன்கள் தொகு

இருபீனைல் கார்பனேட்டுடன் பிசுபீனைல் ஏ வைச் சேர்த்து மாற்று எசுத்தராக்கல் வினை மூலமாக பாலிகார்பனேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பீனால் இணைவிளைபொருளாக உருவாகிறது. பாசுகீன் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது. இந்த வினையை மறுசுழற்சி மீள்வினையாக்குவதனால் பாலிகார்பனேட்டு பீனாலுடன் மாற்று எசுத்தராக்கல் வினையில் ஈடுபட்டு இருபீனைல் கார்பனேட்டும் பிசுபீனால் ஏ வும் உருவாகின்றன [5].

மேற்கோள்கள் தொகு

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–238, ISBN 0-8493-0594-2
  2. Wittcoff, Harold; Reuben, B. G.; Plotkin, Jeffrey S. (2004), Industrial Organic Chemicals, Wiley-IEEE, p. 278, ISBN 978-0-471-44385-8, பார்க்கப்பட்ட நாள் 2009-07-20
  3. ASM International (2003), Characterization and Failure Analysis of Plastics, ASM International, p. 369, ISBN 978-0-87170-789-5, பார்க்கப்பட்ட நாள் 2009-07-20
  4. "Diphenyl Carbonate" (PDF). IPSC Inchem. Archived from the original (PDF) on 2012-01-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
  5. 5.0 5.1 Hans-Josef Buysch (2005), "Carbonic Esters", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a05_197/full
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபீனைல்_கார்பனேட்டு&oldid=3544305" இலிருந்து மீள்விக்கப்பட்டது