இருபீனைல் சல்பைடு
இருபீனைல் சல்பைடு (Diphenyl sulfide) என்பது (C6H5)2S என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டைபீனைல் சல்பைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. கரிமக் கந்தகச் சேர்மமான இது பெரும்பாலும் Ph2S என சுருக்க வடிவத்தில் எழுதப்படுகிறது. வாய்பாட்டிலுள்ள Ph என்ற குறியீடு பீனைலைக் குறிக்கிறது. விரும்பத்தகாத வாசனையுடன் நிறமற்ற திரவமாக இச்சேர்மம் காணப்படுகிறது. மேலும், இதுவோர் அரோமாட்டிக்கு சல்பைடாகும். இம்மூலக்கூறில் இரண்டு பீனைல் வளையங்கள் ஒரு கந்தக அணுவுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பீனைல்சல்பேனைல்பென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
139-66-2 | |
Abbreviations | Ph2S |
Beilstein Reference
|
1907932 |
ChEBI | CHEBI:38959 |
ChEMBL | ChEMBL219876 |
ChemSpider | 8436 |
EC number | 205-371-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
UNII | B5P3Y93MNR |
பண்புகள் | |
(C6H5)2S | |
வாய்ப்பாட்டு எடை | 186.27 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.113 கி/செ.மீ3 (20 °செல்சியசு)[1] ஆவி: 6.42 (காற்று = 1.0) |
உருகுநிலை | −25.9 °C (−14.6 °F; 247.2 K) |
கொதிநிலை | 296 °C (565 °F; 569 K) |
கரையாது | |
கரைதிறன் | டை எத்தில் ஈதர், பென்சீன், கார்பன் டைசல்பைடு கரைப்பான்களில் கரையும். |
ஆவியமுக்கம் | 0.01 25 °செல்சியசில் எக்டாபாசுக்கல்[2] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.6327 |
பிசுக்குமை |
|
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇருபீனைல் சல்பைடு தயாரிப்பதற்கு பல தயாரிப்பு முறைகள் உள்ளன. கந்தக ஒற்றைக்குளோரைடும் பென்சீனும் சேர்ந்து ஈடுபடும் பிரீடல் கிராப்ட்சு வினை போன்ற ஒரு வினையில் இருபீனைல் சல்பைடு உருவாகிறது.[4] உலோக வினையூக்கிகளைப் பயன்படுத்தி வினைகளை இணைப்பதன் மூலமும் இருபீனைல் சல்பைடும் இதன் ஒப்புமைகளும் தயாரிக்கப்படுகின்றன.[5] இருபீனைல் சல்போனை ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.[6]
எடிஃபென்பாசு என்ற பூஞ்சைக் கொல்லியின் ஒளிச்சிதைவு வினையிலும் பெருமூலக்கூறுகள் சிறு மூலக்கூறுகளாகச் சிதைக்கப்பட்டு விளைபொருளாக இருபீனைல் சல்பைடு உருவாகிறது.[7]
மூவரைல் சல்போனியம் உப்புகளைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக இருபீனைல் சல்பைடு பயன்படுகிறது. இவை ஒளிமுன்னெடுப்பிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருபீனைல் சல்பைடை ஆக்சிசனேற்றத்திற்கு உட்படுத்தி சல்பாக்சைடையும் ஐதரசன் பெராக்சைடையும் பெறமுடியும்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "3". CRC Handbook of Chemistry and Physics (90 ed.). 2010. p. 220.
- ↑ 2.0 2.1 "GESTIS-Stoffdatenbank".
- ↑ "Diphenyl sulfide".
- ↑ Hartman, W. W.; Smith, L. A.; Dickey, J. B. (1934). "Diphenyl Sulfide". Organic Syntheses 14: 36. doi:10.15227/orgsyn.014.0036.
- ↑ Lian, Zhong; Bhawal, Benjamin N.; Yu, Peng; Morandi, Bill (2017). "Palladium-catalyzed carbon-sulfur or carbon-phosphorus bond metathesis by reversible arylation". Science 356 (6342): 1059–1063. doi:10.1126/science.aam9041. பப்மெட்:28596362. Bibcode: 2017Sci...356.1059L.
- ↑ Krafft, F.; Vorster, W. (1893). "Ueber Umwandlung des Diphenylsulfons in Diphenylsulfid und Diphenylselenid". Berichte der Deutschen Chemischen Gesellschaft 26 (3): 2813–2822. doi:10.1002/cber.18930260393. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/10.1002/cber.18930260393.
- ↑ Murai, Toshinobu (1977). "Photodecomposition of O -Ethyl S , S -Diphenyl Phosphorodithiolate (Edifenphos)". Agricultural and Biological Chemistry 41: 71–77. doi:10.1080/00021369.1977.10862468.
- ↑ Sato, Kazuhiko; Hyodo, Mamoru; Aoki, Masao; Zheng, Xiao-Qi; Noyori, Ryoji (2001). "Oxidation of Sulfides to Sulfoxides and Sulfones with 30% Hydrogen Peroxide under Organic Solvent- and Halogen-Free Conditions". Tetrahedron 57 (13): 2469–2476. doi:10.1016/s0040-4020(01)00068-0. https://archive.org/details/sim_tetrahedron_2001-03-26_57_13/page/n35.