இருபீனைல் பாதரசம்
இருபீனைல் பாதரசம் (Diphenylmercury) என்பது C12H10Hg என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமப் பாதரச சேர்மமான இது வெள்ளை நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது.[2] இச்சேர்மம் குறிப்பாக நிலைப்புத் தன்மை கொண்டுள்ள காரணத்தால் கரிம உலோகச் சேர்மமாக வரலாற்று ஆர்வத்தை கொண்டுள்ளது. ஆனால் இதன் அதிக நச்சுத்தன்மையின் காரணமாக சில பயன்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. டைபீனைல்மெர்க்குரி என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
587-85-9 | |
ChemSpider | 11004 |
EC number | 209-606-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11488 |
| |
UNII | 9JF9FUI57J |
பண்புகள் | |
C12H10Hg | |
வாய்ப்பாட்டு எடை | 354.80 g mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 2.318 g செ.மீ−3[1] |
உருகுநிலை | 121 முதல் 123 °C (250 முதல் 253 °F; 394 முதல் 396 K) |
கொதிநிலை | 204 °C (399 °F; 477 K)[1] |
எத்தனால், டை எத்தில் ஈதர் ஆகிய கரைப்பான்களில் சிறிதளவு கரையும். பென்சீன், குளோரோபாரம் ஆகிய கரைப்பான்களில் கரையும்[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவணிக ரீதியாக கிடைக்கும், இந்த சேர்மத்தை பல வழிகளில் தயாரிக்கலாம். பீனைல்பாதரச அசிடேட்டை சோடியம் சுடானேட்டுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் இருபீனைல் பாதரசத்தை தயாரிக்கலாம்.[3] பாதரச ஆலைடுகளுடன் பீனைல் மக்னீசியம் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் இது உருவாகும்.[4] புரோமோபென்சீன் சேர்மத்துடன் சோடியம் இரசக்கலவையைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் இருபீனைல் பாதரசம் உருவாகும்.[5]
பாதுகாப்பு
தொகுஇருபீனைல் பாதரசம் அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ள ஒரு வேதிப் பொருளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Lide, D. R. (2008). CRC Handbook of Chemistry and Physics, 89th Edition. CRC Press. pp. 3–518. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0488-0.
- ↑ Glidewell, C.; Low, J. N.; Wardell, J. L. (2005). "Diphenylmercury, redetermined at 120 K: sheets built from a single C-H···π(arene) hydrogen bond". Acta Crystallographica C 61 (2): m107–m108. doi:10.1107/S0108270104034134. பப்மெட்:15695887. http://journals.iucr.org/c/issues/2005/02/00/sk1803/sk1803.pdf.
- ↑ Maynard, J. L. (1924). "The Direct Mercuration of Benzene and the Preparation of Mercury Diphenyl". Journal of the American Chemical Society 46 (6): 1510–1512. doi:10.1021/ja01671a024.
- ↑ Borgstrom, P.; Dewar, M. M. (1929). "The Preparation of Mercury Diphenyl by Use of the Grignard Reagent". Journal of the American Chemical Society 51 (11): 3387–3389. doi:10.1021/ja01386a030.
- ↑ Calvery, H. O. (1929). "Diphenylmercury". Organic Syntheses 9: 54. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0228.; Collective Volume, vol. 1, p. 228