இருபுரோமின் ஐந்தாக்சைடு
வேதிச்சேர்மம்
இருபுரோமின் ஐந்தாக்சைடு (Dibromine pentoxide) என்பது Br2O5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நிறமற்றுக் காணப்படும் இச்சேர்மம் -20 0 செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இருபுரோமின் ஐந்தாக்சைடு O2Br-O-BrO2 என்ற மூலக்கூறு அமைப்புடனும் வளைந்த Br-O-Br பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 121.2° ஆகவும் கொண்ட அமைப்பில் காணப்படுகிறது. ஒவ்வொரு BrO3 குழுவும் உச்சியில் புரோமின் அணுவைக் கொண்ட பட்டைக்கூம்பு வடிவத்துடன் காணப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபுரோமின் பென்டாக்சைடு
| |
வேறு பெயர்கள்
புரோமின் ஐந்தாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
58572-43-3 | |
பண்புகள் | |
Br2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 239.805 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
உருகுநிலை | -20°செ இல் சிதைவடைகிறது.[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமின் ஈராக்சைடு புரோமின் முப்புளோரைடு புரோமின் ஐம்புளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஆக்சிசன் இருபுளோரைடு இருகுளோரின் ஓராக்சைடு குளோரின் ஈராக்சைடு அயோடின் ஈராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
தயாரிப்பு
தொகுபுரோமின் கரைசலை ஓசோன் கலந்த இருகுளோரோமீத்தேனுடன் தாழ்வெப்பநிலைகளில் வினைபடுத்துவதாலும் புரோப்பியோநைட்ரைலை மீள்படிகமாக்கலாலும் இருபுரோமின் ஐந்தாக்சைடு தயாரிக்க முடியும்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press, p. 74, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3, பார்க்கப்பட்ட நாள் 25 August 2015
- ↑ 2.0 2.1 Wiberg, Egon (2001). Wiberg, Nils (ed.). Inorganic chemistry (1st ed.). San Diego, Calif.: Academic Press. p. 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123526519.