புரோப்பியோநைட்ரைல்

புரோப்பியோநைட்ரைல் (Propionitrile) என்பது எத்தில் சயனைடு மற்றும் புரோப்பேநைட்ரைல் என்றும் அழைக்கப்படுகிறது. CH3CH2CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் காணப்படும் இக்கரிமச் சேர்மம் ஓர் எளிய அலிஃபாட்டிக் நைட்ரைல் ஆகும். நிறமற்றதாகக் காணப்படும் புரோப்பியோநைட்ரைல் நீரில் கரையக்கூடிய திரவமாக உள்ளது. பல கரிமச் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு முன்னோடியாக இருக்கும் இச்சேர்மம் ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது[5] .

புரோப்பியோநைட்ரைல்
Skeletal formula of propanenitrile
Skeletal formula of propanenitrile
Skeletal formula of propanenitrile with all explicit hydrogens added
Skeletal formula of propanenitrile with all explicit hydrogens added
Ball and stick model of propanenitrile
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோப்பியோநைட்ரைல்[3]
வேறு பெயர்கள்
  • சயனோயீத்தேன்[1]
  • எத்தில் சயனைடு[1]
  • புரோப்பியோநைட்ரைல்[2]
இனங்காட்டிகள்
107-12-0 Y
Beilstein Reference
773680
ChEBI CHEBI:26307
ChEMBL ChEMBL15871 N
ChemSpider 7566 Y
EC number 203-464-4
InChI
  • InChI=1S/C3H5N/c1-2-3-4/h2H2,1H3 Y
    Key: FVSKHRXBFJPNKK-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த புரோப்பியோநைட்ரைல்
பப்கெம் 7854
வே.ந.வி.ப எண் UF9625000
SMILES
  • CCC#N
UN number 2404
பண்புகள்
C3H5N
வாய்ப்பாட்டு எடை 55.08 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் இனிப்பான நறுமணமுள்ள ஈதரின் மணம்[4]
அடர்த்தி 772 மி.கி மி.லி−1
உருகுநிலை 173 முதல் 187 கெல்வின்
கொதிநிலை 369 முதல் 371 கெல்வின்
11.9% (20 °செ) இல்[4]
மட. P 0.176
ஆவியமுக்கம் 270 μமோல் Pa−1 kg−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.366
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
15.5 கியூ மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−1.94884–−1.94776 மீயூ மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
189.33 யூ கி−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 105.3 யூ கி−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H300, H310, H319, H332
P210, P264, P280, P301+310, P302+350, P305+351+338
ஈயூ வகைப்பாடு Highly Flammable F Very Toxic T+
S-சொற்றொடர்கள் S16, S36/37, S45
தீப்பற்றும் வெப்பநிலை 6 °C (43 °F; 279 K)
வெடிபொருள் வரம்புகள் 3.1%-?[4]
Lethal dose or concentration (LD, LC):
39 mg kg−1 (வாய்வழி, எலி)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[4]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 6 ppm (14 மி.கி/மீ3)[4]
உடனடி அபாயம்
N.D.[4]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

அக்ரைலோநைட்ரைலை ஐதரசனேற்றம் செய்து தொழிற்சாலைகளில் பெருமளவில் புரோப்பியோநைட்ரைல் தயாரிக்கப்படுகிறது. புரோப்பனாலை அமோக்சினேற்றம் செய்தும் இதைத் தயாரிக்கிறார்கள். புரோப்பனாலுக்கு பதிலாக புரோப்பியனால்டிகைடும் இவ்வினையில் பயன்படுத்தலாம்.:[5]

CH3CH2CH2OH + O2 + NH3 → CH3CH2CN + 3 H2O

அக்ரோநைட்ரைலை , அடிப்போநைட்ரைலாக்கும் வினைகளில் உடன் விளைபொருளாக புரோப்பியோநைட்ரைல் உண்டாகிறது.

புரோப்பியோனமைடை நீர்நீக்கம் செய்தல், அல்லது அக்ரைலோ நைட்ரைலை வினையூக்கி முன்னிலையில் ஒடுக்கம் செய்தல் அல்லது எத்தில் சல்பேட்டு மற்றும் பொட்டாசியம் சயனைடை காய்ச்சி வடித்தல் போன்ற முறைகளில் ஆய்வகங்களில் புரோப்பியோநைட்ரைல் தயாரிக்கப்படுகிறது.

பயன்கள் தொகு

அசிட்டோநைட்ரைலைப் போலவே புரோப்பியோநைட்ரைலும் ஒரு கரைப்பானாக ஆனால் சற்று அதிகமான கொதிநிலையைக் கொண்ட கரைப்பானாக விளங்குகிறது. புரோப்பைல் அமீன்களை ஐதரசனேற்றம் செய்யும் முன்னோடிச் சேர்மமாகவும் இது இருக்கிறது. அவுபென்-ஒய்சிஃசு வினையில் புளோபுரோப்பியோன் மருந்து தயாரிப்பில் சி-3 வகை கட்டுறுப்புத் தொகுதியாக இருக்கிறது.

முன்பாதுகாப்பு தொகு

நச்சுத்தன்மை உள்ள ஒரு கரிமச் சேர்மமாக புரோப்பியோநைட்ரைல் இருக்கிறது. ஆனால் எலிகளைக் கொல்லும் எல்டி50 அளவு 230 மி.கி/கி.கி என்ற அளவில் சற்று வலிமை குறைந்த, நச்சாக இருக்கிறது[5]. வளர்சிதை மாற்றத்தில் புரோப்பியோநைட்ரைல், சயனைடை வெளிவிடுவதால் , சினைப்பருவ குறைபாடுகளுக்கான காரணியாக உள்ளது[6].

தெற்கு கரோலினாவில் உள்ள கலாமா (வேகா) தொழிற்சாலையில் அக்ரோநைட்ரைலில் இருந்து நிக்கல் வினையூக்கி முன்னிலையில் புரோப்பியோநைட்ரைல் தயாரிக்கையில் 1979 ஆம் ஆண்டில் ஒரு வெடிவிபத்தும் நிகழ்ந்திருக்கிறது[7]. தெற்கு கரோலினாவில் உள்ள இத்தளம் தற்பொழுது தூய்மைப் படுத்த வேண்டிய அதிமுக்கியத் தளமாக முக்கியத்துவத்துடன் கவனிக்கப்படுகிறது[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Propionitrile". NIOSH Pocket Guide to Chemical Hazards. USA: Centers for Disease Control and Prevention. 4 April 2011. Identification. பார்க்கப்பட்ட நாள் 1 November 2013.
  2. Merck Index, 11th Edition, 7839
  3. "propionitrile - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 6 June 2012.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0530". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. 5.0 5.1 5.2 Peter Pollak, Gérard Romeder, Ferdinand Hagedorn, Heinz-Peter Gelbke "Nitriles" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a17_363
  6. Willhite, Calvin C.; Ferm, Vergil H.; Smith, Roger P. (1981). "Teratogenic effects of aliphatic nitriles". Teratology 23 (3): 317–323. doi:10.1002/tera.1420230306. பப்மெட்:6266064. 
  7. 7.0 7.1 First Five-Year Review Report for Kalama Specialty Chemicals, Beaufort, Beaufort County, South Carolina, United States Environmental Protection Agency

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பியோநைட்ரைல்&oldid=3508159" இலிருந்து மீள்விக்கப்பட்டது