இருபுரோமோகுளோரோமெத்தேன்

வேதிச் சேர்மம்

இருபுரோமோகுளோரோமெத்தேன் (Dibromochloromethane) CHBr2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். [1][2] நிறமற்றது முதல் மஞ்சள் நிறம் வரையிலான நிறம் கொண்ட இச்சேர்மம் எளிதில் தீப்பற்றாது. கனமான இச்சேர்மம் இனிப்பு மணம் கொண்டதாக உள்ளது. மீத்தேனின் நான்கு ஐதரசன்களில் மூன்று ஐதரசன்கள் ஆலசன்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருப்பதால் இதை மூவாலோமெத்தேன் என்றும் கூறலாம். [3] கடலில் கடற்பாசிகளால் சிறிய அளவுகளில் இருபுரோமோகுளோரோமெத்தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இருபுரோமோகுளோரோமெத்தேன்
Skeletal formula of dibromochloromethane
Spacefill model of dibromochloromethane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருபுரோமோ(குளோரோ)மெத்தேன்
இனங்காட்டிகள்
124-48-1 Y
Beilstein Reference
1731046
ChEMBL ChEMBL157093 Y
ChemSpider 29036 Y
EC number 204-704-0
InChI
  • InChI=1S/CHBr2Cl/c2-1(3)4/h1H Y
    Key: GATVIKZLVQHOMN-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14692 Y
ம.பா.த chlorodibromomethane
பப்கெம் 31296
வே.ந.வி.ப எண் PA6360000
SMILES
  • ClC(Br)Br
UNII 3T4AJR1H24 Y
பண்புகள்
CHBr2Cl
வாய்ப்பாட்டு எடை 208.28 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 2.451 கி மில்லி−1
உருகுநிலை −22 °C (−8 °F; 251 K)
கொதிநிலை 119 முதல் 120 °C (246 முதல் 248 °F; 392 முதல் 393 K) at 99.7 கிலோபாசுக்கல்
மட. P 2.206
8.6 μமோல் பாசுக்கல்−1 கி.கி−1
-75.1·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.547
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302
Lethal dose or concentration (LD, LC):
370 மி.கி கி.கி−1 (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பயன்கள் தொகு

இருபுரோமோகுளோரோமெத்தேன் முன்னர் தீச்சுடர் தணிப்பியாகவும், வேதிப்பொருள்கள் தயாரிப்பில் ஓர் இடைநிலையாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்று இச்சேர்மம் ஓர் ஆய்வக வினையாக்கியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குளோரினுடன் இயற்கை கரிமப் பொருட்கள் வினைபுரியும்போதும் தண்ணிரிலுள்ள புரோமைடு அயனிகளோடு வினைபுரியும்போதும் இருபுரோமோகுளோரோமெத்தேன் ஒரு தொற்றுநீக்க உடன் விளை பொருளுமாகவும் கருதப்படுகிறது. எனவே குளோரினேற்றம் அடைந்த குடிநீரில் பொதுவாக இச்சேர்மம் காணப்படுகிறது. அசைபோடும் விலங்குகளில் மீத்தேன் உற்பத்தியை 79% அளவுக்கு இதனால் குறைக்க இயலும். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Dibromochloromethane". Sigma Aldrich. sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  2. "Public Health Statement for Bromoform and Dibromochloromethane". atsdr.cdc.gov. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  3. "BROMOFORM AND DIBROMOCHLOROMETHANE" (PDF). atsdr.cdc.gov. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  4. Identification of bioactives from the red seaweed Asparagopsis taxiformis that promote antimethanogenic activity in vitro

புற இணைப்புகள் தொகு