இருபுரோமோபுளோரோமீத்தேன்
இருபுரோமோபுளோரோமீத்தேன் (Dibromofluoromethane) என்பது CHBr2F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கலப்பு ஆலோ மீத்தேனான இச்சேர்மம் ஆல்ககால், அசிட்டோன், பென்சீன் மற்றும் குளோரோஃபார்ம் ஆகியனவற்றில் கரைகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபுரோமோபுளோரோமெத்தேன்
| |
வேறு பெயர்கள்
புளோரோயிருபுரோமோமீத்தேன்
| |
இனங்காட்டிகள் | |
1868-53-7 | |
ChemSpider | 55219 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 61280 |
| |
UNII | B0517W9BLP |
பண்புகள் | |
CHBr2F | |
வாய்ப்பாட்டு எடை | 191.83 கி/மோல் |
தோற்றம் | நீர்மம் |
அடர்த்தி | 2.421 கி/செ.மீ3 20 °செல்சியசில் |
உருகுநிலை | −78 °C (−108 °F; 195 K) |
கொதிநிலை | 64.9 °C (148.8 °F; 338.0 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கரிமவெள்ளீய ஐதரைடுடன் இருபுரோமோபுளோரோமீத்தேன் சேர்த்து, முப்பியூட்டைலின் ஐதரைடு வழியாக குறைத்துச் சிதைத்தல் முறை வினை மூலம் புரோமின் நீக்கம் செய்து புரோமோபுளோரோமீத்தேன் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.[1]
இதனுடைய ஓசோன் குறைப்புத் திறல் மதிப்பு 1.0 ஆக இருப்பதால் இது முதல்வகை ஓசோன் படலம் அழிக்கும் வேதிப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.