இருபென்சைல் சல்பைடு

வேதிச் சேர்மம்

இருபென்சைல் சல்பைடு (Dibenzyl sulfide) என்பது C14H14S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு சமச்சீர் தயோயீத்தராகும். கட்டமைப்பில் இரண்டு பென்சைல் குழுக்கள் (C6H5CH2-) சல்பைடு பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. நிறமற்றதாக அல்லது வெள்ளை நிறமுள்ள திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. முனைவற்ற கரைப்பான்களில் கரைகிறது.

இருபென்சைல் சல்பைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1′-[சல்பேடையில்பிசு(மெத்திலீன்)]
டைபென்சீன்
வேறு பெயர்கள்
1,1′-[தயோபிசு(மெத்திலீன்)]டைபென்சீன்; பென்சைல் தயோயீத்தர்; இருபென்சைல் சல்பைடு
இனங்காட்டிகள்
538-74-9
Beilstein Reference
1911157
ChEMBL ChEMBL1369381
ChemSpider 10407
EC number 208-703-6
InChI
  • InChI=1S/C14H14S/c1-3-7-13(8-4-1)11-15-12-14-9-5-2-6-10-14/h1-10H,11-12H2
    Key: LUFPJJNWMYZRQE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10867
  • C1=CC=C(C=C1)CSCC2=CC=CC=C2
UNII Q08048624M
UN number 3335
பண்புகள்
C14H14S
வாய்ப்பாட்டு எடை 214.33 g·mol−1
உருகுநிலை 49.5 °C (121.1 °F; 322.6 K)
கொதிநிலை 322 °C (612 °F; 595 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கட்டமைப்பு

தொகு

Pbcn (எண் 60) என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் a=13.991 Å b=11.3985 Å c 7.2081 Å. அலகு செல் பரிமாணங்களுடன் இருபென்சைல் சல்பைடு படிகமாகிறது. வாயு நிலையில் உள்ள மூலக்கூறுகள் திண்மநிலையில் உள்ள அதே C2 சமச்சீர் கொண்ட அதே வடிவத்தை ஏற்கின்றன.[1]

தயாரிப்பு

தொகு

பொட்டாசியம் சல்பைடை பென்சைல் குளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தி தொடர்ந்து வடிகட்டுவதன் மூலம் வணிகரீதியாக இருபென்சைல் சல்பைடு உற்பத்தி செய்யப்படுகிறது.[2] இருபென்சைல் இருசல்பைடு சேமத்திலிருந்து பாசுபீன் வினையாக்கியைப் பயன்படுத்தி சல்பைடு நீக்கம் செய்தும் இது பெறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Hansson, Christian (19 May 2006). "Dibenzyl sulfide at 150 K". Acta Crystallographica Section E 62 (6): o2377–o2379. doi:10.1107/S1600536806017491. 
  2. Lewis, R.J. Sr, ed. (1993). Hawley's Condensed Chemical Dictionary (12 ed.). New York, NY: Van Nostrand Rheinhold Co. p. 137.
  3. Harpp, David N.; Smith, Roger A. (1978). "Sulfide Synthesis: Benzyl Sulfide". Org. Synth. 58: 138. doi:10.15227/orgsyn.058.0138. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபென்சைல்_சல்பைடு&oldid=3933165" இலிருந்து மீள்விக்கப்பட்டது