இருமெத்தில்மக்னீசியம்
இருமெத்தில்மக்னீசியம் (Dimethylmagnesium) என்பது C2H6Mg என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமமக்னீசியம் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் டைமெத்தில்மக்னீசியம் என்று அழைக்கப்படும் இச்சேர்மம் பிற டை ஆல்கைல்மக்னீசியம் சேர்மங்கள் தயாரிப்பதைப் போலவே தயாரிக்கப்படுகிறது. மெத்தில்மக்னீசியம் ஆலைடு கரைசலுடன் குறைந்தபட்சம் அதற்குச் சமமான டையாக்சேன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது:[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைமெத்தில்மக்னீசியம்
| |
இனங்காட்டிகள் | |
2999-74-8 | |
ChemSpider | 10430979 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 18141 |
| |
பண்புகள் | |
C2H6Mg | |
வாய்ப்பாட்டு எடை | 54.38 g·mol−1 |
அடர்த்தி | 0.96 கி/செ.மீ3 |
வினைபுரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- 2 CH3MgX + dioxane (CH3)2Mg + MgX2(டையாக்சேன்)
மக்னீசியம் டை ஆலைடு மற்றும் டையாக்சேன் சேர்மங்களின் கூட்டமைப்பு ஒரு திண்மமாக வீழ்படிவாகி செலெங்க் சமநிலைக்கு நகர்த்துகிறது. இதனால் டை ஆல்கைல்மக்னீசியம் சேர்மம் கரைசலில் தேங்குகிறது. நான்முக மக்னீசியம் மையங்கள் ஒவ்வொன்றும் மெத்தில் தொகுதி இணைப்புகளால் சூழப்பட்ட ஒரு பலபடி அமைப்பில் இருமெத்தில்மக்னீசியம் காணப்படுகிறது. இவ்வமைப்பை எக்சு கதிர் படிகவியல் ஆய்வும் உறுதிப்ப்படுத்துகிறது. Mg-C அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு இடைவெளிகள் 224 பை.மீ ஆகும்[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Arthur C. Cope (1935). "The Preparation of Dialkylmagnesium Compounds from Grignard Reagents". J. Am. Chem. Soc. 57 (11): 2238–2240. doi:10.1021/ja01314a059.
- ↑ Anteunis, M. (1962). "Studies of the Grignard Reaction. II. Kinetics of the Reaction of Dimethylmagnesium with Benzophenone and of Methylmagnesium Bromide-Magnesium Bromide with Pinacolone". J. Org. Chem. 27 (2): 596–598. doi:10.1021/jo01049a060.
- ↑ Weiss, E. (1964). "Die Kristallstruktur des Dimethylmagnesiums". J. Organomet. Chem. 2 (4): 314–321. doi:10.1016/S0022-328X(00)82217-2.
.