இரும்பாடி காசி விசுவநாதர் கோயில்
இரும்பாடி காசி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியின் இரும்பாடி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]
இரும்பாடி காசி விசுவநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°02′47″N 77°56′13″E / 10.046475°N 77.937005°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை மாவட்டம் |
அமைவிடம்: | இரும்பாடி, சோழவந்தான் |
சட்டமன்றத் தொகுதி: | சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | தேனி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 221 m (725 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | காசி விசுவநாதர் |
தாயார்: | விசாலாட்சி |
குளம்: | கிணற்று தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | பங்குனி பிரம்மோற்சவம், மாசி மகம், மகா சிவராத்திரி, அன்னாபிசேகம், ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 221 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இரும்பாடி காசி விசுவநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°02′47″N 77°56′13″E / 10.046475°N 77.937005°E ஆகும்.
இக்கோயிலில் மூலவர் காசி விசுவநாதர் மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். இக்கோயிலின் தீர்த்தம் கிணற்று தீர்த்தம்; தல விருட்சம் வில்வ மரம் ஆகும். சிவாகம முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன. காசி விசுவநாதர், விசாலாட்சி, காசிலிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடிவிலான நாகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]
பங்குனி பிரம்மோற்சவம், மாசி மகம், மகா சிவராத்திரி, அன்னாபிசேகம், ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை மற்றும் பிரதோசம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ ValaiTamil. "அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ மாலை மலர் (2021-07-07). "இரும்பாடி காசி விஸ்வநாதர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
- ↑ "Kasi viswanathar Temple : Kasi viswanathar Kasi viswanathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.