இரும்பு(II) சல்பைடு

(இரும்பு(II)சல்ஃபைட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரும்பு(II) சல்பைடு (Iron(II) sulfide) என்பது FeS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரசு சல்பைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இரும்பு(II) சல்பைடுகள் பெரும்பாலும் விகிதவியல் அல்லாத அளவுகளில் இரும்பு குறைபாடு கொண்டவையாக இருக்கும். அனைத்தும் கருப்பு நிறம் கொண்டவையாகவும் தண்ணீரில் கரையாதவையாகவும் இருக்கும்.

இரும்பு (II) சல்ஃபைடு
இரும்பு(II) சல்ஃபைடு மாதிரி
இரும்பு(II) சல்ஃபைடின் பந்து-குச்சி உருவமைப்பு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரும்பு சல்ஃபைடு, ஃபெரசு சல்ஃபைடு, கறுப்பு இரும்பு சல்ஃபைடு
இனங்காட்டிகள்
1317-37-9 Y
ChemSpider 8466211 Y
InChI
  • InChI=1S/Fe.S/q+2;-2 Y
    Key: GNVXPFBEZCSHQZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Fe.S/q+2;-2
    Key: GNVXPFBEZCSHQZ-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10290742
  • [Fe+2].[S-2]
பண்புகள்
FeS
வாய்ப்பாட்டு எடை 87.910 கி/மோல்
தோற்றம் கரிய திண்மம், சில வேளைகளில் தூளாகப் பெறப்படும்
அடர்த்தி 4.84 கி/செ.மீ3
உருகுநிலை 1194 °செல்சியசு
கரையாது
கரைதிறன் காடிகளில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் காற்றில் தன்னிச்சையாகத் தீப்பிடிக்கக் கூடியது
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் இரும்பு(II) ஆக்சைடு
இரும்பு இருசல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

இரும்பையும் கந்தகத்தையும் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் இரும்பு(II) சல்பைடு உருவாகும்.:[1]

Fe + S → FeS

FeS ஆனது நிக்கல் ஆர்சனைடு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இதில் எண்முக Fe மையங்கள் மற்றும் முக்கோணப் பட்டக சல்பைடு தளங்கள் உள்ளன.

வேதி வினைகள்

தொகு

இரும்பு(II) சல்ஃபைடு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து அழுகிய முட்டையின் நாற்றமுடைய நச்சுவாயுவான ஐதரசன் சல்பைடை உருவாக்கும்.:[2]

FeS + 2 HCl → FeCl2 + H2S
FeS + H2SO4 → FeSO4 + H2S

ஈரமான காற்றில், இரும்பு சல்பைடுகள் நீரேற்றப்பட்ட இரும்பு சல்பேட்டாக ஆக்சிசனேற்றம் அடைகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. H. Lux "Iron (II) Sulfide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1502.
  2. Hydrogen Sulfide Generator
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(II)_சல்பைடு&oldid=4157375" இலிருந்து மீள்விக்கப்பட்டது