இரும்பு(II) அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

இரும்பு(II) அசிட்டேட்டு (Iron(II) acetate) என்பது Fe(CH3COO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் ஒருங்கிணைவு அணைவுச் சேர்மமாகும். அசுத்த மாதிரிகள் சிறிது நிறத்தில் இருந்தாலும் இது ஒரு வெள்ளை நிற திண்மப் பொருளாகும்.[1] ஓர் இளம் பச்சை நிற நான்கு நீரேற்று அறியப்படுகிறது. இது தண்ணீரில் நன்றாகக் மிகவும் கரையும்.

இரும்பு(II) அசிட்டேட்டு
Skeletal formula of iron(II) acetate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
பெரசு அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
3094-87-9 Y
ChemSpider 17323 Y
InChI
 • InChI=1S/2C2H4O2.Fe/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2 Y
  Key: LNOZJRCUHSPCDZ-UHFFFAOYSA-L Y
 • InChI=1/2C2H4O2.Fe/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2
  Key: LNOZJRCUHSPCDZ-NUQVWONBAS
யேமல் -3D படிமங்கள் Image

ஒருங்கிணைவு வடிவம்
Image அயன வடிவம்

பப்கெம் 18344
வே.ந.வி.ப எண் AI3850000
 • CC(O1)O[Fe]12OC(O2)C ஒருங்கிணைவு வடிவம்
 • CC(=O)[O-].[Fe+2].CC(=O)[O-] அயன வடிவம்
UNII L80I7M6D3Q Y
பண்புகள்
C4H6FeO4
வாய்ப்பாட்டு எடை 173.93 g·mol−1
தோற்றம் வெண் படிகங்கள் (நீரிலி)
இளம் பச்சை நிறப் படிகங்கள் (நான்கு நீரேற்று)
மணம் Odorless
அடர்த்தி 1.734 கி/செ.மீ3 (−73 °C)[1]
உருகுநிலை 190–200 °C (374–392 °F; 463–473 K)
decomposes[2][3]
கரையும்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு Orthorhombic, oP75 (200 K)
புறவெளித் தொகுதி Pbcn, எண். 60 (200 K)[1]
Lattice constant a = 18.1715(4) Å, b = 22.1453(5) Å, c = 8.2781(2) Å (200 K)
படிகக்கூடு மாறிலி
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[3]
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335[3]
P261, P305+351+338[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு தொகு

 
இரும்பு அசிடேட்டை ஓர் எளிய உப்பாக பார்க்க முடியும் என்றாலும்,எக்சுகதிர் படிகவியல் ஆய்வு இதன் கட்டமைப்பை ஒரு சிக்கலான பல்லுருவத் தோற்ற கட்டமைப்பாக வெளிப்படுத்துகிறது.[1]

இரும்புத் தூள் மின்னாற்பகுப்பில் அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்து ஐதரசன் வாயுவை வெளியேற்றி இரும்பு அசிடேட்டைக் கொடுக்கிறது.[1]

Fe + 2 CH3CO2H → Fe(CH3CO2)2 + H2

இரும்பு ஆக்சைடு அல்லது இரும்பு ஐதராக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நீரேற்றப்பட்ட இரும்பு(II) அசிட்டேட்டு வடிவம் உருவாக்கப்படுகிறது.[5]

அசிட்டிக் அமிலத்துடன் இரும்புத் துண்டுகளை சேர்த்து வினைபுரியச் செய்யும் போது பல்வேறு இரும்பு(II) மற்றும் இரும்பு(III) அசிடேட்டுகளின் பழுப்பு நிற சேர்மம் கிடைக்கிறது. இது சாயமிடுதலில் பயன்படுத்தப்படுகிறது.[6]

கட்டமைப்பு தொகு

அசிடேட்டு ஈந்தணைவிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட எண்முக Fe(II) மையங்களைக் கொண்ட பல்லுருவக் கட்டமைப்பை இரும்பு(II) அசிட்டேட்டு ஏற்றுக்கொள்கிறது. இது ஓர் ஒருங்கிணைப்பு பலபடியாகும்.

பயன்கள் தொகு

சாயத் தொழிலில் இரும்பு அசிடேட்டு ஒரு நிறங்கௌவி சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது. கருங்காலி மரத்தை உருவாக்குவது இத்தகைய ஒரு செயல்முறையாகும்.[7]

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 Weber, Birgit; Betz, Richard; Bauer, Wolfgang; Schlamp, Stephan (2011). "Crystal Structure of Iron(II) Acetate". Zeitschrift für anorganische und allgemeine Chemie 637: 102–107. doi:10.1002/zaac.201000274. 
 2. 2.0 2.1 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
 3. 3.0 3.1 3.2 3.3 Sigma-Aldrich Co., Iron(II) acetate. Retrieved on 2014-05-03.
 4. "MSDS of Ferrous acetate". fishersci.ca. Fair Lawn: Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 2014-08-02.
 5. "Synthesis of Iron(II) acetate hydrate (ferrous acetate)". Archived from the original on 2013-08-25. பார்க்கப்பட்ட நாள் 2009-01-07.
 6. Wildermuth, Egon; Stark, Hans; Friedrich, Gabriele; Ebenhöch, Franz Ludwig; Kühborth, Brigitte; Silver, Jack; Rituper, Rafael (2005), "Iron Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a14_591
 7. Ebonizing Wood with Ferric Acetate
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(II)_அசிட்டேட்டு&oldid=3781751" இலிருந்து மீள்விக்கப்பட்டது