இரும்பு(II) பியூமரேட்டு
இரும்பு(II) பியூமரேட்டு (Iron(II) fumarate) C4H2FeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெரசு பியூமரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பியூமரிக் அமிலத்தின் இரும்பு(II) உப்பு என வகைப்படுத்தப்படுகிறது. இது ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் தூளாகத் தோன்றுகிறது. இரும்புச் சக்து பற்றாக்குறையை நிவர்த்திக்கப் பயன்படும் உணவு நிரப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது. தூய இரும்பு பியூமரேட்டில் 32.87% இரும்புச் சத்து உள்ளது. எனவே 300 மில்லி கிராம் இரும்பு பியூமரேட்டின் ஒரு மாத்திரையில் 98.6 மில்லி கிராம் இரும்பு (548% தினசரி மதிப்பு 18 மில்லி கிராம் என்ற தினசரி உட்கொள்ளல் பரிந்துரை அடிப்படையில்) இருக்கும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(2+)
| |
வேறு பெயர்கள்
பெரசு பியூமரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
141-01-5 | |
ChEMBL | ChEMBL1200640 |
ChemSpider | 10607713 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6433164 |
| |
UNII | R5L488RY0Q |
பண்புகள் | |
C4H2FeO4 | |
வாய்ப்பாட்டு எடை | 169.90 g·mol−1 |
தோற்றம் | ஆரஞ்சு சிவப்பு தூள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 2.435 கி/செ.மீ3 (20 °செல்சியசு) |
உருகுநிலை | 280 °C (536 °F; 553 K) |
சிறிதளவு கரையும் | |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3850 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதற்கு அல்லது தடுப்பதற்கு இரும்புச் சேர்க்கையாக இரும்பு(II) பியூமரேட்டு பெரும்பாலும் வாய்வழியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Santiago, Palacios (2012-05-02). "Ferrous versus Ferric Oral Iron Formulations for the Treatment of Iron Deficiency: A Clinical Overview" (in en). The Scientific World Journal 2012: e846824. doi:10.1100/2012/846824. பன்னாட்டுத் தர தொடர் எண்:2356-6140. https://www.hindawi.com/journals/tswj/2012/846824/.