இரும்பு(II) புரோமைடு

கனிம வேதியியல் சேர்மம்

இரும்பு(II) புரோமைடு (Iron(II) bromide) FeBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலிச் சேர்மமான இரும்பு(II) புரோமைடு மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் பாராகாந்தத்தன்மை கொண்ட ஒரு திண்மமாக காணப்படுகிறது. ஆய்வகங்களில் பல இரும்புச் சேர்மங்கள் தயாரிப்பதற்கான முன்னோடியாகவும் இருக்கிறது. FeBr2 சேர்மத்தின் பல நீரேற்று வடிவங்களும் அறியப்படுகின்றன.

இரும்பு(II) புரோமைடு
Iron(II) bromide
Iron(II) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) புரோமைடு
வேறு பெயர்கள்
பெரசுபுரோமைடு
இனங்காட்டிகள்
7789-46-0 Y
ChemSpider 74218 Y
InChI
  • InChI=1S/2BrH.Fe/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: GYCHYNMREWYSKH-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2BrH.Fe/h2*1H;/q;;+2/p-2
    Key: GYCHYNMREWYSKH-NUQVWONBAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 659170
  • [Fe+2].[Br-].[Br-]
பண்புகள்
FeBr2
வாய்ப்பாட்டு எடை 215.65 கி மோல்−1
தோற்றம் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத் திண்மம்
அடர்த்தி 4.63 கி.செ.மீ−3, திண்மம்
உருகுநிலை 684 °C (1,263 °F; 957 K) (நீரிலி)
27 ° செ (அறுநீரேற்று)
கொதிநிலை 934 °C (1,713 °F; 1,207 K)
கரையும்
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் THF, மெத்தனால், எத்தனால்
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hP3, இடக்குழு = P-3m1, No. 164
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஏதுமில்லை
R-சொற்றொடர்கள் R20 R36/37/38
S-சொற்றொடர்கள் S26 S36
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரும்பு(II) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கட்டமைப்பு

தொகு

பெரும்பாலான உலோக ஆலைடுகள் போல இரும்பு(II) புரோமைடும் பல்பகுதிய மூலக்கூற்று கட்டமைப்பை ஏற்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட இரும்பு மையங்கள் ஆலைடுகளுடன் குறுக்கு தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளன. புரோமைடு அயனிகளின் நெருக்கப் பொதிவு அடுக்குத் தோற்றத்துடன் காட்மியம் அயோடைடு கட்டமைப்பில் இச்சேர்மம் படிகமாகிறது. இவற்றிற்கு இடையில் Fe(II) அயனிகள் எண்முகத் துளைகளில் இடம்பெற்றுள்ளன[1]. புரோமைடு அயனிகளின் நெருக்கப் பொதிவு FeCl2 சேர்மத்தின் பொதிவிலிருந்து சிறிதளவு மாறுபடுகின்றன. இங்கு FeCl2 சேர்மம் CdCl2 சேர்மத்தின் நோக்குருவில் படிகமாகிறது.

தயாரிப்பும் வினைகளும்

தொகு

அடர் ஐதரோபுரோமிக் அமிலத்துடன் சேர்ந்த மெத்தனால் கரைசலில் இரும்புத் தூள் கலக்கப்படுகிறது. இவ்வினையில் மெத்தனால் அயனிக்கரைப்பானுடன் [Fe(MeOH)6]Br2 ஐதரசன் வாயுவும் உண்டாகிறது. இந்த மெத்தனால் அணைவுச் சேர்மத்தை வெற்றிடத்தில் சூடாக்கினால் தூய்மையான இரும்பு(II) புரோமைடைத் தயாரிக்கலாம்[2]. இரும்பும் புரோமினும் வினைபுரிவதால் இரும்பு(II) புரோமைடு உருவாவதில்லை. ஏனெனில் அவ்வினையில் பெர்ரிக் புரோமைடு எனப்படும் இரும்பு(III) புரோமைடு உருவாகிறது.

இரண்டு சமப்பகுதி (C2H5)4NBr உடன் இரும்பு(II) புரோமைடு வினைபுரிந்து [(C2H5)4N]2FeBr4.சேர்மத்தைக் கொடுக்கிறது[3]. FeBr
2 சேர்மம் புரோமைடு மற்ரும் புரோமினுடன் வினைபுரிந்து செறிவான நிறங்கொண்ட கலப்பு இணைதிறன் வகை [FeBr3Br9].[4] சேர்மத்தைக் கொடுக்கிறது.

இரும்பு(III) சேர்மங்களைப் போல FeBr
2 சேர்மம் ஒரு வலிமை குறைந்த ஒடுக்கும் காரணியாகும்

மேற்கோள்கள்

தொகு
  1. Haberecht, J.; Borrmann, H.; Kniep, R. "Refinement of the Crystal Structure of Iron Dibromide, FeBr2" Zeitschrift für Kristallographie - New Crystal Structures 2001, vol. 216, p. 510. எஆசு:10.1524/ncrs.2001.216.14.544
  2. G. Winter, "Iron(II) Halides" "Inorganic Syntheses" 1973, volume 14, pages 101-104. எஆசு:10.1002/9780470132456.ch20 10.1002/9780470132456.ch20
  3. N. S. Gill, F.. B. Taylor Inorganic Syntheses 1967, volume 9, page 136-142. எஆசு:10.1002/9780470132401.ch37 10.1002/9780470132401.ch37
  4. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(II)_புரோமைடு&oldid=3763899" இலிருந்து மீள்விக்கப்பட்டது